வியாழன், 21 மே, 2009

கலைஞர் அவர்களைப் பின்பற்றட்டும் மன்.

இராசியான நாள்கள்...

தினமணி
First Published : 21 May 2009 12:10:00 AM IST

Last Updated :

புது தில்லி, மே 20: காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004-ஆம் ஆண்டு பதவியேற்றது. அப்போது நடைபெற்ற நிகழ்வுகளை அப்படியே தற்போதும் கடைப்பிடிக்கிறது.

காங்கிரசு அரசு மீண்டும் பதவியில் அமர்வதற்கு இராசியான நாள்கள்கள்தான் காரணம் எனக் கட்சி கருதுவதால் அதன்படி நடக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதன்படி வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்பார்.

2004 - ஆம் ஆண்டு மே 19-ம் தேதியன்று மன்மோகன் சிங் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதன்படி இப்போதும் மே 19 அன்று மன்மோகன் சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல 2004-ம் ஆண்டு மே 22-ம் தேதி பிரதமராக பதவியேற்றார். அதேவழியில் இப்போதும் மே 22-ம் தேதி வெள்ளிக்கிழமை அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

2004- ஆம் ஆண்டு சூன் 2 மற்றும் 3 தேதிகளில் புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். அதேபோல தற்போதும் சூன் 2ஆம் தேதி மக்களவை கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2004-ம் ஆண்டு சூன் 4- ஆம் தேதி மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல தற்போதும் சூன் 4- இல் மக்களவைத் தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

2004,சூன் 5- ஆம் தேதி மக்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். அதேபோல தற்போது சூன் 5- ஆம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்த உள்ளார்.

100 நாள்களுக்கான செயல் திட்டம்: அடுத்த 100 தினங்களுக்குள் நிறைவேற்ற வேண்டிய முக்கிய செயல் திட்டங்கள் குறித்த அறிக்கையைத் தயாரிக்குமாறு அனைத்து அமைச்சகங்களையும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். கால வரையறையுடன் கூடிய இந்த திட்டங்களை செயல்படுத்துமாறு புதிய அமைச்சர்களுக்கு பிரதமர் வலியுறுத்துவார் என தெரிகிறது. அமைச்சகங்களின் முன்னுரிமை பட்டியலை ஒருங்கிணைக்கும் பணியை அமைச்சரவைச் செயலர் கே.எம். சந்திரசேகர் மேற்கொண்டுள்ளார்.

கருத்துக்கள்

இவற்றில் கலைஞர் அவர்களின் அறிவுரையையும் செயல்பாடுகளையும் மன்மோகன் சிங பெறுவது நன்றாக இருக்கும். ஏனெனில் சட்ட மன்றத்தில் அறிவிக்கப்படுவன உடனே ஆணைகளாக வருவதிலும் திட்ட முன்னேற்றங்கள் குறித்த துறைவாரியான கூட்டங்களை நடத்தி விரைவில் கால அட்டவணைப்படி முடிப்பதிலும் கலைஞர் அவர்கள் கருத்து செலுத்துவார். பதவிகளுக்காக மண்டி யிடுவதால் குறைவாக மதிப்பிட வேண்டா. கொலைக்காரக் கும்பலுடன் இணைந்து அவப் பெயர் சம்பாதித்ததற்கான விலையை நீங்கள் அவரிடம் கொடுத்ததுத்தானே ஆக வேண்டும்.
எனவே, செயல் திட்ட நடைமுறை முன்னேற்றம் குறித்துத் தமிழக அரசின் வழிமுறையைப் பின்பற்றுமாறு மன். அரசை வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/21/2009 4:22:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக