வியாழன், 8 அக்டோபர், 2009

Front page news and headlines today

அரியலூர் : "அரியலூர் பகுதியிலுள்ள டைனோசர் படிமங்களைப் பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப் படும்' என, கலெக்டர் ஆபிரகாம் கூறினார். அரியலூரை அடுத்த கல்லங் குறிச்சியிலுள்ள சுண் ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து, 15 ஆண்டுக்கு முன், டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டது. ஜெர்மனியிலிருந்து வந்த புவியியல் ஆராய்ச்சியாளர்கள், அது டைனோசர் முட்டை என்பதை, ஆய்வு மூலம் உறுதி செய்தனர்.அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் உள்ள ஒரு ஓடையில், சேலம் பெரியார் பல்கலை புவியியல்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நடத்திய ஆராய்ச்சியில், 2 கி.மீ., பரப்பளவுள்ள அந்த ஓடைப் பகுதியில், டைனோசரின் ஆயிரக் கணக்கான முட்டை படிமங்கள், அவை முட்டையிட்ட இடங்கள், டைனோசரின் எலும்புத் துண்டுகள், அவை வாழ்ந்த காலத்திலிருந்த நன்னீர் ஏரி, அதற்கு அருகிலுள்ள ஓடை ஆகியவற்றை கண்டறிந்தனர்.இந்தியாவின் தேசிய சொத்தாகக் கருதி பாதுகாக்க வேண்டிய அந்த இடத்துக்கு, ஆராய்ச்சி செய்ய வரும் பலரும், அங் குள்ளடைனோசர் முட்டைகள் மற்றும் அவற்றின் எலும்பு உள்ளிட்ட பாகங்களை சிதைத்து சேதப்படுத்துவதுடன், அபகரித்து செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அப்பகுதி மக்கள் சிலர், டைனோசர் படிமங்களை திருடிச் சென்று விற்பதாகவும் சர்ச்சை எழுந்தது. அவ்விடத்தை பார்வையிட்ட கலெக்டர் ஆபிரகாம், அவற்றை பாதுகாக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: கீழப்பழுவூர், வாரணவாசி, கல்லமேடு ஆகிய இடங்களும், கடல் ஆழமான பகுதியாக இருந் ததற்கான தடயங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த பகுதிகளை ஒருங்கிணைத்து, பாசில் பூங்கா நிறுவ, திருச்சி பாரதிதாசன் பல்கலை முன்வந்துள்ளது. அதற்கான நிதிஉதவியை மத்திய அரசு வழங்கும். பாசில் படிமங்கள் நிறைந் துள்ள செந்துறை ஓடை பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி, தலைமைச் செயலர் விடுத்த உத்தரவை அடுத்து, இந்த ஓடையின் இருபுறமும் கம்பி வேலி போட்டு பாதுகாக் கப்படும். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையில், 24 மணிநேரமும் வருவாய்துறை மற்றும் போலீசார் இணைந்து செயல்படுவர். இந்த ஓடையின் போக்கை மாற்றி, பாதுகாக்கப்பட்ட இடமாக, இந்த ஓடை அறிவிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக