திங்கள், 5 அக்டோபர், 2009

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கூடாது :
பா.ஜ.க. கருத்து



சென்னை கமலாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பேசுகிறார் மாநிலத் தலைவர் இல. கணேசன். உடன் (இடமிருந்து) முன்னாள் மாநிலத் தலைவ
சென்னை, அக். 4: தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் கொடுக்கக் கூடாது என்று பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா கூறினார். இலங்கையில் தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் ராஜபட்சவுக்கு துணைப் போவதற்கு இந்த நிலைப்பாடு சாதகமாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் இல. கணேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாகத் தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல உள்ளது. சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது என்றார் அவர். செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் மேலும் கூறியது: இலங்கையில் மின் முள்வேலிக்குள் அடைபட்டிருக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிய பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி. குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இலங்கைத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும். இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை தன் கைவசம் வைத்துக் கொண்டு இந்தியாவுக்குள் சீனா அடிக்கடி ஊடுருவி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக ஊடுருவல் இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அரசைக் கண்டிக்கிறோம். சமச்சீர் கல்வித் திட்டத்தில் மாணவர்கள் விரும்பும் அனைத்துப் பாடத் திட்டத்தையும் தமிழக அரசு தயாரிக்க வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து ஆலயங்களை தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். பசுவதைத் தடைச்சட்டம் தமிழகத்தில் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும். மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் சேமநல நிதியில் 3 முதல் 5 சதவீதத்தை பங்குச்சந்தையில் போடுவது குறித்தத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் எச். ராஜா.

கருத்துக்கள்

சரியான கருத்தைத் தெரிவிக்கும் பாசக விற்குப் பாராட்டுகள்.தமிழ்ப்பகை கொண்ட இந்தியம்ஈழத் தமிழர்களை எங்கும் குடியுரிமை கிடைக்காமல் நாடற்றவர்களாக ஆக்குவதில்தான் கவனம் செலுத்துமே தவிர பிற வெல்லாம் இழுத்தடிக்கும் திசை திருப்பும் போக்கே ஆகும்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2009 3:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக