கொழும்பு, டிச.1: உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி சந்திக்கவுள்ள னர். இந்த சந்திப்பின் போது, போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்குப் பகுதியில் மறுவாழ்வுப் பணியை மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசித்து திட்டம் தீட்டவுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் உலகம் முழுவதும் வசிக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஈழத்தமிழர்கள் பங்கேற்கவுள்ளனர். இலங்கையில் ராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வந்த 30 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் மறுவாழ்வுப் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த மறுவாழ்வுப் பணியில் பங்கேற்க உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு அந்நாட்டு சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பின் பேரில், ஈழத்தமிழர்கள் தற்போது சந்தித்து மறுவாழ்வு திட்டத்தை தீட்டவுள்ளனர்.
கருத்துக்கள்
உலக ஈழத் தமிழர்கள் சந்திப்பது மகிழ்ச்சி. ஆனால். டக்ளசு அழைப்பின் பேரில் சந்திப்பவர்கள் இனப் பற்றாளர்களாக இருக்க இயலாதே!
ஐய வினாவுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/2/2009 4:34:00 AM
12/2/2009 4:34:00 AM
இதற்கு யார் வருவார்கள்? கருணா, டக்ளஸ் இவர்களது ஆதரவாளர்கள் மட்டும்தானே அங்கு வரமுடியும். இது இலங்கையரசின் திட்டமிடப்பட்ட காய்நகர்த்தலே!
By Ganesh
12/2/2009 4:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்12/2/2009 4:33:00 AM