ஜோகன்னஸ்பர்க்:தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில், மகாத்மா காந்தி தங்கியிருந்த வீட்டை பிரான்ஸ் சுற்றுலா நிறுவனம் வாங்கியுள்ளது.தென்னாப்ரிக்காவுக்கு மகாத்மா காந்தி சென்றிருந்த போது, ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆர்சர்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டில் தான் தங்கியிருந்தார். இதை, காந்தியின் நம்பிக்கைக்கு உரியவரும், கட்டடக்கலை நிபுணருமான ஹெர்மன் கெலன்பாக் என்பவர் வடிவமைத்து இருந்தார்.
இந்த வீட்டில் தான் இருவரும் 1908ம் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் தங்கியிருந்தனர். அந்த வீட்டின் உரிமையாளரான நான்சிபால், காந்தி தங்கியிருந்த வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தார். நான்சிபால், கேப்டவுன் நகருக்கு குடிபெயர திட்டமிட்டுள்ளதால், இந்த முடிவை எடுத்தார்.வரலாற்று புகழ் பெற்ற இந்த வீட்டை வாங்க காந்தியின் பேத்தி கீர்த்தி மேனன் திட்டமிட்டிருந்தார்.இதற்கிடையே இந்த வீட்டை, பிரான்ஸ் சுற்றுலா நிறுவனமான "வாயேஜர் டூ மோண்டி' ஒரு கோடியே 88 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக