செவ்வாய், 6 அக்டோபர், 2009

இந்தியா-இலங்கை கூட்டுக் கடற்படை பயிற்சி:
கொழும்பில் தொடங்கியது



கொழும்பு, அக்.5: இந்திய-இலங்கை கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கொழும்பில் திங்கள்கிழமை தொடங்கியது. 5 நாள் நடைபெறும் இப் பயிற்சிக்காக ஐஎன்எஸ் கிருஷ்ணா, ஐஎன்எஸ் சர்துல், சிஜிஸ் வருணா ஆகிய 3 இந்திய கடற்படைக் கப்பல்கள் முன்னதாக கொழும்பு சென்றன. இதில் ஐஎன்எஸ் கிருஷ்ணா-வில் ஏற்பட்ட பழுது காரணமாக பயிற்சியில் திங்கள்கிழமை ஈடுபடவில்லை என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கள்

தமிழக மீனவர்களையும் ஈழத் தமிழர்களையும் கொன்றொழித்து விட்டு எவ்வாறு பிறர் மீது பழி போடுவது என்பதுதான் முதன்மைப் பயிற்சி. புதிய எட்டப்பன்களான கருணாக்கள் பற்றி நாளைய வரலாறு படிக்கும் பொழுது கூட்டுக் கொலைகள் பற்றியும் படித்து இப்போது வாழும் நமக்கும் பழியேற்படும். என் செய்வது உரிமையற்ற அமைப்பில் வாய்மூடி வாழ்கின்றோமே! பழியேற்றுத்தான் ஆக வேண்டும்.

வேத‌னையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/6/2009 3:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக