புதன், 20 மே, 2009

வாழும் மேதகு பிரபாகரனைப் பற்றிப் பரப்பும் கதைகள்

கிடைத்தது உடல்: பிரபாகரன் மரணத்தில் தீர்ந்தது சந்தேகம்; தலையில் குண்டு காயத்துடன் மீட்பு
தினமலர்

மே 20,2009,00:00 IST

கொழும்பு: இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் பலியான விடுதலைப் புலித்தலைவர் பிரபாகரனின் உடல், தலையில் குண்டுக் காயத்துடன், நந்திகடல் நீர் ஏரிப் பகுதியில் நேற்று மீட்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களாக பிரபாகரன் மரணம் குறித்து எழுந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


முல்லைத்தீவில் மிக குறுகிய நிலப்பரப்புக்குள் பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் முக்கியத் தளபதிகள் நேற்று முன்தினம் இலங்கை ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்தச் சண்டையில் புலித்தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் மற்றும் முக்கியத் தளபதிகள் புலித்தேவன், இளங்கோ ஆகியோர் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்தது.


ராணுவத்தின் முற்றுகையிலிருந்து வேன் மூலமாகத் தப்பிச்செல்ல முயன்ற புலித்தலைவர் பிரபாகரன் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் பிரபாகரனுடன் தப்ப முயன்ற புலிகளின் கடற்பிரிவுத் தலைவர் சூசை, உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரும் பலியானதாகவும் ராணுவம் தெரிவித்தது. பிரபாகரன் தப்பிச்செல்ல முயன்ற வாகனத்தில் ராக்கெட்டுகள் இருந்ததால், தாக்குதலின் போது அவை வெடித்துச் சிதறியதன் காரணமாக பிரபாகரனின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.


வதந்தி: இதற்கிடையே, புலிகள் ஆதரவு இணையதளத்தில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால், இலங்கையில் மட்டுமல்லாமல், சர்வதேச நாடுகளிலும் பரபரப்பு ஏற்பட்டது. பிரபாகரன் மரணம் குறித்துப் பல்வேறு வதந்திகள் வெளியாகின. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை அரசு "டிவி'யில் நேற்று காலை ராணுவத்தளபதி சரத் பொன்சேகா அறிவித்தார். இந்தத் தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நானயக்கராவும் உறுதிப்படுத்தினார்.


அவர் கூறியதாவது: இன்று (நேற்று) காலை நந்திகடல் நீர் ஏரிப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் உடல்கள் மிதந்து கொண்டிருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக அடையாளம் காணும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. புலிகளின் சீருடை அணிந்த நிலையில், தலையில் குண்டுக் காயங்களுடன் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டிப்பாக அது பிரபாகரனின் உடல் தான்; அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் உட்பட ஏராளமானேர் பலியாவதற்குக் காரணமாக இருந்தவர் பிரபாகரன். புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர், மக்களுடன் ஒன்றாகக் கலந்திருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. அவர்களைக் கண்டறிவோம். இவ்வாறு உதய நானயக்கரா கூறினார்.


இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், பிரபாகரனின் உடலை ராணுவ வீரர்கள் சூழ்ந்திருப்பது போன்ற புகைப்படமும், வீடியோ காட்சிகளும் இலங்கை "டிவி'யில் ஒளிபரப்பானது. அந்த உடல் பிரபாகரனுடையது தான் என்பது மரபணுச் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வளவு குறுகிய காலத்தில் சோதனை நடந்தது எப்படி என்ற விளக்கம் தரப்படவில்லை.


"டிவி' காட்சிகள்: தண்ணீர் சூழ்ந்த பகுதியில் நிலத்தில் பிரபாகரனின் உடல் கிடத்தப்பட்டுள்ளது. அதைச் சுற்றி இலங்கை ராணுவ வீரர்கள் நிற்கின்றனர். பிரபாகரன் புலிகளின் சீருடையை அணிந்துள்ளார். அவரது கண்கள் மற்றும் வாய் திறந்த நிலையில் உள்ளன. தலையின் மேல் பகுதி துணியால் மூடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் குண்டுக் காயங்கள் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் தெரிகின்றன. குறிப்பாக, இடதுபக்க கண்ணிமைக்கு மேல் உள்ள பகுதிகள் சிதைந்திருக்கின்றன. பிரபாகரனை நன்றாக அடையாளம் காணும் வகையில் அவரது தலையை ராணுவ வீரர்கள் சிலர் தூக்கிக் காண்பிக்கின்றனர்.


பிரபாகரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருப்பதைத் தெரிவிக்கும் அடையாள அட்டையையும் ராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். அதில், பிரபாகரனின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. புலிகள் அமைப்பில் அவர் தலைமைப் பொறுப்பைக் குறிக்கும் வகையில் 0.01 என்ற எண்ணும் அந்த அடையாள அட்டையில் குறிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காட்சிகள் "டிவி'யில் ஒளிபரப்பாயின.


பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவரது மரணம் தொடர்பாக கடந்த சில தினங்களாக நிலவி வந்த சந்தேகங்கள் தீர்ந்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்தச் சண்டை குறித்த விசாரணை ஏதும் இருக்காது என்பதை இலங்கை அரசு தெரிவித்ததுடன், பயங்கரவாதத்தை எதிர்த்து நடத்திய போர் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தது. மேலும், தமிழர்களுக்குச் சமஉரிமை தர முயற்சிகள் எடுக்கப்படும் என்று, இலங்கை பார்லிமென்டில் அதிபர் ராஜபக்ஷே நேற்று அறிவித்தார்.

More Picture >> Html Format | Flash Format
நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
More Picture >> Html Format | Flash Format

மின்னஞ்சல் | | Bookmark and Share


வாசகர் கருத்து உங்கள் கருத்தை ஒலிப்பதிவு செய்ய...
உங்கள் கருத்துக்களை வெளியிட...hi all tamil people....dont beleive anything ...''PRABAKARAN IS STILL ALIVE & HE IS SAFE.''
by s muthupandi,India
Posted on மே 20,2009,16:54 IST

THE LEGEND''S HISTORY NEVER DIES - LONG LIVE PRABAKARAN !!
by MR Arun,India
Posted on மே 20,2009,16:44 IST

I am not a LTTE supporter. I still disagree on LTTE''s killing spree of other Tamil Leaders. V.Prabhakaran and LTTE trusted the words from DMK, MK and turned their guns against Indian Army (IPKF). LTTE paid the price for this blunder and for killings they did in Indian soil including RajivGandhi and others.

Now as a smart politician Mr. MK is busy in Delhi for Cabinet mister post for his son, daughter, grandson etc. Now LTTE paid the price for their trust with DMK and MK.

But when I saw the celebrations in the streets of Colombo, I was angry for the demise of Prabakaran.
by M Vasudevan,India
Posted on மே 20,2009,16:40 IST

THAMBI PRABAKARAN

STILL ALIVE IN EACH & EVERY TAMIL PERSON WHO TEARS FOR TAMILAN

NANGAL PUTAHIKAPADUVATHILLAI

VITAHIKAPPADUKIROM

by PK PERUMAL,United States
Posted on மே 20,2009,16:27 IST

Pirpakaran was killed by SLA, while he was trying to escape by Ambulance. In that case where is the Ambulance now ? If the person trying to escape, will he go with proper uniform & identity card. Fools only belive this story. Long live Pirpakaran !
by v christopher,Yemen
Posted on மே 20,2009,14:51 IST

Mr Raj Indian You Know the history of tamil elam, in the beginig stage they have stated in Gandiya way later on they changed Nethagi Path Please dont write anything with out knowing past ,pls keep quite ok.
We Must Proved that we got such a Great Person Mr .Prabakaran
by R kumaran,India
Posted on மே 20,2009,13:19 IST

prabhakaran he is the legend of tamil leader
I proudly say he gave rights to say that tamilan
He is the legend and father of tamil people
he not died, he alive for all of the tamil people heart
i pray to god for prabhakarn to reentry to tamil eelam.
if prabhakaran is died means, tamil is die.
by s vijay,India
Posted on மே 20,2009,12:39 IST

K,B,பாலா (சிங்கப்பூர்) அவர்களே ! ரூ.500 க்கும் அரை பிளேட் பிரியாணிக்கும் விலை போகாத உண்மைத் தமிழர்களின் எண்ணங்களை அருமையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.நன்றி.
by K Kuppan,Singapore
Posted on மே 20,2009,12:36 IST

dear people belive some where praba alive. pray god to give him to long life. he will come one day
by b. dhanashekar,India
Posted on மே 20,2009,12:28 IST

அவர் இறந்து இருக்கலாம், but meendum uyir theluvar. He is great expample of good tamilians.
by s suban,Singapore
Posted on மே 20,2009,12:28 IST

He never die. He alway live in the heart of tamil people all over the world.
He is the real ''THAMILINA THALIVAR''
by N sivakumar,India
Posted on மே 20,2009,12:16 IST

Every thing is suspense but very soon will come out truth.
by sp poosaidurai,India
Posted on மே 20,2009,12:13 IST

To all the indians and all srilankan tamilians (who are writing posts here).. Please understand that he started off his campaign for tamilian freedom correctly but later on the path chosen by him to eliminate all his opponents including Rajiv Gandhi was totally wrong. He is nothing but a terrorist now. No need to mourn his death. Tamilians, pls dont get emotional. If he had chosen to fight this war by non violence, the entire world would have supported him.
by Raj Indian,India
Posted on மே 20,2009,11:40 IST

prabakaran is the legend..
He could have become chief minister and enjoy his life if he give up his tamil ealem. He never gave up.Dont compare him with dirty indian politician. They all are fraud.

saludos cap!!.

''May your soul rest in peace''. i hope our ealam brothers never giveup his ambitions.
by s sekar,Nigeria
Posted on மே 20,2009,11:34 IST

SRILANKA PROBLEM DID NOT SOLVE THRU NORWAY PEACE TABLE ,WHY ?

PEOPLE IN VANNI DID NOT HAVE EVEN BASIC THINGS WHILE THE LTTE HAD ALL THE ROCKETS AND WEAPONS .

ATLEAST PEOPLE MUST THINK OF THE COMMON PEOPLE AND NOT FOR ORGANISTIONS

WE ALL MUST REMEMBER IN ORDER TO PROTECT OURSELVES WE CANNOT CARRY ARMS TO HURT OTHERS

ONLY AHIMSA IN GANDHIJI''S WAY CAN SOLVE PROBLEMS

21 ST CENTURY PEOPLE NO NEED TO HELP OTHERS BUT PLS DO NOT HURT COMMON PEOPLE
by A NAJIM,Singapore
Posted on மே 20,2009,11:28 IST

கண் இருந்தும் குருடனாக இருந்த என்னை போன்ற மனிதர்களை இந்த தமிழ் உலகம் மன்னிக்காது. மாவீரனை இழந்துவிட்டோம், மண்டியிட்டு அழவே முடிகிறது என்னால். என்னை மன்னி தமிழ் உலகமே.
by N Madhusudhanan,India
Posted on மே 20,2009,11:26 IST

முப்பது ஆண்டு கால போரின் முடிவு இதுவா இருக்க வேண்டும்? ''இருக்காது'' உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர். போராடும் குணம் கொண்டவர். இப்படியா மாண்டு போவார்? அவருடன் எனக்கு நிறைய மாற்று கருத்துகள் உண்டு. இருந்தும் அவர் மாண்ட கூடாது. மீண்டும் உயிர் பித்து இலங்கையை வெல்ல வேண்டும். ஈழம் மலர வேண்டும்.
by N Thameez,United Arab Emirates
Posted on மே 20,2009,11:20 IST

Super hero Mr.Prabhakaran struggled past 33 years for their home land in the name of tamil eelam.But now passed away.we are pray for his sole and his son ,other freedom fighters as well as tamil civilians to stay sole in heaven.but their AATMAA will continue in srilanka fir his aim.Rajapakshe should not forget ,he has to wait his punishment.As i sincelery salute LTTE
by G jeevanandam,India
Posted on மே 20,2009,11:06 IST

I never such a dedicated person like you.

I just laydown my head on your legs for your

dedication for tamils.
by S NANDHAKUMAR,India
Posted on மே 20,2009,10:58 IST

இந்திய உணர்வுக்குள் தமிழ் உணர்வு தூங்கிவிட்டது!!

உணர்வு இல்லாத தமிழர்களால்
இன உணர்வுமிக்க தமிழ் தலைவன் தூங்கிவிட்டான்.....

என்ன சொல்ல.....

போராளியை தீவிரவாதியாகி,
விவ‌ர‌ம் அறிந்தும் வீரத்தை விற்ற தமிழர்கள் நாம் !

இல்லை இல்லை இந்தியர்கள் நாம் ! !

பல ஆயிரம் உயிர்க‌ளின் க‌ரும்குருதியை
பல தலைமுறைக்கும் வரலாறாக,
பாவ சுமையாக விட்டு
செல்ல போகும் தமிழர்கள் நாம் !

இல்லை இல்லை இந்தியர்கள் நாம் ! !

ஆ...!

அதோ கேட்கிறது

''ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால் மடிவன்....''

இதோ ...தன்மான தமிழ் த‌லைவன் மடிந்தான்

ஆஆ... இன்னும் ஏதோ கேட்கிறதே....

''வினை விதைத்த‌வ‌ன் வினை அறுப்பான்''

அதோ ...தமிழர்கள் விதைத்த‌தை அறுக்க‌ த‌யாராகிறார்க‌ள்

இல்லை இல்லை இந்தியர்கள் த‌யாராகிறார்க‌ள் ! !

வாழ்க போராளிக‌ள் ! போற்றுவோம் அவர்கள் தியாகத்தை !!

வ‌ளர்க அனைத்திலும் தமிழர்களின் பங்கு!!

இல்லை இல்லை இந்தியர்களின் பங்கு!!
by K Malar,India
Posted on மே 20,2009,10:54 IST

prapakaran,the name no more now,but his legacy
will not die.he lives in the heart of every true tamilian.
his way may be wrong but his thoughts over tamil elam was very correct.i pray to the god for him and his
friends.rest in peace
by s sivaramachandran,India
Posted on மே 20,2009,10:52 IST

I salute whole heartedly to my beloved hero,Velupillai Pirpakaran ! And his concept will remain in the people''s heart until Tamil Elam is born. 100% tamilians can''t get equal status in the sinhalese govt. for ever & Karuna will be kicked off from the Ministry if Pirpakaran death is true. God will answer soon.
by V christopher,Yemen
Posted on மே 20,2009,10:51 IST

Prabaharan never ever die. Because He is living in all tamilian hearts. He is a unique tamil leader. He is great expample of all tamilians. We will have to avoid all tamilian policains dramas. Because All tamilian Pliticians are giving sound only. Prabaharan only gave his entire body for tamilians. For example Mr.karunaneethi never go delhi for tamil eelam issues. At the same time he is in delhi now. because he wants to get ministry for his family. I tell you all tamilians. Atleaset we will have to take correct dission... otherwise after some years no tamilians in the word..........

Kannan
by R Kannan,India
Posted on மே 20,2009,10:38 IST

கவிதை பாடிய கனவான்களுக்கு கவிதை மிக அருமை அருமை!!!! அப்படியே கவிதை பாடிட்டு ஸ்ரீலங்காவிக்கு போயிடுங்க இங்க இருக்கற மக்களாவது நிம்மதியா இருப்பாங்க ! அப்புறம் எப்படி அது பிரபாகரன் உடம்பே கிடையாதுன்னு சொல்றீங்க எப்படி ரூம் போட்டு யோசன பன்னுவீங்களோ !
by p tamil,India
Posted on மே 20,2009,10:35 IST

Ulagam azhiyum varai
Tamilum Prabakaranum
nilathu erupar
by m Manikandan,New Zealand
Posted on மே 20,2009,10:33 IST

ஒரு மாவீரன் தனது இனத்துக்காக இறந்து கிடக்கிறான். தமிழ் இனத்திற்காக தன் உயிரையும் தனது மைந்தன் உயிரையும் இழந்து கிடக்கிறான். பிரபாகரா !! என் தலைவா !! நீ மட்டும்தான் தமிழர்களின் உன்னத தலைவன் !! சுயநலமில்லாமல் தமிழ் மக்களுக்காக வாழ்நாள் முழுதும் போராடி மடிந்தாயே !! நீதான் தமிழர்களின் ஒரிஜினல் தலைவன் !!! மற்றவரெல்லாம் டூப்ளிகேட். 5000 கோடி ரூபாய் சொத்தும், அளவுக்கதிகமான பேராசையும் கொண்டு, சொந்த இனத்தையே அழிக்க துணைபோய், இன்று தான் பெற்ற மக்களுக்கு மந்திரி பதவி வாங்க டெல்லியில் தவமிருக்கும் மானங்கெட்ட மக்களெல்லாம் தலைவனாம் !! எல்லாம் மானங்கெட்ட தமிழனின் தலையெழுத்து !!

இத்தாலியில் பிறந்ததெல்லாம் அன்னையாம் !!
எங்களுடன் பிறந்து என் இனத்துக்காக போராடி மாண்ட நீ தலைவனில்லையாம் !!
வெறுங்கை வீசி வந்து வாரிசுகள் பல கண்டு அனைத்துக்கும் அடுத்த 20 தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்துள்ளவர்தான் தலைவராம்.
வெட்கங்கெட்ட மக்கள் !!!

வாழ்க உன் புகழ் !! வாழ்க உன் மரணம் !!!

வருத்தங்களுடன்
-பாலா-

by KB Bala,Singapore
Posted on மே 20,2009,10:12 IST

It''s very hard to digest that the great tamil leader prabhakaran killed. But we should accept the truth. Since no one is alive in that area. He is the real hero... we must salute him..
by N Madan,India
Posted on மே 20,2009,09:33 IST

பிரபாகரன் இறந்து விட்டாரா அல்லது இல்லையா என்பது எல்லோருக்கும் சந்தேகமாக உள்ளது. என் எண்ணப்படி, அவர் இறந்து இருக்கலாம். அவர் உடம்பு முழுவதும் கரிந்து போயிருக்கலாம்.

படத்தில் தோன்றும் முகம் மெழுகினால் செய்த முகமாக இருக்கலாம். அதனை, மற்ற இறந்த உடம்புடன் ஒட்டி பிடித்துள்ளனர். இறந்த உடம்பிற்கு விடுதலை புலிகளின் உடையை போட்டுஉள்ளனர்.
by A Selvaa,Taiwan
Posted on மே 20,2009,07:59 IST

even after his death, some , like vaiko, nedumaran, etc., want to use his name to do their politics by creating a doubt of his death among the people.
by vb ram,India
Posted on மே 20,2009,06:33 IST

இதற்கு முன்பும் இரண்டு முறை சிங்கள அரசு பிரபாகரான் கொல்லப்பட்டர் என செய்தி வெளியிட்டு பிறகு அது முழுப்பொய் என்று தெரிய வந்தது.இப்பொழுதும் முன்னுக்குப் பின் முரணாக ராக்கெட் வெடித்து இறந்தார் என்றும் பிறகு துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை அரசு செய்திகள் வெளியிடுகின்றது. பத்திரிகையாளர்களை பட்டப்பகலில் கடத்திச் சென்று கொலை செய்தும் பொதுமக்களுக்கு சுதந்திரமாக பேசவோ கருத்துச் சொல்லவோ அணுமதிக்காமல் தொலைபேசியில் கூட பேச விடாமல் கண்காணிக்கும் இலங்கை அரசின் செய்திகளை முற்றிலும் நம்ம்பமுடியாது. அனைத்துலக பத்த்ரிகையாளர்கள் இலங்கை சென்று சுதந்திரமாக செய்தி சேகரிக்க வழி வகுக்க வேண்டும்.அதுவரை இலங்கை அரசின் திட்டமிட்ட பொய் செய்திகளை நம்பாமல் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றே நினைக்க வேண்டியுள்ளது. மாவீரர்கள் இறப்பதில்லை மீண்டும் முளைக்கிறார்கள்.
by K Kuppan,Singapore
Posted on மே 20,2009,06:30 IST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக