வியாழன், 8 அக்டோபர், 2009

வேதியியல்: தமிழருக்கு நோபல்



நோபல் பரிசு கிடைப்பதற்கு ஆய்வுக்கூடத்தில் என்னுடன் பணியாற்றிய சக ஆய்வாளர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் இந்த உயரிய பெர
லண்டன், அக். 7: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (57) உள்ளிட்ட 3 பேர் 2009-ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை கூட்டாக பெறுகின்றனர். அதற்கான அறிவிப்பை நோபல் கமிட்டி வியாழக்கிழமை வெளியிட்டது.சர் சி.வி.ராமன், எஸ். சந்திரசேகர் ஆகியோரை அடுத்து நோபல் பரிசு பெறும் 3-வது தமிழர், ஏழாவது இந்தியர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.வெங்கி என செல்லமாக அழைக்கப்படும் வெங்கட்ராமன் வெளிநாடு வாழ் இந்தியராவார். லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள மூலக்கூறு உயிரியல் (எம்ஆர்சி) ஆய்வுக் கூடத்தில் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் இ.ஸ்டீட்ஸ் (யேல் பல்கலைக்கழகம்), இஸ்ரேலைச் சேர்ந்த யெடா இ.யோனத் (வைஸ்மான் அறிவியல் நிறுவனம், ரெஹோவோட்) ஆகியோர் இவருடன் இந்த விருதை பகிர்ந்து கொள்ளும் மற்ற இருவர்.சிதம்பரத்தில் 1952ம் ஆண்டு பிறந்தவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பியூசி படித்தார். 1971ல் குஜராத்தில் உள்ள பரோடா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பிஎஸ்சி பட்டம் பெற்றார். அதன் பின்னர் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்று 1976-ல் அமெரிக்காவில் உள்ள ஒஹையோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அங்கேயே குடியுரிமையும் பெற்றார். அதன் பின்னர் உயிரியல் ஆய்வுக்கு தனது நாட்டத்தை திருப்பினார். சான் டீகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார். அதே வேளையில் அவர் உயிரி வேதியியல் விஞ்ஞானி மோரிசியோ மோன்டலுடன் சேர்ந்து ஆய்வில் ஈடுபட்டார்.யேல் பல்கலைக்கழகத்திலும் அவர் ஆய்வு மாணவராக இருந்துள்ளார். பல்கலைக்கழக ஆய்வு நூல்களில் இவரது கட்டுரைகள் நிறைய வெளியாகி உள்ளன.ராமகிருஷ்ணன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து ரிபோசோம் பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரை பிரபல நேச்சர் இதழில் 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகி உள்ளது.அதே ஆண்டு செப்டம்பர் 21 இதழில் ராமகிருஷ்ணனின் இரு கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ப்ரூக்ஹேவன் தேசிய ஆய்வகத்திலும் ராமகிருஷ்ணன் பணியாற்றி உள்ளார்.1995ல் யூடா பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் துறை பேராசிரியராக சேர்ந்தார். அங்கு அவர் புரதம்- ரிபோநியூக்ளிக் அமிலம் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அதையடுத்து அவர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜில் உள்ள மூலக்கூறு உயிரியல் எம்ஆர்சி ஆய்வகத்துக்கு மாறினார்.

யெடா இ.யோனத்இஸ்ரேலைச் சேர்ந்த யோனத், ஜெருசலேமில் 1939ல் பிறந்தார்.வைஸ்மான் அறிவியல் கல்லூரியிலிருந்து 1968ல் எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபி பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார்.தாமஸ் ஸ்டீட்ஸ்அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டீட்ஸ் (69) விஸ்கான்சின் மாகாணம் மில்வாகியில் 1940ம் ஆண்டு பிறந்தார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலிருந்து 1966ல் உயிரி வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றார். ரிபோசோம் கட்டமைப்பும் புரத உற்பத்தியில் அதன் பங்குஇவர்கள் செல்களில் உள்ள ரிபோசோம்களின் பணி மற்றும் கட்டமைப்பு பற்றி ஆய்வு செய்துள்ளனர். செல்களில் ரிபோசோம்கள் புரதத்தைத் தயாரிக்கின்றன. இந்தப் புரதங்கள்தான் உடல்கூறு வேதியியல் பணியை கட்டுப்படுத்துகின்றன. ரிபோசோமை உருவாக்கும் ஆயிரக்கணக்கான அணுக்கள் ஒவ்வொன்றின் இட அமைப்பையும் படம் பிடிக்க இந்த மூவரும் எக்ஸ் ரே கிரிஸ்டலோகிராபி முறையைப் பயன்படுத்தியுள்ளனர்.அணு நிலையில் ரிபோசோம்கள் பார்ப்பதற்கு எப்படித் தெரிகின்றன, எப்படி அவை செயல்படுகின்றன என்பதை இவர்கள் காட்டியுள்ளனர்.
ரிபோசோம்களில் எப்படி வெவ்வேறு ஆன்டிபயாடிக்குகள் ஒட்டிக்கொள்கின்றன என்பதை முப்பரிமாண மாதிரிகள் மூலம் இந்த மூவரும் காட்டியுள்ளனர்.பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதற்கான ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தயாரிக்க இவர்களது கண்டுபிடிப்பு பயன்படுகிறது என பரிசுக் கமிட்டி அறிவித்துள்ளது.

கருத்துக்கள்

தினமணி சார்பில் வாழ்த்துகள்! நோபள் பரிசும் பிற உயரிய விருதுகளும் பரிசுகளும் தமிழ் நாட்டவர் பெறும் எண்ணிக்கை பன்மடங்காக உயரட்டும்! தாய்மொழி வழிக் கல்வியே அறிவினை உயர்த்தும் ஆயுதம் என்பதை உணர்நது தமிழ் வழியிலான கல்வியை மட்டுமே நாம் அளிப்போம்! பாராட்டுகளுடனும் வேண்டுகோளுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/8/2009 2:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
--------------------------------------------------------------------------------------------------

Front page news and headlines today

ஸ்டாக்ஹோம் : நூறு கோடி இந்தியர்கள் பெருமைப்படும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த, சிதம்பரத்தில் பிறந்து தற்போது, அமெரிக்காவில் வாழும் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் உட்பட மூவருக்கு, இந்த ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு தரப்படுகிறது.



தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோநாத் ஆகியோர், இந்த ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகம், சிதம்பரத்தில் கடந்த 1952ம் ஆண்டு பிறந்தவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இவர், கடந்த 1971ம் ஆண்டு, பரோடா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். கடந்த 1976ம் ஆண்டு, ஓகியோ பல்கலைக் கழகத்தில், இயற்பியல் துறையில், பிஎச்.டி., பட்டம் பெற்றார். இவர், இயற்பியல் வல்லுனராக தன் வாழ்க்கையை துவக்கினார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், உயிரியல் துறைக்கு மாறினார் ராமகிருஷ்ணன். அங்கு அவர், வகுப்புகள் நடத்தியதோடு, அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மவுரிசியோ மாண்டல் என்பவருடன் இணைந்து, ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.



ராமகிருஷ்ணன், கடந்த 1995ம் ஆண்டு, உட்டா பல்கலைக்கழகத்தில், உயிர் வேதியியல் துறை பேராசிரியராக சேர்ந்தார். அங்கு அவர், ஆர்.என்.ஏ.,( ரிபோ நியூக்ளிக் அமிலம் )வில் உள்ள புரோட்டீன்கள் குறித்து ஆய்வு செய்தார். "இ-கோலி' யில் மிகச்சிறிய மூலக்கூறான "ரிபோசோமால்' சப்யூனிட் குறித்த சிறப்பான ஆய்வு தான் இப்பரிசு பெறக் காரணமாக அமைந்தது. கடந்தாண்டு அவர், பிரிட்டன், கேம்பிரிட்ஜில் அமைந்துள்ள எம்.ஆர்.சி., மாலிக்குலார் பயாலஜி ஆய்வகத்தில், சேர்ந்தார். அங்கு அவர் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இவருக்கு, இந்தாண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. இவருடன், இதே ஆய்வு மேற்கொண்ட தாமஸ் ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோநாத் ஆகியோரும், இந்த நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.



இதுகுறித்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரிபோசோமில் உள்ள ஆயிரக்கணக்கான அணுக்களை கண்டறிய, இம்மூன்று விஞ்ஞானிகளும், எக்ஸ்-ரே, கிரிஸ்டலோகிராபி முறையை பயன்படுத்தி உள்ளனர். வாழ்க்கைக்கு மிக முக்கியமான ரிபோசோம் குறித்து, இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், புதிய வகை ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தயாரிக்க வழிவகுக்கும்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், டைனமைட் தொழிலதிபராக இருந்த, ஆல்பிரட் நோபல் எழுதிய உயிலின் படி, அறிவியல் மற்றும் அமைதிக்காக, கடந்த 1901ம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன் பின், கடந்த 1969ம் ஆண்டு முதல், சுவீடன் மத்திய வங்கி, பொருளாதார துறைக்கான நோபல் பரிசு வழங்கத் துவங்கியது.



பள்ளியில் இருந்து விஞ்ஞான ஆர்வம்: விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தந்தையும், தாயும் விஞ்ஞானிகள், இவர் தன்னைப் பற்றிக் கூறும் போது, "விவசாயி மகன் எப்படி விவசாயியாக இருப்பாரோ அது போல, எனக்கு விஞ்ஞான ஆர்வம் உண்டு. பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆர்வம் காரணமாக, விஞ்ஞானத்தில் ஈர்க்கப்பட்டேன். பெற்றோர், டாக்டர் ஆக விரும்பினர். ஆனால் இயற்பியல், அதற்குப் பின் வேதியியல் ஆய்வில் ஈர்க்கப்பட்டேன்' என்று கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி. ராமனுக்கு அடுத்தபடியாக விஞ்ஞான ஆய்வில் நோபல் பரிசு பெற்று சாதனை படைத்திருக்கிறார் ராமகிருஷ்ணன். சிதம்பரத்தைச் சேர்ந்த இவர், குஜராத்தில் உள்ள பரோடா பல்கலையில் இயற்பியல் படித்ததற்கு பின் வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்காக சென்று தற்போது, புகழேணியில் உயர்ந்து நிற்கிறார்.

நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
Congrgulations to Dr.V. Ramakrishnan

It is a great achievment. It is proud moment for India and a valuable tribute to Tamilnadu state.
Our Government should hounour him. He should
visit our country and share his experiance in genetic energy for the growth this science .
His contributions will boost the growth of genetic engineering.
May god bless him with many more success.
by a.g. narayanan,Ethiopia 10/8/2009 12:19:37 AM IST
Really haapy and congrats to Mr.Venky... we indian proud of u....
by A shankar,India 10/8/2009 12:13:35 AM IST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக