செவ்வாய், 19 மே, 2009

புலிகளுக்கு எதிரான சண்டையில் வெற்றி பெற்றுவிட்டதால் மட்டுமே அங்கு முழு அமைதி ஏற்பட்டுவிடாது: நார்வே

தினமணி
First Published : 19 May 2009 10:01:00 PM IST


ஆஸ்லோ, மே 18: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் வெற்றி பெற்றுவிட்டதால் மட்டுமே அங்கு முழு அமைதி ஏற்பட்டுவிடாது என்று எச்சரிக்கிறார் நார்வே நாட்டு அமைச்சர் எரிக் சோலிம்.

இலங்கையில் தமிழர்களும் சம உரிமைகளுடனும் சலுகைகளுடனும் நடத்தப்பட வேண்டும். அவர்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்து வசதிகளையும் பெற்று சிங்களப் பகுதிகளுக்கு இணையாக வளர்ச்சி பெற வேண்டும். கல்வி, வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதிகள் ஒரே நிர்வாக பூமியாக நிர்வகிக்கப்பட வேண்டும். இவற்றைச் செய்து முடிக்காதவரை இலங்கையில் ஏற்படும் அமைதி நிலையானதாக இருக்க முடியாது என்றார் எரிக் சோலிம்.

இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானத் தூதுவர்களாக முழு அக்கறையோடு செயல்பட்டனர் நார்வே நாட்டவர். அங்கு ராணுவத்தின் நடவடிக்கைகள் மும்முரமாகத் தொடங்கிய பிறகு தமிழ் மக்கள் படும் துயரங்களை நேரில் கண்டு உருகி, அதற்காகத் தங்களால் இயன்ற வகையில் சர்வதேச அரங்குகளில் குரல் எழுப்பினர்.

இந் நிலையில் ஆஸ்லோ நகரில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டது. அதையடுத்து இலங்கையின் உள்விவகாரத்தில் தேவையின்றி தலையிடுவதாகவும் தமிழர்களுக்கு மட்டும் சார்பாக நடப்பதாகவும் கூறி, சமரசத் தூதராக இனிச் செயல்பட வேண்டாம் என்று நார்வேயை ஒதுக்கியது இலங்கை அரசு.

கருத்துக்கள்

உண்மையாக மனித நேயத்துட்ன் பாடுபட்ட நார்வேயைப் புறக்கணிக்குமாறு நாராயணன் சொன்னதால்தான் சிங்களக கொடுங்கோல் அரசும் நார்வேயை அமைதிப் பேச்சில் இருந்து வெளியேற்றியது. இந்த ஒரு நிகழ்வே இந்தியாவின் திட்டமிட்டச் சதியை உலகிற்கு உணர்த்தியும் உலகம் உறங்கியதே! மீளாத் தூக்கத்தில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை ஆழ்த்தி விட்டதே! இனி சிங்கள அரசு சோனியா அரசைப் புறக்கணித்த பின்பு ஆவது மூக்குடைபட்டு அழுதால் சரி.அமைதியை இழந்த இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2009 4:13:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக