வெள்ளி, 4 டிசம்பர், 2009

லஞ்ச, ஊழலே விபத்துகளுக்குக் காரணம்: விஜயகாந்த்



சென்னை, டிச.3: லஞ்சம் வாங்கிக் கொண்டு போக்குவரத்து விதிமுறை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் விபத்துகளுக்கு காரணம்''என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:வேதாரண்யம் அருகில் 25 பள்ளிக் குழந்தைகளோடு 2 ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற வேன் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒரு ஆசிரியையும், 9 குழந்தைகளும் இறந்துள்ளனர். 11 குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதுபோல, ஆத்தூருக்கு அருகில் 40 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் மரத்தில் மோதி கவிழ்ந்ததில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் டிரைவரும், 4 குழந்தைகளும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று தெரிகிறது.அரசு நிர்வாகங்களில் எங்கும் லஞ்சமும், ஊழலும் தாண்டவமாடுவதே இதற்கெல்லாம் காரணம். சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது, லஞ்சம் வாங்கிக் கொண்டு வாகன உரிமம் ஓட்டுநர் உரிமம் வழங்குவது தான் விபத்துகளுக்கு காரணம்.ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவது, அதிக வேகம் மற்றும் அளவுக்கு அதிகமாக வேன்களில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றுவது ஆகியவற்றை லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் விடுவதுதான் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. போக்குவரத்துத் துறையின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு நாம் தரும் விலையே இந்த குழந்தைகளின் சாவுகள்.ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என்கிற அளவுக்கு லஞ்சமும், ஊழலும் நமது ஜனநாயக முறைக்கே சவாலாக உள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றக்கூடிய நல்ல நிர்வாகத்தை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

சொல்பவரைப்பற்றிக் கவனிக்காமல் சொல்லப்படும் கருத்தைப் பார்த்தால் இஃது உண்மைதானே! புதிய செய்தி ஒன்றையும் அவர் கூறவில்லையே! அனைவருக்கும் தெரிந்ததைத்தான் கூறுகின்றார். ஆனால் அரசிடமும் அரசியல்வாதிகளிடமும் மட்டும்தான் கையூட்டும் ஊழலும் தலைவிரித்தாடுவதாக எண்ணக் கூடாது. கட்டடப்பணிகளில், ஆயத்த ஆடைத் தையல் பணிகளில், என்று பட்டியல் போட்டால் எல்லாத் தரப்பினரும் தத்தம் நிலைகளில் ஊழலின் உறைவிடமாகவே இருக்கின்றனர். தம்மைப் பாதிக்கும் பொழுது மட்டும் பிறரின் ஊழல்களுக்கு எதிராகக் கூறுபவர்கள் தம் ஆதாயங்களுக்கு ஊழலைத் துணைக் கொள்ளும் பொழுது வாய் திறப்பதில்லை. பல ஊழல்களின் துணைகளுடன் திரைப்படம் உருவாக்கப்படும் பொழுது அவற்றைப் புறக்கணித்து வெற்றி காண முயலுவதில்லை. எனவே, ஆன்றோர்கள் ஊழலற்ற மன்பதையை உருவாக்க மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும். ஊழலுக்கான விலைகள் மக்களின் உயிரிழப்பு, உறுப்பிழப்பு, உடைமை இழப்பு என்பனதாம் என உணர்த்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/4/2009 2:28:00 AM

vaachikitta kilaviyum pallavi paaduva

By raja
12/4/2009 12:52:00 AM

Vijaykanth may be a comedian bur Eng Ramesh is super A55hole!

By RameshAH
12/3/2009 10:43:00 PM

Best Commedian vijakanth, Daily he like to enter news paper Stop to talk , go and help the childrens family if u r real leader u r stupid person Ramesh , Leader ,tamil Assiciation,Gulf Countries

By Eng.ramesh
12/3/2009 8:28:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக