புதன், 20 மே, 2009

மேதகு பிரபாகரன் பற்றிய தினமலர் செய்தியும் கருத்துகளும்

தினமலர்
வைகாசி ,6, விரோதி வருடம்
Updated : 03:18 hrs IST புதன் ,மே,20, 2009


பிரபாகரன் சுட்டுக் கொலை: தப்பி ஓடும் போது சுற்றிவளைத்ததாக இலங்கை ராணுவம் அறிவிப்பு; பிரபாகரன் மகன் சார்லஸ் உட்பட முக்கிய தளபதிகளும் கொலை

மே 19,2009,00:00 IST

கொழும்பு: இலங்கை ராணுவத்தின் முற்றுகையிலிருந்து தப்பி ஓடும்போது, விடுதலைப் புலித்தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார். ராணுவத்துடன் நடந்த சண்டையில் புலித்தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி உட்பட, அந்த அமைப்பின் முக்கியத் தளபதிகளும் மரணம் அடைந்தனர். இந்தத் தகவலை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.


இலங்கையில், கடந்த 16ம் தேதி புலிகளின் கைவசம் இருந்த கடைசி கடற்கரைப் பகுதியையும் ராணுவம் கைப்பற்றியது. இதனால், இங்குப் பதுங்கியிருந்த பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் அமைப்பின் தலைவர்கள் தப்பிச்செல்ல வழி இல்லாமல் போனது. நேற்று முன்தினம் ஜோர்டானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை அதிபர் ராஜபக்ஷே, "சண்டையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர்; சண்டை முடிவுக்கு வந்துவிட்டது' என அறிவித்தார். இதை புலிகளும் ஒப்புக் கொண்டனர். புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த எஞ்சிய 50 ஆயிரம் அப்பாவி தமிழர்களும் மீட்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.


பிரபாகரன் சுட்டுக்கொலை: நேற்று அதிகாலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சதுர கிலோ மீட்டருக்கும் குறைவான பகுதியில் இலங்கை ராணுவம் இறுதிக்கட்ட தாக்குதலை நடத்தியது. இந்தச் சண்டையில் புலிகளின் முக்கியத் தளபதிகள், நடேசன், புலித்தேவன், இளங்கோ, ரமேஷ், சுந்தரம் மற்றும் கபில் அம்மான் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. பிரபாகரனின் மகனும், புலிகளின் வான்படைத் தலைவருமான சார்லஸ் அந்தோணியும் கொல்லப்பட்டதாகவும், அவரது சடலத்தைக் கைப்பற்றியதாகவும் ராணுவம் அறிவித்தது. இந்தத் தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே விடுதலைப் புலித்தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.


இலங்கை அரசு "டிவி'யில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டதாவது: இன்று(நேற்று) அதிகாலை புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்து, தாக்குதல் நடத்தினர். கடும் சண்டைக்கு இடையே புலித்தலைவர் பிரபாகரன், அங்கு நின்றிருந்த சிறிய வேன் ஒன்றில் ஏறி, சண்டை நடக்கும் பகுதியிலிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்றும் அங்கிருந்தும் வேகமாகக் கிளம்பியது. இதையடுத்து, ராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், பிரபாகரன் கொல்லப்பட்டார். அவருடன் தப்பிச் செல்ல முயன்ற புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கடற்பிரிவுத் தலைவர் சூசை ஆகியோரும் கொல்லப்பட்டனர். இவ்வாறு, "டிவி'யில் தெரிவிக்கப்பட்டது.


பிரபாகரன் கொல்லப்பட்டதை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நானயக்கராவும் உறுதிப்படுத்தினார். அவர் கூறியதாவது: புலிகள் வசம் இருந்த அனைத்துப் பகுதிகளையும் மீட்டுள்ளோம். பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. சண்டையில் பிரபாகரனுடன் சேர்த்து 250 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. உளவுப்பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இவ்வாறு உதய நானயக்கரா கூறினார்.


பலியான பிரபாகரனின் உடலில் தீக்காயங்கள் இருப்பதாகவும், அவர் தப்பிச் செல்ல முயன்ற வாகனத்தில் ராக்கெட்கள் இருந்ததால், அது வெடித்துச் சிதறியதன் காரணமாக தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் கிடைத்ததை அடுத்து, கொழும்பு நகரில் பொதுமக்கள் கொண்டாட்டங்களில் இறங்கினர்.


"விடுதலைப் புலித்தலைவர் பிரபாகரனும், அந்த அமைப்பின் மற்ற மூத்த தலைவர்களும் கொல்லப்பட்டதை அடுத்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது' என, இலங்கை அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான வெற்றி குறித்து அதிபர் ராஜபக்ஷே, இன்று இலங்கை பார்லிமென்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார். அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் விக்ரமசிங்கே பாராட்டு தெரிவித்துள்ளார். பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை இந்திய அரசின் வெளியுறவுத் துறையும் உறுதி செய்தது.


இறந்தது யார்? யார்?


இலங்கை ராணுவத்துடனான சண்டையில் நேற்று பலியான விடுதலை புலி அமைப்பின் முக்கிய தலைவர்கள் பற்றிய விவரம்:


1.பிரபாகரன் (விடுதலை புலிகள் தலைவர்)
2. நடேசன்......(அரசியல் பிரிவு தலைவர்)
3. பொட்டு அம்மான்(உளவு பிரிவு தலைவர்)
4.சூசை .......(கடற்பிரிவு தலைவர்)
5. புலிதேவன் (அமைதி செயலக தலைவர்)
6. ரமேஷ்..... (தற்கொலை படை தலைவர்)
7. சார்லஸ் அந்தோணி(வான்படை மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர்)
8. இளங்கோ.......(போலீஸ் பிரிவு தலைவர்)
9. சுந்தரம்......(மூத்த தலைவர்)
10. கபில் அம்மான் (மூத்த தலைவர்)

More Picture >> Html Format | Flash Format
நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
More Picture >> Html Format | Flash Format

மின்னஞ்சல் | | Bookmark and Share


வாசகர் கருத்து உங்கள் கருத்தை ஒலிப்பதிவு செய்ய...
உங்கள் கருத்துக்களை வெளியிட...

Do not regret for this terrorist. He killed our former Prime Minister in our own country. We lost many well trained IKPF personnel. Their death count was more than the total of all the three wars we had with pakistan. If any body talks supporting Prabakaran and LTTE he is a traitor.
by Mr Sridharan,United States
Posted on மே 19,2009,22:05 IST

புரட்சியாளன் புதைக்கப்படுவதில்லை, மாறாக விதைக்கப்படுகிறான்
by G Nalan,India
Posted on மே 19,2009,19:21 IST

We are loosing one great leader,great hero of tamilians. It is realy big loos for us. We can never conpensate this kind of leader. We should solute him.
by R MANIVANNAN,India
Posted on மே 19,2009,19:04 IST

Guys,
see the face of prabhabakarn this was made by singal army by modifying some other person face.
How a war dead person face looks like beauty barlour make up face.
he will come back again and lead the tamil elam
by a krishna,India
Posted on மே 19,2009,19:00 IST

You are a historical leader...We salute your leadership quality...Here no one born as you like...
by S Rajesh,India
Posted on மே 19,2009,15:58 IST

WE SALUTE YOU Mr.Prabakaran. Rare to see a leader like you. Soon Sri lanka is going to learn a lesson for this. God is watching everything politly. people can forget all these. god never forget anything.

Onrey engal kulamenbom. oru thai makkal naam enbom.
by Mr Veeratamilan,India
Posted on மே 19,2009,15:53 IST

We feel ashame as a Tamilian for not saved a real hero Prabhakaran ... '' Tamil Eni Mella Sagum ''
by M Priya,India
Posted on மே 19,2009,15:52 IST


DIFFICULT TO BELIEVE, I AM SURE WITHIN SHORT SPAN OF TIME WE WILL HEAR ''THE GREATEST LEADER OF WORLD TAMILS'' VOICE...
He is not an Ordinary Person...Very Unfortunately he born as Tamil...
History Will not Forgive Karunanidhi & Congress Sonia Gandhi...

Today But they can Kill Tamils, They CAN NOT KILL ''TAMILS FREEDOM STRUGGLE''

The Day will come for Tamil Eelam , it is not far away...
and prefer Tamil Eelam not to have any Diplomatic Relations with India.

''Real Hero in this Century''...Entire World has seen you..
You Made Tamils Proud..You made the World''s best,Powerful, Intellect Army...

YOU DONOT HAVE DEATH FOR EVER..YOU WILL BE LIVING IN ALL TAMILS HEART FOR EVER..
NOBODY CAN KILL YOU , EXCEPT YOU...

I SINCERELY SALUTE...SALUTE...SALUTE...

MALARGA EELAM..VAALGA PRABHAKARAN...
by L UDHAYAKUMAR,India
Posted on மே 19,2009,15:26 IST

Srilankan peoples may become peaceful
by a vetrivel,India
Posted on மே 19,2009,15:20 IST

வைகோ, நெடுமாறன் போன்ற வியாபாரிகளை நம்பி ஒரு மாவீரன் மடிந்தான்

ஹான்பில் மோகன்

by P Mohanraj,India
Posted on மே 19,2009,15:09 IST


we read about Cheran, Cholan and Pandian in history but We seen the real hero in our life Time.
He died with his son for his own people .Just compare this situation to tamilnadu Politics. Betrayal is not common in Tamil race. Now both politics and Tamil are dirty words and I lost my address forever.
by m mohan,India
Posted on மே 19,2009,13:57 IST

Still i cant believe the real tamilan is dead..

Srilankan''s are going to pay a very big amount for this...very soon
by S Sathishkumar,India
Posted on மே 19,2009,13:53 IST

நீ வீழ்த்தப்படவில்லை விதைக்கப்பட்டுலாய் .....விரைவில் எழுவாய்...
by N Balamurugan,India
Posted on மே 19,2009,13:17 IST

சிங்களகாடையரால் கொலைவெறியாட்டம் 9 விடுகள் உடைப்பது 13 பேர் காயம் தமிழகமே எங்களுக்கு என்று இருந்த ஆதரவு நிங்கள் மட்டும்தான் கடைசியில் நிங்களும் கைவிட்டிர்கள் 10 நாட்களூக்கு முன் இலங்கை அரசு கூறியது 15000 மக்கள்தான் பாதுகாப்பு வலையத்தில் என்று இப்பொழுது சொல்லுகின்றார்கள் 50000 மக்கள் றாணுவத்தின் கட்டுப்பாட்டில் 35000 எங்கிருந்துவந்தார்கள் உண்மை என்னவனில் 1.65000 மக்கள் இருந்தார்கள் 1.15000 மக்கள் படுகொலை கடைசிவரைக்கும் நின்று போராடிய போரளிகளையும் மக்களையும் பாதம் தொட்டு வாணங்குவொம்.....................................(5 தடவை இறந்துபிறந்துவிட்டான் எம் தலைவன் இனி தமிழ் ஈழம் கிடைக்கும் வரைக்கும் தலைவன் இருப்பான் ஒன்றுபட்டால் உண்டு வழ்வு )
by by thamilmaravan,Sri Lanka
Posted on மே 19,2009,12:58 IST

My deepest Condolence with tears for every dareable tamil freedom fighters. Their soul is peacefull. No word for your dare death.
by sp poosaidurai,India
Posted on மே 19,2009,12:47 IST

I am very happy to know that Prabhakaran is still alive!!!. I was really shocked when I heared the false news about his death. Nothing problem..... This is a small time period for taking REST. We can not not be covered by RUST! Take rest and come come back to war front. I strongly believe that Tamil Eelam will be formd soon.
by Tha Thayumanavan,India
Posted on மே 19,2009,12:34 IST

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர்
by t TAMILAN,Russia
Posted on மே 19,2009,12:19 IST

Dear Tamila,
Yes....Prabhakaran is shot dead. But Aybody had known that the 4 years old would come for struggle of Tamilan''s Liberty ..... didn''t know... Ya..By the same way, Youngsters will come to lead them .Hence oneday Srilanka again wil meet a powerful but stranger to Srilankan army who makes dead of Tamil people to take revenge on them.. wait and Look at the Near future ..... Vaalka Tamil... Velka Tamil Ezham.
by M Kathirvel,India
Posted on மே 19,2009,12:17 IST

It is good that the long time war came to an end. I know many Srilankan Tamils who are staying outside the country are forced to contribute for LTTE. Those people will be happy now.
by I Tamilan,India
Posted on மே 19,2009,12:15 IST

மாவீரா நீ இறந்து விட்டதாக பிணங்கள் பேசுகின்றன!! ஆம் உணர்வே இல்லாதவநை எப்படி அழைப்பது? உனக்காக?? இறப்பா?? இல்லவே இல்லை... தமிழ் வாழும்வரை நீ வாழ்வாய்..வீரநால் உன்னை வீழ்த்த முடியாது,துரோகத்தால் வீழ்ந்த இனம் தமிழிநம் என்பதை வரலாறு உணர்த்தும்..வீரபாந்டியநுக்கு ஒரு எட்டப்பந் போல், புருஷொத்தமநுக்கு ஒரு அம்பி போல், உனக்கும் இரண்டு கருநா''க்கள், கடவுள் உன்னை தமிழநாக படைத்ததுதாந் குற்றம்.. தன இனத்தை தானே அழிக்கும் இனம் தமிழிநம், ஒநாய்கலும், நரிகலும்,முதலைகலும் நிறைந்த, இனத்தில் மனிதணாய் பிறந்ததுதான குற்றம்
by n sen,India
Posted on மே 19,2009,12:13 IST

tamizhan alive
by m siva,India
Posted on மே 19,2009,12:06 IST

ஐயோ! மா பெரும் தலை சாய்ந்ததோ . அது மீண்டும் பிறக்கும் பல்லாயிரம் பலம் கொண்டு பிறக்கும்..

தமிழனை கொன்றவனுக்கு நல்ல சாவே வரக்கூடாது.

இந்த போரை இந்தியா நடத்தி இருந்தால் அதன் சோக காலத்தை இந்த லங்காபுரி தமிழன் பார்ப்பான்.

உண்மை தமிழன் இலங்கைத் தமிழனே
பணத்திற்காக எங்கள் இனத்தை அளிக்க துணிந்த தமிழகமே உனக்கும் ஒரு azhivu நேரம் வரும். அப்பொழுது இவன் உன்னை paarththu nagaiyaduven.

தமிழகமே உன் kaalil vilunthu kenjinen katharinen ஆனால் neeyum சேர்ந்து என்னை kondraaye.

இந்த abimanyu iranthen. என் thanthai Arjunan அந்த aabathpaandavan உன்னை azhikkum காலம் vegu நேரம் இல்லை
by Real Tamilan,Sri Lanka
Posted on மே 19,2009,11:59 IST

Prabhakaran was/is/will be the only leader of tamilians globaly. Karunanithi, vaiko, Ramadoss,Jaya, Nedumaran ivargal ellam waste.They were trying to get vote using this issue.Tamil nattukku thevai oru RAJTHAKKAREY...not the present politicians
by v Venkatesan,India
Posted on மே 19,2009,11:53 IST

mr.bharathuraja and seeman ippa enna valiku povinga??? .
by S MURALI,India
Posted on மே 19,2009,11:49 IST

srilankan government killed prabakaran 1000 times. But he rised up each and every time. he will rise this time too. dont loss confident.

by s sekar,India
Posted on மே 19,2009,11:28 IST

The legend Prabhakaran has died.This is because of the betrayal of India and especially the DMK.Its not the war end.Thousands of prabhakaran will come in his place and fight against the srilankan bastards definitely.See when the people of tamil nadu sold their votes for just Rs.500 and Rs.50.I salute the great warrior and legend V.Prabhakaran.My eyes are tearing and surely thousands of prabhakaran will emerge.
by M Prabhakaran,India
Posted on மே 19,2009,11:26 IST

Dear Tamil blood. Dont get upset. some thing will happen good only after a big silence.
by S V Kandiyar,India
Posted on மே 19,2009,11:22 IST

யு என் எச் சி ஆர் மூலமாக தொடர்புகொண்டு விடுதலைப்புலிகளிடம் இருந்த 8 ராணுவத்தினரை விடுதலை செய்வதாகவும் அவர்களுடன் இணைந்து நடேசன் புலித்தேவனும் சரணடைவதாகவும் முன் அறிவித்தலுடன் வெள்ளைகொடியுடன் சென்றவர்களை ராணுவத்தை மீட்டு மிகுதியிருவரையும் ராணுவம் சுட்டுகொன்றது இதுதான் உண்மை.இதற்கான பதிவுகள் யூ என் எச் சீ ஆரிடம் உள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன
by S Thamarai,India
Posted on மே 19,2009,11:14 IST

definitely prbhakaran will give you an interview to the world with in two days.Even if he died then also we can surely expect for tamil elam by coming days,we cannot forget Mr.Velupillai prabhakaran.I and all tamilan salute him
by tn tamilan,India
Posted on மே 19,2009,11:12 IST

dear readers,
why there is no poetry this time?
lets as take this as ahights of tolarance of tamil people????
by s swamy,India
Posted on மே 19,2009,11:07 IST

dear readers,
why there is no poetry this time?
lets as take this as ahights of tolarance of tamil people????
by s swamy,India
Posted on மே 19,2009,11:05 IST

pooril veera maranam adaintha enn sagotharargalukku veera vanakkam...
by s ramesh,India
Posted on மே 19,2009,11:04 IST

LTTE has killed more thamizh people than srilankan govt. Prabhakaran started as a freedom fighter and ended as a Worst ever Terrorist. He is paid for what he has done.

Those who know srilankan thamizh issue very well can aunderstand that majority of people did not accept him as leader because of his biased character.

He was a drugg smuggler/Money minded/power minded/arrogant idiot. A true coward who used children as frontline soldiers to save himself.

Now many people will come out and narrate the harrasments LTTE carried out.

Let Srilanka do well as a united country.

All the best to Srilankan people.
by Mr amul,India
Posted on மே 19,2009,11:02 IST

Dear Tamilians,

Wat pathetic condition in Tamil nadu, Great Tamil tiger Mr. Prabakaran last his entire life for Tamil elam but here some stupid politicians are fighting MP cabinet for his son and daughter tat too very important cabinet where they can get more corruption money like surface, IT, . wat happened to all tamilian whether he is adding salt in his food or wat. feel very same about this state. My blood Prabakaran soul will rest in heaven and again tigers will back in field
by Abi Abirami,India
Posted on மே 19,2009,10:59 IST

ஒரு வேலை பகத்சிங் பிரிட்டிஷ் கொன்னது சரிதானோ !!!!!!!!!!!!!!


அதே போல் நேதாஜி ! மாட்டி இருந்தால் !!!!!!!!!!! சுட்டு கொள்ளலாம் !!!!!!!!!! ஏன் என்றல் அவரும் போராளி தானே !!!!!!!!!!!!!!!!!!!!!!!
by r Jagir,India
Posted on மே 19,2009,10:53 IST

Salute for THe great tamil leader ''PRABAKARN''. There one tamil leader died? because of fighting for separate nation for tamilians. Here the world tamil leader''KALAIZAR'' is fighting to get the best department of ministery to his family members.
GOD BLESS TO ALL TAMILIANS
by s ssr,Qatar
Posted on மே 19,2009,10:53 IST

Fine, as the dignity of the leader any country, it should be appreciated, also the miserable supports by the Governement of India, once again we appreciate this, however, such action will be taken in Jammu & Kashmir also????
by G Venki,United Arab Emirates
Posted on மே 19,2009,10:25 IST

this is the good movement for
Who is like pies of life, those people are fell glad this movement
So everybody to enjoy
Srilanka government take good opechanute for establish a good government
Enjoy every one feel happly
by R ganesan,India
Posted on மே 19,2009,10:19 IST

Who said Prabakaran was killed by Lankan Army?

Prabakaran comitted suicide.

His blood will rise again in millions of Tamil people and the fight will restart again in 10 years.
by K Ramasamy,India
Posted on மே 19,2009,10:07 IST

ஒரு இனமும் - ஈழமும் அழிந்த கதை : ஒரு இனத்துக்காக சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக தன்னையும் தன குடும்பத்தையும் அர்ப்பணித்து,ஒரு இனபோராளியாகவே வாழ்ந்தவர் தான் இந்த பிரபாகரன்! இவரது மரண செய்தி கேட்டு எந்த தமிழன் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லையோ , அவன் கண்டிப்பாக தமிழ் உணர்வுள்ள தமிழனாக இருக்க மாட்டான் ! இன போராட்டம், இன விடுதலை பட்ற்றிஎல்லாம் நம்மக்கு எப்படி புரியும்? நாம்தான் கேவலம் ஒரு ஐநூறு ரூபாய்க்காக நம் ஒட்டுரிமயையே ஐந்து ஆண்டுக்காக ''அடகு'' வைத்து விட்டோமே? நாம் இனி ஐந்து வருடத்திற்கு ''எந்த உரிமைகளை'' பற்றியும் பேசுவதற்கு ''உரிமை'' இல்லை ! பணனாயகத்தில் புரண்டு விட்ட நாம் எங்கே நமது இனத்தை பாதுகாக்க போகிறோம் ??? இனி தமிழ்நாட்டு மக்கள், ''காமராஜரே உயிருடன் வந்து ஒட்டு கேட்டால், அவரிடமே ஐநூறு ரூபாயும், பிரியாணியும் '' கேட்பார்கள் ! இவர்களுக்கு எப்படி புரியும், சொந்த மண்ணில் உரிமைகளை இழந்து வாழ்வது என்றால் என்னவென்று ? ஒரு இனத்தின் உரிமை மறுக்கப்பட்டு நசுக்கப்படும்போது, அவர்களது வேதனை,கஷ்டம்,வலிகளை புரிந்து கொள்ள நாம் புலிகளாக,தமிழனாக,இந்தியனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை....''மனித நேயம் மிக்க மனிதனாக'' இருந்தாலே போதும் ! இதை புரிந்து கொள்ளும் போது அந்த இனம் அழிந்து இருக்கும் ! தமிழ்நாடு ''வந்தாரை வாழவைக்கும்'' ஆனால் ''சொந்த இனத்தை'' சோகத்தில் வைத்து சீரழிக்கும் ! போங்கள் தமிழர்களே போய் ''குடும்பம் கொழிக்க'' அவர்கள் சொந்த டிவி இலே மானாட மயிலாட பாருங்கள்....இலவசங்கள் உங்களை இழுத்து செல்லும் ''வளமான எதிர்காலத்துக்கு'' !
by Mr Unravil Tamilan,India
Posted on மே 19,2009,10:06 IST

Bravo Prabhakaran and it''s group!!!

You''ll live ever in history.

If you would have military power as Srilankan have, you''ll finish them up with in a single day.

Nothing to celebrate for Srilankan. They are not conquer another country for their victory.

If you are terrist, then what about Nelson Mandela, Nethaji subos and Vietnam''s Ho Chi Minh.

You served lot and have a peaceful soul.

If re-birth is true, then don''t birth as Tamilan.

-Panneer
by V Panneerselvam,United States
Posted on மே 19,2009,09:55 IST

Mr. Velupilla prabhakaran is the one of the best independent real tiger..
Every srilankan''s tamil people remember him and will future achieve their independence.

I salute him.
by P Ramanathan,India
Posted on மே 19,2009,09:51 IST

Mr. Velupilla prabhakaran is the one of the best independent real tiger..
Every srilankan''s tamil people remember him and will future achieve their independence.

I salute him.


by P Ramanathan,India
Posted on மே 19,2009,09:51 IST

Please don''t comment about tamil nadu people. LTTE failed, first reason is Elam tamil people do not have the unity, EPRLF, TELO etc groups are still there. They are supporting SL govt. Mainly Karunakaran knows all the advantages and disadvantage about LTTE.

Some of them give the comments about tamil nadu people they have vote for money. Morethan 10 people committed ''theekulithal'' in tamil nadu from all the parties. So all these people are money pupose did it. People are very clear they need stable govt. so voted for one party.
by R Ramadas,India
Posted on மே 19,2009,09:49 IST

tamizhan vathaikkapaduvathillai vithaikka padukiran by.Agilan
by A Agilan,India
Posted on மே 19,2009,09:46 IST

The Brave Warriors who died for the sake of tamils in eelam, I pray God for all tamils sake with grief stiken heart the above warriers souls may rest in peace
by M Kandasamy,India
Posted on மே 19,2009,09:45 IST

Dear readers it is best time to read following word of our Indian Leader:

''It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength.... Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next......''

Subhas Chandra Bose
by T Bharathi,United States
Posted on மே 19,2009,09:42 IST

Now only,actual war is going to start against srilanka.May be Mr.Prabakaran is dead but hope LTTE is still alive.
by R PHILIP,India
Posted on மே 19,2009,09:41 IST

Prabhakaran still live. He very much need for Tamil people.
by b seenu ,India
Posted on மே 19,2009,09:40 IST

யார் அது தமி்ழ் துறோகி என்று தமி்ழ்னாட்டு மக்களை சொல்வது. இப்படி சொல்பவர்கள் வெளினாட்டின் ஆடம்பர வழ்க்கை வாழ்கிரார்கள். ஏன் நீ இலங்கைக்கு போக வில்லை,ஏன் உன் ஆடம்பர வாழ்க்கை தடுக்கிறதா?. விதவிதமான உணவு உண்டு ருசிகண்ட நாக்கு தடுக்கிரதா?. வெக்கம் கெட்டவனே. சராசரி தமி்ழ்னாட்டு மக்கள் வாழ்க்கை ஒரு போராட்டம். பஸ்ஸில் நெரிபட்டு வேலைக்குபோகனும் ,குடிக்க தன்னீர் கஸ்டம் இப்படி கஸ்டபடும் மனிதர்களை பாத்து இப்படி கெவளாமாக பேசாதெ. உன் பிரபாகரன் தான் இலங்கை தேர்தலை புறகனிக்க சொல்லி வெரும் சிங்களவர்கள் வாக்களித்து அது ராஜ பக்ஸெயை பதவியில் அமர செய்தது. பிரபாகரனுக்கு அரசியல் திறமை இல்லை. வெரும் சண்டியர்
by j jay,Canada
Posted on மே 19,2009,09:39 IST

இந்நூற்றாண்டு சந்தித்த உண்மையான மாவீரர் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் அவர்கள். புறநானூற்றுத் தமிழர்களை உருவாக்கிய அவர் தானும் ஒரு புறநானூற்று வீரராக வாழ்கிறார். அவரது மறைவு என்பது வழக்கமான இந்திய- சிங்களக் கூட்டுப் பொய்மையாக இருக்கட்டும்! மறைந்தும் வாழும் வீரப் போராளி முத்துக்குமார் குறிப்பிட்டது போன்று அவரைப் போன்ற தலைவர் தமிழகத்தில் இருந்தார் எனில் உலகெங்கும் தமிழர்கள் கொடிகட்டிப் பறந்திருப்பர்! உலக அமைதிக்கும் வளத்திற்கும் நாகரிகப் பண்பாடடு விழுமியங்களுக்கும் உழைத்திருப்பர்! அவ்வாறு இல்லாமல் போனது நம் தவக் குறைவே! ஈழப் போராளிகளின் புகழ் ஓங்குக! இதுவரை அவர்கள் செய்த ஈகங்களை - தியாகங்களை - மண்ணோடு மண்ணாக்கியவர்களும ஒருநாள் மண்ணோடு மண்ணாகத்தான் போவார்கள்! அதற்குள் காலம் அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கும்! தமிழ் ஈழம் வெல்க!
அந்தோ பரிதாபம்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதாகக் கூறித் திட்டமிட்டு நாற்புறமும் சூழ இருந்து சோனியா - சிங்களக் கூட்டுப்படை தமிழர்களை அழிததிருக்கின்றதே! மரண வாக்க மூலமாகச் செய்தியாளர் செய்மதி தெரிவித்த கருத்தினைக் கேட்ட பின்பாவது இங்குள்ள தமிழர்கள் திருந்த மாட்டாரகளா? இவர்கள் திருநதினால்தானே நாம் பிறரைத் திருத்த முடியும் நம்மால். இனி என்ன சொல்லி என்ன? மாபெரும் வீரமும் அறிவாற்றலும் காண்ட இருபால் இளைஞர்களும் முதியோர்களும் குழந்தைகளும் சாகடிக்கப்பட்டனரே! இறைவா! நீ இருக்கின்றாயா? இல்லையா?நீ நின்று கொன்று பயன் என்ன? இனியேனும் ஈழத் தமிழர்கள் வாழ்வில் அமைதியை ஏற்படுத்து. குற்றுயிரும் குறையுயிருமாய் இருப்பவர்களை நலப்படுத்து! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

by I. Thiruvalluvan,India
Posted on மே 19,2009,09:32 IST

SALUTE TO GREAT WARRIORS OF INDEPENDENT TAMIL NATION. we the tamilnadu tamils are fully responsible for this tragic end. we have no right to say ourselves as Tamils. By supporting state and central government of india, giving them votes only to finish off our own blood relations in the island. Indinan government given military aids to SL singhala government to this purpose only. we lost the hope of being human.
by M Baskar,India
Posted on மே 19,2009,09:32 IST

Hats off to Mr.Prabhakaran and his group.
by R Priya,Singapore
Posted on மே 19,2009,09:30 IST

Mr. Prabaharan and his fellows are alive alive alive
alive alive
by k yamuna,Australia
Posted on மே 19,2009,09:24 IST

இந்த உலகத்தில் மனிதநேயம் எப்போதோ செத்து விட்டது. காசுக்காக வோட்டு அதன் பலனை அனுபவிக்க வேண்டும்.
by Ram Muthukumar,India
Posted on மே 19,2009,09:18 IST

இனியும் இப்படி ஒரு வீரமான மனித பிரவிகளை காண முடியுமா...? முடியும்...புலிகளின் ரத்தம் சிந்திய மன்னில் பிறக்கும் அத்தனை உயிர்களும் வீரமாகவே பிறக்கும்..அவர்கள் மூச்சுக்காற்று கலந்த காற்றை சுவாசிக்க என் உயிர் துடிக்கிறது...தமிழ் நாட்டு மக்களின் கன்னீர் உன் உடலை கழுவட்டும்...நீங்கள் அங்கே வீழ்ந்த போதும், நம் தமிழ் மக்கள் இல்லை இல்லை..என் தமிழ் மக்கள் இங்கே இலவசங்கலுக்காக இன்னொரு ஓட்டு போட்டதுதான் கேவலம்...
by S Praveen,India
Posted on மே 19,2009,09:17 IST

After few years, China and Pakistan army together attak india from srilanka. That time total tamilnadu are destraid. It is 100% real

Senthil
by m Senthil,Singapore
Posted on மே 19,2009,09:16 IST

Mr Nataraj,
Don''t give bad comments on tamils in tamilndau. Tamilndu people always clear vision on this issue.....
by S Tamil,Malaysia
Posted on மே 19,2009,09:12 IST

Atleast here after central govt must provide all help to srilanka tamil''ans to form a autonomous govt.
and also ensure the devolution of power in srilanka constitution especially for Tamils
by k Ebi,India
Posted on மே 19,2009,08:52 IST

Tamil Veerargalukku Veera Vannakam.....
by M Pradeep,Canada
Posted on மே 19,2009,08:49 IST

தமிழ் ஈழம் அழிய காரணமாக இருந்ததற்கு தமிழ்நாட்டு மக்கள்தான் காரணம்.''தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா'' ஒரு இனமே அழிய காரணமாக இருந்த கட்சிக்கு ஒட்டு (காசு வாங்கி) போட்டு அரியனை ஏற்றி அழகு பார்க்கும் குணம் எந்த மொழி பேசும் மக்களுக்கும் இருக்காது.மானம்,சூடு,சுரனை இல்லாத தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டுமே உண்டு.வாழ்கதமிழ்.......(ஒரு ஓட்டு ரூ100 = ஒரு உயிர்)
by R Natarajan,India
Posted on மே 19,2009,08:07 IST

In EAlam the brave warriors & their real tamil leader are died for their own land&for tamil.but in tamilnadu the great tamil reel leader is going to delhi to get cabinet seats for their sons&grand son.There is no difference between karuna&karunanidhi.
by A suraj,Singapore
Posted on மே 19,2009,07:34 IST

In this war ,China emerges as a key player in victory over Tamil Tigers. China gave Sri Lanka about £660 million of aid last year. The country''s air force has also benefited from a gift of six of Beijing''s F-7 jet fighters, while the army received £25 million of Chinese ammunition and ordnance in 2007.What has Sri Lanka given in return? The answer is that China has acquired a strategic ally near the crucial Indian Ocean shipping lanes which carry energy supplies from the Middle East. Beijing is now building a port on Sri Lanka''s southern coast which could serve as a future naval base. Isn''t a threat to India?
by m Vimalan,India
Posted on மே 19,2009,07:25 IST

தமிழர்களின் உரிமைக்காக 34 ஆண்டுகள் போராடிய ஓர் உன்னதத் தமிழர் தலைவன் போர்க்களத்தில் இன்னுயிர் ஈந்து வீரமரணம் அடைந்து விட்டான். தன் இனத்துக்காக அல்லும் பகலும் பாடுபட்டு உயிர் துறந்த இம்மாவீரனின் பெயர் உலக சரித்திரத்தில் என்றும் நிலை நிற்கும்.தமிழ் மக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு சுயநலம் சிறிதும் இன்றி தன் வாழ்வையே அற்பணித்த இவன்தான் உண்மையான தமிழனத் தலைவன்.தன் உயிர் மட்டுமன்றி தன் மகனையும் அர்ப்பணித்த இவன் சாதாரண மனிதனல்ல மாமனிதன்.இவனது இறப்பு இன்று தமிழ் சமுதாயத்தை நாதி இல்லா அனாதை ஆகிவிட்டது.தமிழர் இனம் இன்று உலகளவில் ஆதரவற்றவர்களாகி விட்டனர்.

கூப்பிடு தூரத்தில் ஏழு கோடி தமிழர்கள் இருந்தும் தம் இனப்போராளிகளுக்கு ஆதரவு அளிக்காமல் போன இனம் உலகில் தமிழ் இனம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
இலங்கையில் தொடங்கி இனி தமிழ் சமுதாயம் மெல மெல்ல அனைத்து இடங்களிலும் அழிக்கப்பட்டு விடும். இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில காலங்களில் தமிழ் என்னும் மொழியே இல்லாமல் போவதற்கான சாத்தியங்களே அதிகம். ஆகையால் இனியாவது தமிழர்கள் விழித்தெழவேண்டும்.

தமிழ் இனத்துக்காக உயிர் ஈந்த தலைவனுக்கும் அவன் வழிவந்து உயிர்த்தியாகம் செய்த அனைத்து தளபதிகளுக்கும் தலை தாழ்த்தி வீர வணக்கம்.
by K Kuppan,Singapore
Posted on மே 19,2009,07:00 IST

This type of victory give berth to another Prabharan...

Let''s hope good life for Tamil people in SriLanka, If not then LTTE will again come up very strong.
by E Amudhan,India
Posted on மே 19,2009,06:41 IST

உண்மையான போர் எனில் ஈழத் தமிழர்கள் முழு விடுதலை அடைந்திருப்பார்கள். நெறிமுறையல்லா வழி முறைகளையே சோனியா அரசும் சிங்கள அரசும் போர் முறை எனக் கொண்டதால் ஏற்பட்ட பேரவலம். விடுதலைப் புலிகள் எந்தச் சிங்களப் பகுதிக்கும் சென்று தாக்கியதில்லை. சிறை மீட்டல் போன்ற நேர்வுகளிலும் யார் உயிரையும் பறிக்காமல்தான் நிகழ்த்தியுள்ளனர். முதுகில் குத்தியவர்களப் பழி வாங்கியிருக்கலாம். ஆனால், சிங்கள மக்கள் யாரையும் தாக்கி அழித்ததில்லை. தற்காப்பிற்குத்தான் ஆயுதம் ஏந்தினர். அவ்வாறிருக்க அடிவருடிகளின் பேச்சைக் கேட்டு அவர்களைச் சிலர் வசைபாடுவது முறையன்று. வீரமும்அறிவும் செறிந்த இனமாகவும் உலகிலேயே ஒழுக்கமுள்ள படையையும் உருவாக்கிய மாவீரர் இறப்புச் செய்தி பொய்யாகவே இருக்கட்டும்! எனினும் எண்ணற்ற மக்களும் அவர்களின் பாதுகாவலாக விளங்கிய தலைவர்களும் வீரர்களும் வெல்லப்படவில்லை; கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இப்பேரழி்வை ஏற்படுத்திய சோனியா அரசும் கூட்டாளிப் பித்தர்களும் இறைவனாலோ இயற்கையாலோ தண்டிக்கப்பட்டாலோ போன உயிர்கள திரும்ப வருமா? உலகமே உன் மூத்த இனம் அழிக்கப்படுவது கண்டு நீ ஏன் பாராமுகமாக இருக்கின்றாய்! வீரர்கள அழிக்கப்பட அழிக்கப்ட அடுத்து அடுத்து எழுவார்கள்! விதைக்கப்பட்டவர்களின் வழிமுறையினர் வீறு கொண்டு எழுவார்கள்! விடுதலைப் புலிகளின் புகழ் ஓங்குக! ஈழத் தமிழர்கள் வாழ்க! ‌வெல்க தமிழ் ஈழம்! வீர வணக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
by I. Thiruvalluvan,India
Posted on மே 19,2009,04:34 IST

LTTE leader PRABHAKARAN has invited his tragic end without admitting the advise from Tamil moderate leaders to return to Democratic ways. If he has agreed to peaceful agreement ,he may rule the North/Northeast states as ChiefMinister and save the lives of thousand and thousand civilians.Finally he has proved himself as a Dictator.
by T.S. PRAKASAM,Singapore
Posted on மே 19,2009,04:34 IST

இது தோல்வியல்ல, சிறிய பின்னடைவு மட்டுமே, இது முடிவல்ல, ஒரு விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமே,
நாங்கள் விழுந்தோம், ஆனால் மீண்டும் எழுவோம்,
நாங்கள் ஒன்றுபடுவோம், போராட்டத்தைத் தொடருவோம்,
களத்திற் சிந்திய ஈழத்தமிழர்களின் இரத்தத் துளிகளைக்,
கயவர்கள் கண்களில் இருந்து வழிய வைப்போம்.
தமிழர் தாகம், தமிழீழ தாயகம்.
by s siva,Canada
Posted on மே 19,2009,04:25 IST

LTTE was an organization formed to terrorize the racist Singhalese Srilankan Government. Mistake they commited is killing the Rajiv Gandhi. It would have been better if they turned into a political organization in the later stage and played an important part in overall Srilanka. Hoping India will pressurize to get decent rights for Tamils in Srilanka. To help in long run Srilanka Government also should understand the need to respect all races to avoid another LTTE forming in their land.
by C Suresh,India
Posted on மே 19,2009,04:08 IST

I never say your soul to rest in peace because there are no end warriors.
by S Prasannaa,India
Posted on மே 19,2009,03:19 IST

Its a comedy News. Even Srilankan defence department have not confirmed that P is dead.
by A Jeevan Karloss,India
Posted on மே 19,2009,01:58 IST

He lives in our all tamil hearts. He is tamil subachandra bose. He has given his life for tamil people.
by S Raja,United Kingdom
Posted on மே 19,2009,01:57 IST

If Karunanithi liked then give pressure to Central Govt and stopped the war on two or three months before.

''Panathai Parrthal Ponam kuda Wai Thirakkum''. This is only a Tamilnadu current stage.

Thaivam Nindru Kollum!!

God save Srilankan Tamil People!!
by J Muthu,India
Posted on மே 19,2009,01:34 IST

I strongly condemn the faulty probagonda by lankan army about LTTE leader.The very fact that his physical presence at the war front in his own land with his own people for whom he was waging this battle ,decided to silence the guns to save 25000 injured/hapeless civilians, shows he never attempted to fleed the area. If he wish he would have gone to safe heaven as advised by his deputys long time ago.No one can tarnish his image and integrity whatever may be the differences. In his martyrdom he remains in the heart of millions of tamils worldwide .One day his dream will come true.
by s selvan,India
Posted on மே 19,2009,01:25 IST

We''ve heard this message many times in last 15 years. I don''t think the Leder is killed. He will be back.
by V Velupillai Ganesan,India
Posted on மே 19,2009,01:20 IST

Hello, Even the Srilankan Defence news agency didnt say that Prabha is killed . But How come Dinamalar knows this. Its a big Comedy. Plz visit the srilankan defence news website. They said they are searching to fiind his body and they are not 100% sure that P is dead. This news is absolutely crazy...
by A Jeevan Karloss,India
Posted on மே 19,2009,01:07 IST

நம்மூர் போலீஸ் ரவுடிகளை என்கவுண்டர் செய்யும்போது இந்த‌ காரணத்தைத்தான் சொல்வார்கள். தப்பியோட முயற்சி செய்ததால் போட்டு தள்ள வேண்டியதாயிற்று என்று. அதே கதைதான் இவர்களுக்கும். ஒரு சதுர கிலோமீட்டருக்குள் கிடிக்கிப்பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கும்போது தப்ப முயற்சி செய்யும் அளவுக்கு புலிகள் ஒன்றும் முட்டாள்கள் அல்லவே! 25 ஆண்டுகளாக ஒரு நாட்டின் ராணுவத்தையே கதிகலங்க அடித்தவர்கள். நிச்சயம் சுலப‌மாக செத்திருக்க வாய்ப்பே இல்லை. வேண்டியமட்டும் வெளிகாயங்கள் இல்லாமல் கதற கதற சித்திரவதை செய்து பின் நிற்க வைத்து புலிகளை நாயை சுடுவதைப் போல சுட்டுக்கொண்று இருப்பார்கள். பயங்கரவாதிகளோ, புரட்சியாளர்களோ, ஒரு சகாப்தம் முடிந்தது. சிலருக்கு வேதனை, சிலருக்கு நிம்மதி.
by R Rengarajan,India
Posted on மே 19,2009,01:05 IST

This is not a full stop,its just a comma ..........................No body cant stop tamil ealam
by k POP,India
Posted on மே 19,2009,00:21 IST

1 கருத்து:

  1. அடே தமிழா !! வோட்டுக்காக நீ வாங்கிய ஒவொரு ரூபாய் நோடில்லும் அதை வாங்கிய உன் கையிலும் இலங்கை தமிழனின் ரத்தகரை படிந்துள்ளது. எத்தனை முறை கங்கையில் கழுவினாலும் அந்த கரை போகாது. நீ சாகும் வரை இந்த பாவம் உன்னை தூங்கவிடாது துரத்தும்

    -- இந்தியன் காங்கிரசுக்கும் தீ. மு. க. வுக்கும் எதிராக உழைக்க இருக்கும் செல்வா

    பதிலளிநீக்கு