சனி, 10 அக்டோபர், 2009

டி.ஆர்.பாலு தலைமையில் திமுக அணி எம்.பி.க்கள் இன்று இலங்கை பயணம்



சென்னை, அக். 9: இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்களில் 10 பேர் அங்கு சனிக்கிழமை செல்கின்றனர்.இலங்கையில் 5 நாள்கள் தங்கியிருக்கும் அவர்கள், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட உள்ளனர். அந்த நாட்டு அமைச்சர்கள், அதிபர் ராஜபட்ச உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேச உள்ளனர்.இலங்கைத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலைமை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அந்த நாட்டு அதிபர் ராஜபட்ச அழைப்பு விடுத்தார்.திமுக அணி எம்.பி.க்கள்... அவரது அழைப்பை ஏற்று, முதல்வர் கருணாநிதி சார்பில் திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்களில் 10 பேர் இலங்கைக்கு சனிக்கிழமை செல்கின்றனர்.திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தக் குழுவில், ஏ.கே.எஸ்.விஜயன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஹெலன் டேவிட்சன் ஆகிய திமுக எம்.பி.க்களும், கே.எஸ்.அழகிரி, என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், ஜே.எம்.ஆரூண் ஆகிய காங்கிரஸ் எம்.பி.க்களும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவனும் இடம்பெற்றுள்ளனர்.முதல்வருடன் சந்திப்பு... இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவினர், முதல்வர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினர்.இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு தங்கபாலு அளித்த பேட்டி: முதல்வர் சார்பில் திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் 10 பேரை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அங்குள்ள உண்மை நிலவரங்களை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிப்பார்கள்.அதன் அடிப்படையில், முதல்வரும், நாங்களும் எங்களது கருத்துருவை மத்திய அரசிடம் அளிப்போம். எம்.பி.க்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து இந்திய- இலங்கை அரசுகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இதுகுறித்த முறையான அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்படும் என்றார் தங்கபாலு.
Click Here
கருத்துக்கள்

திமுக அணி என்ற பின் இக்குழுவை எப்படி இந்தியாவின் சார்பானதாகவோ தமிழகத்தின் சார்பானதாகவோ கூற இயலும்? தமிழக எதிர்க்கட்சிகள் வரவில்லை யெனில் தன்னார்வத் தொண்டமைப்பினர், நடுநிலையான இதழாளர்கள், மனித நேய அமைப்பினர், செஞ்சிலுவைச் சங்கத்தினர் எனப் பல அமைப்பினரைச் சேர்த்திருக்கலாமே! தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் எனக் கருதினால் நாடாளுமன்றத்தைச் சேர்நத பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்த்திருக்கலாமே! குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் பார்வையிடச் செல்வது எப்படி உண்மையறியும் பார்வையாய் அமையும்? நன்கு கவனிக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப் படுகிறார்கள் . இருப்பினும் கொலைக் கும்பலைச் சந்திக்கச் செல்வதால் இக்குழுவினர் விழிப்புடன் இருக்க வேண்டும். உணர்வுடன் பார்வையிட்டு உண்மையை உலகறியச் செய்ய வேண்டும். இவர்கள் என்ன சொன்னாலும் எதிர்க்கருத்துகள் பாயும் என்பதை உணர்ந்து நடுநிலையுணர்வுடன் பங்காற்ற வேண்டும்.செஞ்சிலுவைச் சங்கப் பொருள்களைக் கூட தமிழ மக்களிடம் சேர்க்க இயலாத தமிழக அரசும் இந்திய அரசும் இவற்றை அளிக்க மறுக்கும் சிங்கள அரசும் போடும் நாடகத்தில் அரங்கேறும் புதிய காட்சியைப் பொறுமையுடன் காண்போம்!

By Ilakkuvanar Thiruvalluvan
10/10/2009 8:19:00 AM

All SOB MPs. I dodnt understand for what they are going to SL.

By kumar
10/10/2009 7:36:00 AM

what a joke, well done DMK.............this the cover up shut the mouth of the internatinal community they are going make a statement "everthing is normal" you can delay the truth but oneday the truth will prevail

By mathan
10/10/2009 7:31:00 AM

You people criticize everything... even when god goes to sri lanka. god also can't save you because of your mentality. Change... With out india & karunanidhi and Karuna amman even 50 paise benefit will not come to you... You people talked nonsense did studpid things for 30 years under a goonda , what do you expect... Tamil Eelam ... UN, US, India and rest of the world are stupids, you guys are intelligent. God also can't save you because of your mentality.

By justice
10/10/2009 7:23:00 AM

IS THERE ARE ANY POINTS SENDING KARUNA'S DELEGATION THESE PEOPLE DOES NOT HAVE ANY GUTS I BELIEVE EUROPIAN PEACE KEEPING FORCES SHOULD SEND THERE. INDIAN POLITICIAN ARE CORRUPTION ( WHAT PART OF WORLD INDIAN PEOPLE GO THERE THEY ARE CHEATERS IT IS IN THEIR BLOOD) I AM NOT LAING ANYTHING HERE IT IS TRUE THEY SHOULD CORRECT THESE KIND OF PROBLEMS ALSO SOME SRILANKAN TAMILS SPECIALLY IN TORONTO

By dddd
10/10/2009 7:15:00 AM

இந்த எம்.பி குழு உல்லாச பயணம் சென்று திரும்பி வந்து ஒப்பற்ற தமிழின (துரோகி) தலைவர் கருணநிதிக்கும் இந்திய (துரோகி)சோனியாவுக்கும் புகழாரம் சூட்டும் வகையில் அறிக்கை விடுவார்கள். மீதியிருக்கும் ஈழ தமிழர்களை கொல்வதற்கு நல்ல அறிவுறை அளித்துவிட்டு வருவார்கள். ராஜபக்ஷேவுக்கு கொண்டாட்டம். இதற்கு இந்தியர்களின் வரி பணம் தண்டம்.

By KRISHNAN
10/10/2009 6:46:00 AM

WHY ONLY DMK & CONGRESS MPS ( PLUS THIRUMAVALAVAN) WHY NOT ALL PARTY MPS FROM TAMIL NADU ? THERE IS THE CRUX OF THE ISSUE. THESE 10 MPS WILL DANCE TO THE TUNE OF MK & SONIA. TAMILS ALL OVER THE WORLD PLEASE DONT EXPECT THAT TRUTH WILL COME OUT IN THE OPEN TO THIS WORLD THROUGH THIS VISIT

By goutham
10/10/2009 6:34:00 AM

ONE MORE SCENE IN THE DRAMA OF GENOCIDE OF EELAM TAMILS WRITTEN BY KARUNANIDHI. TAMIL NADU POLITICIANS ELLAM JOKERS ENDRU SONNAN RAJAPAKSEVIN ADIYAL SARATH FONSEKA. I THINK THEY ARE GOING TO PROVE THAT STATEMENT / OPINION ONCE AGAIN.

By goutham
10/10/2009 6:29:00 AM

Another stunt by Mr "Eddappan" Karunanithi & Co. What these MPs gonna see is what Rajapakse and Sonia want Tamil Nadu Tamils to see. It's few well kept places in the camp and these MPs gonna have red carpet welcome there. Mr "Eddappan" Karunanithi knows what is happening to Tamils. We all have seen Tamils were shot blind folded in video that is one of good examples of the situation. As long as Tamils are drama watchers, Mr Eddappan, Sonia and Rajapakse will enjoy weakining Tamils and their cause.

By Patriot - Singapore
10/10/2009 5:37:00 AM

your c.m looking for other woman in sri lanka to marry or then why your c.m sent his daughter to sri lanka . then she looking for singala man to marry or sri lankan killer rajapaksa's son to marry. any way both are winner( sri lankan rajapaksa family and your c.m family)why? both family drunk over 76000 tamil eelam human blood.wait and see very soon real blood bath come to your nation(india and sri lanka)why? we have real two friends one pakie and other one you thing and let me know.

By ravi
10/10/2009 5:36:00 AM

மண்டை ஓடு என்னவா?

By appr
10/10/2009 5:35:00 AM

Elam Tamils were killed by Prabhakaran and Rajabakshe. Don't blame Indian Leaders.

By Anbarasi
10/10/2009 5:04:00 AM

நாம் எதிர்பார்த்தது போலவே எம்.பி.க்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து இந்திய- இலங்கை அரசுகள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டன. எனவே அவர்கள் சில குறிப்பிட்ட முகாம்களுக்கே போவதற்கு அனுமதிக்கப்படுவர். தமிழர்களைக் கொன்று குவித்த சோனியா காந்தி முத்துவேலர் கருணாநிதி இருவரும் இப்போது இழவு விசாரிக்க இந்தக் குழுவை அனுப்பி வைத்துள்ளனர். தமிழரின் குருதி படிந்த இவர்களது கைகளை ஏழு கடல் தண்ணீர் கொண்டும் கழுவ முடியாது.

By Keeran
10/10/2009 4:59:00 AM

Why are they going there? Everything for Eelam Tamils is now "finished". Eelam Tamils now have "nothing". Indian MPs can taste Ceylon tea and come back with a "good story" for the media.

By Rangaraj
10/10/2009 4:34:00 AM

**குஞ்சரின் நெவிளடி: நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் நடந்த அலங்கோலம்! தலைவரின் தனிச் சிறப்பு! **ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 **யார் தவறு? - பாகம் 16: வீரத் தலைவன் எல்லாளனின் தந்தை! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் - 2 (இன்று நடந்து முடிந்த போரினால் வன்னி மக்கள் தங்களது பிள்ளைகள், உறவுகள்,..)! **அருச்சுனன் பக்கம் 13: சீமானின் "நாம் தமிழர்" இயக்கத்தின் பயங்கரமான பின்னணி! ** யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/10/2009 4:32:00 AM

வன்னிமுகாம்களைப் பற்றி மோசமான தகவல்கள் வெளிவரும் போது அதை மூடி மறைக்க இலங்கை அரசு உங்களைப் பயன் படுத்துகிறதா? * இலங்கைக்கு முகாம்களைப் பார்வையிடச் செல்பவர்களை மெனிக் பாம் முகாமின் சில பகுதிகளை மட்டும் பார்வையிட இலங்கை அரசு அனுமதிக்கிறது. மற்றமுகாம்களை உங்களால் பார்வையிட முடியுமா? * உங்கள் சொந்தத் தெரிவின்படி எந்த முகாமையாவது பார்வையிட முடியுமா? * முகாம்களில் உள்ளவர்களை உங்களால் தனிப் பட்ட ரீதியில் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிய முடியுமா? * இறுதிப் போர் நடந்த பகுதிகளில் மனிதப் புதை குழிகள் உள்ள இடங்களுக்கு உங்களால் சென்று உண்மை அறிய முடியுமா? * நீங்கள் சென்று வந்தபின் நீங்கள் செய்யும் பரிந்துரைகளை உங்கள் மைய அரசு ஏற்று நிறைவேற்றுமா? * இது வரை ஈழத் தமிழர்கள் தொடர்பாக எத்தனை கோரிக்கைகளை உங்கள் மைய அரசு நிறைவேற்றியிருக்கிறது?

By Vani
10/10/2009 4:03:00 AM

poyttu vandu unmaya sollunga ,thyavu saidu poi mattum sollatheenga ;IVARGALUDAN THIRUMAVALAVAN SELLVADAL PERUMALAVU NAMBIKKAI IRUKKIRADU,PORUTHTIRUNDU PARPPOMM

By thamilan
10/10/2009 3:31:00 AM

"அவாளோட" ஆங்கிலப் பத்திரிகையிலிருந்தும் யாராவது போறாங்களா. அவங்கதானே தமிழ்நாட்டிலே ராஜபக்ஷவோட ஏஜெண்டா இருக்கிறாங்க. அப்புறம் இவங்க அங்கே உல்லாசப் பயணம் போறாப்ல. ஐ நா போயே ஒண்ணும் பண்ணமுடியல.

By MKSamy
10/10/2009 3:24:00 AM

"Karunanidhiyaalthaan Intha prachanayae uruvaachu" Amaidhiyaaga irunthuvittu, ippodhu Aatkalai anuppugindran.

By "Kumurum Ullam"
10/10/2009 3:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக