செவ்வாய், 6 அக்டோபர், 2009

தாய்மொழியில் ரயில்வே தேர்வு எழுதலாம்: அமைச்சர் மம்தா அறிவிப்பு



சிலிகுரி, அக். 5: இனி ரயில்வே தேர்வுகளை அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சிலிகுரியில் புதிய ரயில் சேவையைத் திங்கள்கிழமை தொடங்கிவைத்து மம்தா பானர்ஜி கூறியதாவது: சிலிகுரியில் ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) மையம் சில மாதங்களில் செயல்படத் தொடங்கும். நாட்டின் 21-வது மையமாகும் இது. இனி அவரவர் தாய்மொழியிலேயே ரயில்வே தேர்வுகளை எழுதலாம் என்றார்.

கருத்துக்கள்

பாராட்டுகள். இதுபோல் மத்திய அரசு நடத்தும் அனைத்துத் தேர்வுகளையும் அவரவர் தாய்மொழியில் எழுத உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றாகக் கோயம்புத்தூரில் உள்ள படைப் பள்ளியான சைனிக் பள்ளி போன்று நாடெங்கும் உள்ள பள்ளிகளில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்திலதான் தேர்வு எழுத வேண்டும். இந்தி தெரிந்தவர்கள்தாம் படைத்துறைக்குத் தகுதியானவர்கள் என்று மத்திய அரசு செயல்படுவது நமக்கெல்லாம் இழுக்கல்லவா? தமிழ் தமிழ் என்று முழங்குவோர் இதுபற்றி யெல்லாம் கவலைப்படுவதில்லை. அவரவர் குடும்பச் சிக்கல்களில் கருத்து செலுத்தவே நேரம் போதாத பொழுது இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போகிறது? மம்தாவை அனைத்துத் துறையினரும் பின்பற்றி மண்ணின் மொழிகளை மதிக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/6/2009 2:54:00 AM

ரைல்வே தேர்வுகள் இனி அவரவர் தாய் மொழியில் எழுதலாம் என்ற முடிவு படி தமிழ் மொழியிலும், எழுதலாம் என்பது , தமிழ் மொழிக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும். வாழ்க! தமிழ். அமைச்சர் மம்தா பநர்ஜி அவர்களுக்கு அனைத்து தமிழர்களின் நன்றி ! நல்வாழ்துக்கள்

By Ibnusalih,abudhabi,uae.
10/6/2009 12:11:00 AM

excellent

By Moorthy
10/5/2009 10:10:00 PM

Congrats! Good move Mamta. Keep it up. Also instruct to use local languages in all the Trains, Flights.

By keeran
10/5/2009 8:37:00 PM

நல்ல முயற்சி பாராட்டுக்கள் மம்தா அவர்களே. அப்படியே மக்களவையில் அழகிரிக்காக கொஞ்சம் குரல் கொடுங்களேன்!?

By மங்கைதாசன்
10/5/2009 8:31:00 PM

very good

By ravi
10/5/2009 8:15:00 PM

mamtha done a good job. congrats to mamtha

By suresh.s, qatar
10/5/2009 7:53:00 PM

WELCOME WELCOME MAM MAMTHA CONGRATULATIONS................

By tamilan
10/5/2009 7:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக