வியாழன், 8 அக்டோபர், 2009

ஜோர்டானில் வீட்டுவேலை செய்யும் இலங்கையைச் சேர்ந்த 14 பேர் தற்கொலை முயற்சி



அம்மான், அக். 7: ஜோர்டான் நாட்டில் வீட்டு வேலை பார்க்கும் இலங்கையைச் சேர்ந்த 14 பேர் இந்த ஆண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இவர்கள் அனைவருமே மோசமான பணிச்சூழல் காரணமாக உயர்ந்த கட்டடங்களில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்றதாக ஜோர்டான் நாட்டின் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டானில் கடந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த 8 பேர் தற்கொலை செய்ய முயன்றனர். ""வீட்டு வேலையில் அமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டவர்களை மனிதர்களாகவும், கெüரவத்துடனும் நடத்த வேண்டும். அவர்களது உரிமையை நசுக்கக்கூடாது. இதுபோன்ற செயலை அரசு ஒரு போதும் சகித்துக்கொள்ளாது'' என்று ஜோர்டான் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் காஸி ஷ்பெய்காத் தெரிவித்தார். வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி, சிறந்த பணிச்சூழல் அமைத்துக் கொடுத்தல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காகத் தனி ஒழுங்குமுறை விதிகளை வகுப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இந்த ஒழுங்குமுறை விதிகளை வெளிநாடுகளில் இருந்து வீட்டுவேலைக்கு தொழிலாளர்களை தேர்வு செய்யும் நிறுவனங்களை பின்பற்ற வைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தங்களது உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் காஸி ஷ்பெய்காத் தெரிவித்தார். ஜோர்டானில் 70,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வீட்டு வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 20,000-30,000 பேர் இந்தோனேசியர். 35,000 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள்

கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போ்னால் அங்கு ஒரு கொடுமைவந்து சிங்கு சிங்கு என்று ஆடுச்சாம். பாவம் ஈழத் தமிழர்கள் ஏதிலியாக அயல்நாடு புகுந்தாலும் நிம்மதியுடனும் வாழ இயலவில்லையே! இதற்கெல்லாம் மூலக் காரணமானவர்களைக் கடவுள் என்ன செய்யப் போகிறார்? நாம்தான் என்ன செய்யப் போகிறோம்? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/8/2009 3:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக