வியாழன், 8 அக்டோபர், 2009

வாகன நெரிசலிலிருந்து மின்சாரம்: இஸ்ரேல் நிறுவனம் சாதனை



ஜெருசலேம், அக். 7: வாகன நெரிசலிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முன்னோடி கண்டுபிடிப்பை இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை நகரத்தில் வாகன நெரிசல் உள்ள பகுதிகளில் செயல்படுத்த இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது. ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உற்பத்தியாகும். ஜெனரேட்டரை இயக்குவதற்குத் தேவையான சக்தி சாலைகளில் பதிக்கப்பட்டுள்ள தளங்களிலிருந்து கிடைக்கும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஜெனரேட்டரும் மணிக்கு 2,000 வாட்ஸ் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். இவ்விதம் உற்பத்தி செய்யும் மின்சாரம் சாலையோரத்தில் வைக்கப்பட்ட பேட்டரிகளில் சேமிக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தப்படும். இந்த முன்னேறிய தொழில்நுட்பத்தை டெக்னியான் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் இஸ்ரேலிய நிறுவனம் இன்னோவாடெக் உருவாக்கியுள்ளது. 10 மீட்டர் நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் சோதனை ரீதியில் இந்தக் கருவி பொறுத்தப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. அந்தப் பகுதியை வாகனங்கள் கடந்தபோது மின்சாரம் உற்பத்தியானது. இதில் உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் தெரு விளக்குகளை எரியச் செய்ய முடியும். சாலையின் கீழ் இக்கருவி பொருத்தப்பட்டது. 2 அங்குலம் கீழாக அமைக்கப்பட்ட இந்தக் கருவியின் மேல்பகுதியில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது மின்சாரம் உருவாகும். பிúஸôஎலெக்ட்ரிக் கருவிகள் மூலம் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டதாக நிறுவனத்தின் மேலாளர் டாக்டர் லகி எட்ரி-அúஸôலே கூறினார். ஒரு கி.மீ. தூரத்துக்கு ஒரு வழித் தடத்தில் இக்கருவியைப் பொறுத்திப் பார்த்ததில் 200 கிலோவாட் மின்சாரம் உற்பத்தியானதாக அவர் கூறினார். இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் 2,500 வீடுகளுக்கு மின்சாரம் சப்ளை செய்ய முடியும். இவ்விதம் உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் தெருவிளக்குகள் மட்டுமின்றி, டிராஃபிக் சிக்னல், சாலை விதிகளை மீறுவோரைக் கண்காணிக்கும் கேமரா உள்ளிட்டவை செயல்பட இந்த மின்சாரம் போதுமானதாக இருக்கும். வெயில், மழை, குளிர் உள்ளிட்ட அனைத்து தட்ப வெப்ப நிலையிலும் இது செயல்படும். இதற்கென மிகப் பெரிய அளவில் கட்டுமானம் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்கள்

இந்த முறையை நம் நாட்டில் பயன்படுத்தினால் மிகுதியாக மின்னுற்பத்தி மேற்கொள்ளலாமே! ஆர்க்காட்டார் இசுரேல் சென்று அறிந்து வரலாம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/8/2009 3:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக