Last Updated :
கூவம் ஆற்றைச் சீரமைத்தல், வானூர்தி தொழிற்பூங்கா மற்றும் நிதி நகரம் அமைத்தல் ஆகிய திட்டங்கள் தொடர்பாக சிங்கப்பூர் சென்று அந்நாட்டு அமைச்
சென்னை, டிச.3: கூவம் உள்ளிட்ட நதிகளின் சீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த சென்னை நதிநீர் ஆணையம் என்ற தனி அமைப்பு ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆணையத்துக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவராக இருப்பார்.கூவம் ஆற்றைச் சீரமைத்தல், வானூர்தி தொழிற்பூங்கா மற்றும் நிதிநகரம் ஏற்படுத்துதல் ஆகிய திட்டங்கள் தொடர்பாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு சிங்கப்பூர் சென்றது. அங்கு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது அந்தக் குழு. இந்த நிலையில், தங்களது பயணம் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை விளக்கினார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்தி: கூவம் நதியின் இன்றைய நிலைக்குக் காரணமாக உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகள், அவற்றைக் களைவது, சிங்கப்பூர் நதியைப் போலவே கூவத்தையும் மாற்றியமைத்திட தேவையான நடவடிக்கைகள் பற்றி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கினார். 65 கி.மீ., தூரத்துக்கு: கூவம் உற்பத்தியாகும் இடமான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் ஏரியில் இருந்து அது கடலில் கலக்கும் இடம் வரை மொத்தம் 65 கி.மீ., தூரம் உள்ளது. இந்த தூரத்துக்கு செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் முதல்வருக்கு விளக்கப்பட்டதாக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நதிநீர் ஆணையம்: கூவம் மற்றும் சென்னையில் உள்ள மற்ற நதிகளின் சீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த முதல்கட்டமாக சென்னை நதிநீர் ஆணையம்' என்ற தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அமைப்பின் தலைவராக இருப்பார். இதில், குடிசை மாற்று வாரிய அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. அதிகாரிகள் ஆய்வு:அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கூவத்தைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கான பூர்வாங்கப் பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். கூவம் ஆற்றுப் பகுதிகளை வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்தனர். இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ""65 கி.மீ. நீளமுள்ள கூவம் நதியைத் தூய்மைப்படுத்தும் பணி பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதல்கட்டமாக, தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யும் பூர்வாங்கப் பணிகள் நடைபெறுகின்றன'' என்று தெரிவித்தனர்.
By Ilakkuvanar Thiruvalluvan
12/4/2009 6:12:00 AM
By Bala
12/4/2009 5:44:00 AM
By anvarsha
12/4/2009 5:36:00 AM
By manidhan
12/4/2009 3:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்