இலங்கைத் தமிழர்களுக்கு புது வாழ்வு: மத்திய அரசிடம் கருணாநிதி வேண்டுகோள்
தினமணி
First Published : 20 May 2009 01:31:17 AM IST
Last Updated :
புதுதில்லி, மே 19: இலங்கைத் தமிழர்களுக்கு புது வாழ்வும், நிவாரணமும் அளித்திட மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பதில்:
இலங்கைத் தமிழர்களுக்கு அந்த நாட்டு அரசு சம உரிமை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா?
இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும், இலங்கையில் சிங்களர்கள் ஆனாலும், தமிழர்கள் ஆனாலும் சமநிலையில் வாழ வேண்டும்; அதற்கான வழி வகைகளைக் காண வேண்டும் என்று சோனியாவும், மன்மோகனும் கூறி வந்திருக்கிறார்கள். அதை மீண்டும் அவர்களுக்கு நினைவுபடுத்தி இருக்கிறேன்.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு புது வாழ்வு உருவாகிட, நிவாரணங்கள் அளிப்பதற்கு வேகமாக மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பிரதமரிடம் இதைப் பற்றி பேசிய போது, என்ன சொன்னார்?
இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் மேலும் அழுத்தமான அக்கறை செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் இன மக்களைப் பாதுகாப்பதற்கும், துயர் துடைப்புப் பணிகளைக் கவனிப்பதற்கும் அவர்களுக்கு அமைதியான வாழ்வு அளிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்வதாக சென்னை பொதுக் கூட்டத்தில் சோனியா தெரிவித்தார். பிரதமரும் இதே கருத்தைக் கூறியிருக்கிறார். அவற்றைச் செயல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் நீங்கள் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறதா?
நான் சொன்ன பதில்கள் உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?
தமிழ் ஈழம் அமைய இலங்கையில் வாய்ப்பு இருக்கிறதா?
ஈழம் அமைய வேண்டும் என்பதற்காகத் தோன்றிய இயக்கம் இடையில் பல்வேறு திசைகளில் திரும்ப நேரிட்டு, இன்று ஒரு கேள்விக் குறியாக ஆகியிருக்கிறது. எதுவும் நடக்காமல் போய்விடும் என்று நினைக்கத் தேவையில்லை. நாம் உறுதியோடு மேற்கொண்ட முயற்சிகள் நிச்சயமாக வெற்றிப் பெறத் தவறுவதில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். இனியாவது அங்கே தமிழ் மக்களுக்கு அமைதி கிடைக்குமா?
அமைதியை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம் என்று இந்தியத் தலைவர்கள் கூறியிருக்கின்ற காரணத்தால் அதற்கான வழி வகை காணவும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவும் திமுக வலியுறுத்திக் கொண்டே இருக்கும்.
பிரபாகரன் மரணம் குறித்து...
இந்தச் செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதனால், இப்போது அதைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. இலங்கை பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகிறது என நெடுமாறன் போன்ற தலைவர்கள் கூட தெரிவித்துள்ளனர் என்றார்.
கருத்துக்கள்
உங்கள் குடும்பத்தில் யார் யாருக்கு எந்தெந்தத் துறைகளை ஒதுக்க உள்ளார்கள்? எனக் கேட்பதை விட்டு விட்டு இதையெல்லாம் ஏன் கேட்கிறார்கள்? நேற்றைய கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனத்தையும் இறந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவிக்காத பொழுதே உள்மனத்தைப் புரிந்து கொள்ள வேண்டாவா? ஏதேனும் சொல்லிக் குடும்பத்தவர் அமைச்சர்களாக ஆகும் வாய்ப்பைக் கெடுத்து விடக் கூடாது. சரி சரி நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது. பயன்படுத்திக் கொள்வோம்.- இப்படி எண்ணித்தான் தமிழினக் காவலர் விடை அளித்திருப்பாரோ? ஊகத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/20/2009 2:48:00 AM
ADAI PUNDAIYANDI. UN UTAVI ENGALUKKU THEVAI ELLAI. nee ITALI VESAIKKU OKKU.
By ISMAIL
5/20/2009 1:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக