Thursday, May 21, 2009 3:31 AM IST
உலகம்
நந்திக்கடல் பகுதியில் பிரபாகரனின் மனைவி, மகள், இளையமகன் உடல்கள்?
தினமணி
First Published : 21 May 2009 11:13:00 PM IST
Last Updated :
இலங்கையின் வன்னிப்பகுதியில் குடும்பத்துடன் பிரபாகரன், (வலமிருந்து) மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் சார்லஸ் அந்தோனி.
கொழும்பு, மே 20: தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரின் உடல்களும் நந்திக் கடல் பகுதியில் கரையோரம் கிடப்பதாக சில தொலைக்காட்சி செய்திகள் புதன்கிழமை தெரிவித்தன.
பிரபாகரன் உடல் இருந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு சுமார் 600 அடி தொலைவிலேயே இந்த மூவரின் உடல்களும் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோனியின் உடல் கிடைத்ததுதான் 2 நாள்களுக்கு முன் முதலில் தெரிவிக்கப்பட்டது. பிறகு பிரபாகரனின் உடல் கிடந்ததாகக் கூறப்பட்டது. இப்போது இதர குடும்ப உறுப்பினர்களும் இறந்துகிடப்பதாகக் கூறப்படுகிறது.
பிரபாகரன் மனைவி, மகள், மகன்கள் இறப்பு தொடர்பாக இலங்கை அரசும், ராணுவமும் தெரிவிக்கும் தகவல்களும், அவை தெரியவரும் விதமும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன.
பிரபாகரன் இறப்பு பற்றிய செய்திகளையே நம்ப வேண்டாம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையதளங்கள் வேண்டுகோள் விடுத்தன. இந்த நிலையில் அடுத்தடுத்து சடலங்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுவதால் சந்தேகங்கள் அதிகரிக்கின்றன.
""மதிவதனி, மகள், இளைய மகன் ஆகிய மூவருமே தப்பிவிட்டார்கள், ஐரோப்பிய நாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்'' என்றெல்லாம் முன்னர் கூறப்பட்டது.
பிரபாகரனின் மனைவி, மகள், இளைய மகன் ஆகியோரின் உடல்களைப் பார்த்து அது அவர்கள்தான் என்று இலங்கை ராணுவம் உறுதி செய்ததாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
நந்திக் கடல் பகுதியில் பிரபாகரனின் உடல் பார்க்கப்பட்ட பிறகு அந்த இடம் முழுவதுமே சல்லடை போட்டு ராணுவத்தால் தேடப்பட்டிருக்கும். அப்படியிருக்க அவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு அருகில் 600 அடி தொலைவில் இந்த மூவரின் உடல்களை எப்படி அவர்கள் அன்றே பார்க்காமல் போனார்கள் என்று தெரியவில்லை. அந்த இடத்தில் ராணுவம் காவல் போடாமல் இருந்திருக்காது. அப்படி இருக்கும்போது இந்த மூவரின் உடல்கள் எப்படி அங்கு வந்தன என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
ராணுவத்தின் கைகளில் சிக்கக்கூடாது என்று தங்களுடைய இயக்க வீரர்களைக் கொண்டே தங்களுடைய வாழ்க்கையை இவர்கள் அனைவரும் முடித்துக் கொண்டனரா, அல்லது ஏதேனும் வஞ்சகம் செய்து இவர்களைப் பிடித்து ராணுவமே சுட்டுக் கொன்றதா என்று மர்மமாக இருக்கிறது.
பிரபாகரன் இறப்பு குறித்து தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள் ஏதும் கூறாததால் இந்தச் சாவுத் தகவல் நம்பும்படியாக இல்லை என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி தில்லி நிருபர்களிடம் கூறியிருந்தார். இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சமாதி எங்கே?: வீர மரணம் அடைந்த பிரபாகரனுக்கு பொதுக் கல்லறையில்தான் உடல் அடக்கம் நடைபெறும் என்று இலங்கை ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது. ஆனால் மற்றொரு வட்டாரமோ அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்ட நந்திக்கடல் பகுதியில்தான் அடக்கம் நடைபெறும் என்று அறிவித்தது. அரசு எதையும் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
கருத்துக்கள்
இந்திய- சிங்கள அரசுகள் அவிழ்த்து விடும் பொய்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கும். ஒரு வேளை இது உண்மையாக இருந்தாலும் இதனால் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பெருமைதான் ஓங்குமே தவிர இ-சி அரசுகள் எண்ணுவதுபோல் சிறுமை அடையமாட்டார்கள். மேலும் உலகத்தமிழர்கள் சொல்லொண்ணா வேதனையுற்றாலும் இன்னும் வேகம் கொண்டு- கருணாக்களின் துரோகங்களையும் புரிநது கொண்டு - தங்கள் தலைவர் வழியிலேயே சென்று தமிழ் ஈழத்தை வென்றெடுப்பார்கள். அதே நேரம் இது கட்டுக்கதை என்னும் பொழுது இ-சி அரசுகள் இது குறித்து வெட்கப்படப் போவதில்லை. கற்பனையாகச் சில நாள் மகிழ்ந்ததிலேயே பெருமை பட்டுக் கொள்ளும். மேதகு பிரபாகரன அவரக்ளும் அவர் குடும்பத்தினரும் பிற தளபதிகளும் படைஞர்களும் ஈழத் தமிழர்களும் நீடூழி வாழட்டும்! விரைவில் இ - சி சதிகளை வெல்லட்டும்! மலர்க தமிழ் ஈழம் குமுறும் உள்ளததினர் சார்பாக இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/21/2009 3:31:00 AM
appan for u al so need same prapgaran deth&same he famly deth for ur famly al sooo?praba he kill many peopls!how many famly he kill?moran 10000famly total mortan 80000peoples in lanka only!so he&famly deth this ok god give the dith for heeeem ok ok ok
By badhur
5/21/2009 3:26:00 AM
Sorry I meant.. if this is true news ( I wish it is not), Tamil should pay tribute to him and remember his historic sacrifice and ensure his dream comes true - may be in a Gandhian way. Not in a violent eye for eye way.. My worries is that people should not misuse his name and make living out of his tragedy. If it is true..may god forgive his sins and give him and family and the thousands of innocents died on both sides, bless them rest in peace.
By Tony
5/21/2009 3:21:00 AM
dear Indian friends; our leader&family still alive. wait...
By raja
5/21/2009 3:18:00 AM
RAMAYANATHTHIL RAAMAN MARATHTHIN PINNAAL MARAINTHU IRUNTHUKONGU VAALIMEEL AMBAI EITHU KONRAAN;ATHEEPAANIYIL MIHAVUM PEEDITHTHANAMAAHA MARAIMUHAMAAHA SINHALAAARMEEYUDANOLITHTHUIRUNTHUKONDU EELATHTHMILARKALAI KONRUALITHTHATHU INTHIYAAARMEE; ITHTHAAN KANNAN SOLLUM BHAGAVATHGEETHAYAß
By thambu
5/21/2009 3:11:00 AM
I wonder why do pro-LTTE's (likes of Tamilnet.com) pay tribute to this great man who sacrificed himself and his family.
By Tony
5/21/2009 3:09:00 AM
I salute this great Tamil warrior..i don't have words to praise this great man
By malarazhagan
5/21/2009 3:09:00 AM
Don't prabakaran know that his death is the end of his goal and aspirations for eelam tamilians.He shouldn't have sacrificed his life and his family to prove the love for tamils.Now who is there in eelam as a leader to support tamils and to expose the world about long lasting struggles of tamils in eelam. Somebody should have saved his life.We pray god that his soul and his family member's soul may rest in peace atleast with him.
By Tamilian , India
5/21/2009 3:02:00 AM
Prabhakaran could have gone as refugee to europe and lived happily as many others do. Hoe chose to fight for a cause and he has spent his whole life in bunkers and forest. He may have been brutla but thats his approach. I would always appreciate his valiant efforts against mighty forces.
By Krishna
5/21/2009 2:50:00 AM
These Mathana Mukthas would issue a false statement and issue another false statement to hide mistakes on the previous one ....... and keep doing.... like 'A singhalese village head called "Mathan muktha" came to a village home to remove the pot from a calf's head. as he was coming on an elephant, first the wall and the gate of villager's home was demolished. Then he didn't want to break the Pot, so he asked his handyman to cut calf's head. Finally he has to remove the head from the Pot, so he ordered to break the pot.................???????' - They won't bother to anything to (Panchaa Pathagams) squeeze the Tamils - see how arrogantly they are celebrating. Everything would stop when government's false statement is proved.
By Mages
5/21/2009 2:42:00 AM
இன்றை சேய்திப்படி பிரபாகரன் குடும்ப நபர்கள் - மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் எல்லோரும் போரில் மரணமடைந்து விட்டார்கள். இந்த செய்தி என்னை உலுக்கிவிட்டது.பிரபாகரன் என்ற மாவீரன் தமிழினம் செழிக்க தேர்ந்தெடுத்த வழி தப்பு. ஆனால் இவனின் தீராத தமிழின பற்றை பார்த்து பிரமித்து விட்டேன். இன்றைய தமிழின அரசியல்வாதிகள் தமிழினத்தை மறந்து மகன், மகள், வயித்திர்குள்ளிருக்கும் பேரப்பிள்ளைகலுக்கு பதவி. சொத்து என்று அலையும் போது தானும் ,தன் குடும்பவும் தமிழினத்திர்க்கா உயிர் துறந்து ஒரு சரித்திரம் படைத்து விட்டான்.தமிழன் என்ற உணர்வு உள்ளவர்கள் எல்லோரும் இவருக்கும், இவர் குடும்பதிர்க்கும் ஒரு சேர பிராத்திப்போம். இந்த மாவிரனுக்கு ஒவ்வொரு தமிழனும் செய்ய வேண்டியது அவன் விட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்து ஈழ பிரச்சனையை தீர்ப்பது.பிரபாகரனை வேண்டி அளவு திட்டிதீர்த்து விட்டோம்.இனியாவது இதை நிருத்தி அவன் விட்டுசென்ற கணவை நினைவாக்கவோம்.
By Appan
5/21/2009 2:42:00 AM
IF TRUE, THIS IS THE MOST SUPREME,ABSOLUTELY FLAWLESS AND MATCHLESS SACRIFICE ONE CAN MAKE FOR THE SAKE OF THE CAUSE ONE HAD EXPOUSED. AS AN ETHNICALLY CONSCIOUS AND COMMITTED THAMIZHAN I BOW IN SOLEMN SALUTATION TO THE GREATEST TAMIL WARRIOR OF ALL TIME THIRU.VELU PILLAI PRABHAAKARAN, MEMBERS OF HIS FAMILY, HIS COLLEAGUES, HIS MENN & WOMEN SOLDIERS AND ALL EEXHAMITE TAMILS WHO HAVE SUFFERED LOSS OF LIFE OR IN EVERY POSSIBLE WAY OF HUMAN SUFFERINGS, PHYSICALLY, EMPOTIONALLY & MATERIALLY. 02:35 AM IST on 21st May 2009
By P.Padmanaabhan
5/21/2009 2:32:00 AM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக