சென்னை : ""இலங்கை அதிபர் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுபவருக்கு ஆதரவு தெரிவிப்பேன்,'' என இலங்கை எம்.பி., சிவாஜிலிங்கம் கூறினார்.
இலங்கைத் தமிழர்கள் நிலை குறித்து நேற்று நடந்த நிருபர்கள் சந்திப்பில் சிவாஜிலிங்கம் கூறியதாவது:இலங்கையில் போர் முடிந்ததாக அறிவித்து ஆறு மாதமாகியும் நிலைமை மோசமாக உள்ளது. போரின் போது மூன்று லட்சத்து 30 ஆயிரம் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். இதில் 50 ஆயிரம் பேரும், 10 ஆயிரம் விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். போரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த விவரத்தை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும்.முகாம்களில் உள்ளவர்களை தம் சொந்த இடங்களில் குடியமர்த்துவதாக அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
போரினால் பாதிக்கப்பட்டு பலர் மனநோயாளிகளாக உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை.இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுபவருக்கு ஆதரவு தெரிவிப்பேன். யாரும் தேர்தலில் நிற்காத பட்சத்தில் சுயேச்சையாக போட்டியிடுவேன். தமிழர்களின் நிலை குறித்து கூற முதல்வரை சந்திக்க பல முறை முயற்சித்தும் அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.இவ்வாறு சிவாஜிலிங்கம் கூறினார்.
---------------------------------------------------------------------------------------------------------------
உங்களைச் சந்தித்தால் தன் அரசு கவிழ்க்கப்படும் என்ற அச்சத்தில் இருப்பார் போலும். அதனால்தான் சந்திக்க வில்லை. நீங்கள் அவரிடம் கூற எண்ணுவதைச் செய்தித்தாள்களில் வெளியிடுங்கள். கண்டிப்பாகப் படித்து வினா விடை அறிக்கை அளிப்பார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக