திங்கள், 18 மே, 2009

' மத்தி' தமிழ்ச் சொல்லே

செம்மொழி நிறுவனப் பெயர்ப்பலகையில் தமிழ் இடம்பெறுமா?

TN Tamil Center
-பொன்மொழிவேந்தன்

சென்னையில் செம்மொழி நிறுவனம் அமைந்துள்ளமை மகிழ்ச்சிக்கு உரிய ஒன்றாகும். அதன் பெயர்ப் பலகையில் Central Institute of Classical Tamil என ஆங்கிலத்தில் கீழே உள்ளது. அதற்கு நிகராகச் 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' என மேலே உள்ளது. இங்கு Central என்பதை "மத்திய" என்ற பிறமொழிச் சொல்லால் குறிப்பிட்டுள்ளனர். Central என்பதற்கு"நடுவண்" என்ற தமிழ்ச்சொல்லை ('நடுவண் ஐந்திணை'-தொல்காப்பியம்) ஆளுவதே பொருத்தம்.

மைசூரில் உள்ள Central Institute of Indian Languages என்பது இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் என்றே தமிழில் ஆளப்படுகிறது.அவ்வாறு இருக்க நடுவண் என்று பயன்படுத்தாமல் 'மத்திய' என்ற சொல் ஆளப்பட்டது எவ்வாறு?.முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தால் கட்டாயம் ஆவன செய்திருப்பார்.

எனவே "செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம்" என்று இருப்பதே பொருத்தம். சரியானது.

தமிழை வளர்க்க நினைக்கும் இடத்திலேயே தமிழ் இல்லையே?
"ஊரைத்திருத்தும் முன் உலகைத் திருத்தும்முன் உன்னைத் திருத்தடா தமிழா!" என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதை நினைவிற்கொள்வோம்.முதற்கோணல் முற்றுங்கோணலாகி விடுவதற்குள் திருத்துவோம்.

எண்பேராயம், ஐம்பெருங்குழு, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர், செயலாளர் இவர்களுக்கு இது கண்ணில் படவில்லையா? கருத்தில் படவில்லையா?



பதிவு செய்தவர்: Ilakkuvanar Thiruvalluvan பதிவு செய்தது: 30 Jul 2008 03:11 pm

தமிழில் உள்ள பல நல்ல தமிழ்ச் சொற்களை அயல் மொழிச் சொற்களாகத் தவறாக எண்ணும் பழக்கம் நம்மிடம் உள்ளது. மத்து என்பது நடுவில் வைத்து கடையப் பயன்படுத்தப் படும் ஒரு பொருள். இதன் அடிப்படையில் எழுந்த நல்ல தமிழ்ச் சொல்லே மத்தி என்பது.மத்தி, மையம், நடு எல்லாம் தமிழ்ச் சொற்களே. எனவே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பெயரை மாற்ற வேண்டிய தேவை எழவில்லை.அன்புடன், இலக்குவனார் திருவள்ளுவன்,vanakkam@hathway.com or thiru2050@yahoo.co.in or cell: 9884481652
[ அனைத்து கருத்துக்களையும் படிக்க.... ]

பதிவு செய்தவர்: Ilakkuvanar Thiruvalluvan பதிவு செய்தது: 30 Jul 2008 03:11 pm

தமிழில் உள்ள பல நல்ல தமிழ்ச் சொற்களை அயல் மொழிச் சொற்களாகத் தவறாக எண்ணும் பழக்கம் நம்மிடம் உள்ளது. மத்து என்பது நடுவில் வைத்து கடையப் பயன்படுத்தப் படும் ஒரு பொருள். இதன் அடிப்படையில் எழுந்த நல்ல தமிழ்ச் சொல்லே மத்தி என்பது.மத்தி, மையம், நடு எல்லாம் தமிழ்ச் சொற்களே. எனவே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பெயரை மாற்ற வேண்டிய தேவை எழவில்லை.அன்புடன், இலக்குவனார் திருவள்ளுவன்,vanakkam@hathway.com or thiru2050@yahoo.co.in or cell: 9884481652
பதில் | அவதூறு குறித்து தகவல் தர

பதிவு செய்தவர்: தி ஈழக்கதிர் பதிவு செய்தது: 31 Jul 2008 09:53 pm

மத்தி என்பது தமிழ்ச்சொல்லே எனும் விளக்கம் அருமையாகவும் ஏற்கக்கூடியதாகவும் உள்ளது.
ஆனால் செம்மொழி நிறுவனத்தின் முழுப்பெயர் சரிதானா என விளக்கவும் வேண்டுகிறேன்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர

பதிவு செய்தவர்: இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்தது: 01 Aug 2008 07:36 pm

நல்லகேள்வி.பெயரில் தவறு உள்ளது, தனிக் கட்டுரையாகத் தருகிறேன‌்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர

பதிவு செய்தவர்: நகுலன் பதிவு செய்தது: 29 Jul 2008 02:20 pm

ஊரைத்திருத்தும் முன் உலகைத் திருத்தும்முன் உன்னைத் திருத்தடா தமிழா!" கருத்து மிகச்சரி..ஆனால் இது ஒரு மொழிபெயர்ப்பு....ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது என்பது உண்மை.அப்படி மொழிபெர்ப்பு செய்யும் பொது இலக்குமொழியின் தன்மை மாறாமல் தரவேண்டியது மொழிபெர்ப்பாளருடைய கடமை ஆனால் அதில் இந்த மொழிபெயர்ப்பில இன்னும் பல தவறுகள் உண்டு.'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்'என்பது Central Institute of Classical Tamil நிகரனாகத் தரப்பட்டுள்ளது...சரியாக மொழிபெயர்த்தால 'செந்தமிழுக்கான நடுவண் நிறுவனம்'என்பதே சரியானதாக அமையும் என்று நான் கருதுகின்றேன்...ஆய்வு என்ற சொல் எங்கிருந்து வந்தது....மேலும் நன்கு ஆய்வு செய்தோமானால் செம்மொழி என்ற சொல் தேவையில்லை...மொழி என்ற சொல் எங்கிருந்து வந்தது...இது மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை என்று பொறுப்பானவர்கள் மறுத்தால் மிக அருமையாக ஒரு பெயரைப் பயன்படுத்தி இருக்கலாம் செந்தமிழில்.ஆக இதில் பிறமொழிச்சொல் மட்டும் அல்லாது 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' என்பதில் பொருள் பிழையும் மொழிபெயர்ப்புப் பிழையும் இருப்பதை நீங்கள் அறியலாம் சற்று அந்த சொற்றடரைப் படித்ததுப்பாருங்கள் உங்களுக்குப் புரியும் ....எல்லாவற்றிக்கும் மேல் இந்த செந்தமிழுக்கான நடுவண் நிறுவனம் அமைந்தை எண்ணி மற்றும் இதற்காக பல்வேறு வகையில் போராடிய நமது முதல்வர் அய்யா அவர்களைப் பராட்டுவதும் தான் சிறந்தது.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர

பதிவு செய்தவர்: thamizhan பதிவு செய்தது: 28 Jul 2008 05:56 pm

good work

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக