சனி, 23 மே, 2009

அமைச்சரவையில் சேர்க்க முடியாதென்று யார் பெயரையும் குறிப்பிடவில்லை

அமைச்சரவையில் சேர்க்க முடியாதென்று
யார் பெயரையும் குறிப்பிடவில்லை: காங்கிரசு
தினமணி
First Published : 22 May 2009 11:15:28 PM IST

Last Updated : 23 May 2009 02:43:28 AM IST

கருத்துக்கள்


1/2 ) உண்மைதான். கட்சிசார்பான தெரிவுகள் கட்சியின் தலைமையின் விருப்பத்திற்கேற்பவே அமையும். பின் ஏன் இவ்வாறான செய்திகள் வருகின்றன என எண்ணலாம். அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையைக் காங். குறைக்கும் பொழுது குடும்பத்தவர்க்கு் மட்டுமே வாங்க இயலும். இது குறித்து எவரும் ஏதும் சொல்லக கூடாது என்பதற்காக இவர்களுக்கும் கேட்டுப் பார்த்தோம். காங். தலைமை அல்லது தலைமை அமைச்சர் மறுத்து விட்டார். எனவே இவர்களுக்கு இதயத்தில் மட்டுமே இடம் கொடுக்க முடிந்தது. மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க இயலவில்லை எனக் கூறிச் சமாளிக்கலாம் அல்லவா? கேழ்வரகில் நெய வடிகிறது என்றால் எனக்கும் 4 படிகள் தந்தார் எனச் சொல்லி நம்பும் தொண்டர்கள உள்ள கட்சியல்லவா இது. எனவே அவ்வாறு முன் ஆயத்தக் கருத்துக் களத்தை உருவாக்க ஊடகங்கள் வாயிலாகக் கலைஞர் முயன்றிருக்கிறார். காங். போட்டு உடைத்து விட்டது.

By Ilakkuvanar Thiruvalluvan
5/23/2009 3:02:00 AM

2/2 ) எனினும் இதுவே மக்கள் இதயத்தில் இடம் பெறச் சரியான நேரம் என எண்ணித் தி.மு.க. தலைமை தினமணி ஆசிரிய உரையில் தெரிவித்தவாறு ஈழத் தமிழர் நலன் காப்பதில் கருத்து செலுத்தினால் தி.மு.க.விற்கும் நல்லது. உலகத் தமிழர்களுக்கும் நல்லது. மத்திய அரசும் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். தம் குடும்ப மக்களை இதற்கான பணியில் ஈடுபடுத்தினால் பின அமைச்சர் பதவி தானாகத் தேடி வரும். சிந்திப்பாரா மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள்? வேண்டுகோளுடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/23/2009 3:03:00 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக