வியாழன், 21 மே, 2009

கொழும்பு செல்லும் எமனின் தூதர்கள்

கொழும்பில் பிரதமரின் சிறப்புத் தூதர்கள்

தினமணி
First Published : 21 May 2009 11:09:00 PM IST

Last Updated :

புதுதில்லி, மே 20: இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு, மறுவாழ்வுத் திட்டம் தொடர்பாக அதிபர் ராஜபட்சவிடம் பேச பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனன் இருவரும் புதன்கிழமை கொழும்பு சென்றனர்.

விடுதலைப் புலிகளை அறவே ஒடுக்கி அதன் தலைவர்கள் அனைவரையும் ஒழித்துவிட்டு போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அறிவித்துள்ள நிலையில் பிரதமரின் தூதர்கள் கொழும்பு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கருணாநிதியுடன் ஆலோசனை: இலங்கைக்குப் புறப்படும் முன் தமிழக முதல்வர் கருணாநிதியை நாராயணன், மேனன் இருவரும் சந்தித்தனர்.

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியது:

செவ்வாய்க்கிழமை (மே 19) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினேன். அதன் தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் புதன்கிழமை இலங்கை செல்கிறார்.

அங்குள்ள சூழ்நிலைகளை அறிந்து வந்து மீண்டும் என்னைச் சந்தித்து விவரங்களை அவர் என்னிடம் கூறுவார்.

இலங்கைத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவையும் நிறைவு செய்வோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியிருக்கிறார் என்றார் கருணாநிதி.

கிடைத்த தகவல்படி பிரபாகரன் உயிருடன் இல்லை: கருணாநிதியைச் சந்தித்துவிட்டு கொழும்பு புறப்படும்முன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த நாராயணன், அரசுக்கு கிடைத்த தகவல்படி பிரபாகரன் உயிருடன் இல்லை என்றார்.

போர்ப்பகுதியில் உள்ள தமிழர்கள், போர்ப்பகுதியிலிருந்து தப்பி முகாம்களுக்கு வந்துள்ள அகதிகளும் மிக மோசமான நிலையில் உள்ளனர். அவர்கள் தண்ணீர், மருந்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி வாடுகின்றனர். அவர்களின் மறுவாழ்வுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உலக நாடுகள் இலங்கையை வலியுறுத்தி வருகின்றன.

ஈழத்தமிழர்கள் மறுவாழ்வுக்காக ரூ. 500 கோடி திட்டத்தை இந்தியா தயாரித்துள்ளது. முன்னதாக ரூ. 100 கோடி நிவாரண உதவியை இந்திய அரசு அறிவித்தது. தமிழக அரசு சார்பில் ரூ. 25 கோடி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் கெüரவமாக வாழவேண்டும் என்றால் அவர்களுக்கும் போதிய அதிகாரம் வழங்க அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கையை இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதை பிரதமரின் இரு தூதர்களும் ராஜபட்சவிடம் மீண்டும் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்கள்

உண்மைத் தமிழர்களின் உணர்வுகளைத் திரு சிவா பதிவு செய்துள்ளார். வேறென்ன சொல்வதற்கு இருக்கின்றது? நாம் வேதனையில் வாயை மூடிக் கொண்டிருக்கின்றோம். சிலர் பதவிகளின் எண்ணிக்கை குறைவினால் முழுக் குடும்பத்தவர்க்குமான வாய்ப்பு குறையுமோ எனக் கொடுமைகளை எதிர்க்காமல் வாயை மூடிக் கொண்டிருக்கின்றார்கள். இதுதான் வேறுபாடு. அங்கு சென்று பெறவேண்டியதைப் பெற்று உலகிலேயே சிறந்த படை எனச் சிங்களக் காடைளைப் புகழ்ந்து இவர்கள மட்டும் திருவாய் மலர்ந்து திரும்புவார்கள். உண்மை ஒரு நாள வெளியாகும். நம் கனவு யாவும் நனவாகும். இவர்களை அறக் கடவுள் தண்டிப்பார். தமிழ் ஈழம் மலரும்! வெல்லும் ! வாகை சூடும்! - இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/21/2009 3:49:00 AM

சிறப்புத் தூதர்களா? தமிழ் மக்களின் மரண தூதர்களா? இவர்களைக் காணும்போது பெண் இயமனது தூதர்களாகவே எனக்குத் தெரிகிறது. தமிழினம் அழிந்து சாம்பலாகிக் கடலில் கலக்கிறது. தன்மானம் கெட்ட தமிழ்த் தலைமைகளோ பதவி எச்சிலுக்காக பெண்இயமனின் காலடியில் கிடக்கிறது.தூ.................! இனியென்ன நாரயண மேனன்களே , தமிழனின் குருதியைப் புசித்துவிட்டு எலும்புகளைச் சூப்பிவிட்டு, இரண்டு பானைகளில் எடுத்துவந்து ஒன்றை கோபாலபுரத்துக்கும், ஒன்றை அலகாபாத்துக்கும் கொடுங்கள் சுவைபார்த்து மகிழட்டும்.
By M.Sivaa,London
5/21/2009 2:33:00 AM

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது உடல் என்று தாங்கள் அடையாளம் கண்டுள்ள உடல் மீது மரபணு பரிசோதனை எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
By S.Palanivelu
5/20/2009 11:38:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக