செவ்வாய், 19 மே, 2009

தலையங்கம்
ஒவ்வொரு துளியிலும்...
தினமணி

First Published : 19 May 2009 10:33:00 PM IST



தமிழீழத்துக்காக விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுவந்த 33 ஆண்டு கால போராட்டத்துக்கு கசப்பான முடிவு ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோனி உள்பட முக்கியத் தலைவர்கள் பலரும் ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்திருக்கிறது.

பேச்சுவார்த்தைக்கு முன்வந்து போர்நிறுத்தம் செய்வதாகப் புலிகள் அறிவித்த பின்னரும் இலங்கை அரசு போரை நிறுத்த முன்வரவில்லை. இந்தப் போரை நிறுத்த இந்திய அரசும் எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்திய அரசின் மெத்தனத்துக்கும் நாடகத்துக்கும் தமிழக அரசும் ஒத்திசை நிகழ்த்தியது. திட்டமிட்டு நடந்தேறிய நாடகம் தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட வேண்டும் என்பதுதான் அதிபர் ராஜபட்சவைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலர் விடுத்த கோரிக்கையாக இருந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இரு தினங்களுக்கு முன்பே, "துப்பாக்கிகளை மெüனத்தில் ஆழ்த்துகிறோம்' என்ற புலிகளின் அறிவிப்பே, அவர்கள் ஒட்டுமொத்தமாக சயனைடு அருந்தி தற்கொலை செய்யவுள்ளனர் என்பதை உணர்வுள்ள எந்தத் தமிழனாலும் உணர முடியும். பிரபாகரன் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் தப்பிச் செல்ல முயன்றபோது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுவது பிரபாகரனை களங்கப்படுத்தும் நோக்கமே தவிர வேறில்லை.

வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பொருத்தவரை இறுதிவரையிலும் அவர் ஒரு தமிழ்ப் போராளி மட்டுமே. ராஜீவ் காந்தி மனிதகுண்டால் கொலையுண்ட பின்னர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாகவும் கொலைக் குற்றவாளியாகவும் பார்க்கும் நிலைமை ஏற்பட்டது. இலங்கையில் தமிழ் அடையாளத்தையும் அங்கே தம் சொந்த மண்ணை, தொழிலை, மனித உறவுகளை இழந்து நின்ற மக்களும் பிரபாகரனும் மட்டுமே இதற்கு நியாயத் தீர்ப்பு சொல்ல முடியும்.

மனத்துயரும் வலியும் அறியாதவர்களால் ஒரு எதிர்வினையை முழுமையாகப் பார்க்க இயலாது. பிரபாகரன் மீது தீர்ப்பு சொல்லத் தகுதியுள்ளவர்கள் அந்த மண்ணில் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே.

சேகுவேரா உள்ளிட்ட பல போராளிகளும் தங்கள் விடுதலை வேள்விக்கான காரணங்களை, அரசியலைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஹிட்லர் கூட தனது நியாயத்தை தன்வரலாறாகப் பதிவு செய்திருக்கிறார். பிரபாகரன் இதுவரை எத்தகைய பதிவுகளையும் செய்திருக்கவில்லை. அது ஏன் என்பது மிகப்பெரிய புதிர். அந்தப் புதிருக்குக் காரணம் தெரியாதவரை பிரபாகரனை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

தன்னைப் போன்றே போராடிய பிற சகோதர அமைப்புகள் அழிக்கப்பட்டது வேறு எந்த நாட்டு விடுதலைப் போரிலும் பார்க்க இயலாதவொன்று. பிரபாகரன் அதனைத் தனது நியாயங்களுக்காக இலங்கையில் நிகழ்த்தியதன் விளைவு, தற்போது புலிகளுக்குப் பின் தமிழர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை என்ற வெறுமை ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை, விடுதலைப் புலிகள் அரசியல் பாதைக்குத் திரும்பியிருந்தால் இந்த வெறுமை முழுமையாக இட்டு நிரப்பப்பட்டு இருக்கலாம்.

தனது பலம் வாய்ந்த கொரில்லா போர்முறையை கைவிட்டு, ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரிடும் வழக்கமான போர்முறைக்கு மாறியதுதான் விடுதலைப் புலிகளின் பலவீனம் என்றும், கேப்டன் கருணாவின் ஆலோசனைகளும், இந்திய அரசின் ஆயுத உதவிகளுமே இந்த இயக்கத்திற்கு முடிவை ஏற்படுத்தின என்பதும் பொதுவான கணிப்பு. இருப்பினும், இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை.

இலங்கைத் தமிழர் மீதான ஒடுக்குமுறைதான் புலிகள் அமைப்பு பிறக்கக் காரணமாக இருந்தது. இன்று புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு சொல்லலாம். ஆனால் இலங்கைத் தமிழரின் நியாயமான கோரிக்கை நிறைவேறாதவரை, அங்கே ஒவ்வொரு பெண்ணின் வயிற்றிலும் ஒரு புலி பிறந்துகொண்டேதான் இருக்கும்.

விடுதலைப் புலிகளும் களத்தில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், ஈழத் தமிழர் பிரச்னைக்கு இலங்கை அரசு இனி அரசியல் தீர்வு ஏற்படுத்தும் என்றும், நிரந்தர அதிகாரப் பகிர்ந்தளிப்புக்கு சம்மதிக்கும் என்றும் நினைப்பது கனவாகத்தான் இருக்கும். இந்தப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணாதவரை ஈழத் தமிழர் எழுச்சியும், தீவிரவாத உணர்வும் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருக்குமே தவிர அடங்கிவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

இலங்கைப் பிரச்னை தேர்தலைப் பாதிக்காது என்று சொன்னவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். மீண்டும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கலாம். ஆனாலும் மத்திய அரசில் அமைச்சராக உறுதிமொழியேற்றிடும் ஒவ்வொரு தமிழக அமைச்சரின் கையொப்பத்திலும் இலங்கைத் தமிழரின் கரிய ரத்தம் கசிந்திருக்கும். மையின் ஒவ்வொரு துளியிலும் இலங்கைத் தமிழரின் முகம் இருக்கும். எத்தகைய கண்ணீரும், நிவாரண உதவிகளும், வழக்கமான மணிமண்டபங்களும், மலர்அஞ்சலிகளும், தடை நீக்கங்களும், அதனை மாற்றிவிடாது.

கருத்துக்கள்

தினமணியின் ஒவ்வொரு சொல்லும் வரலாற்றில் உண்மையைப் பதிவு செய்யும் உளியாகும்! திட்டமிட்ட இனப்படுகொலையில் ஆரிய அரசுகள்தான் செயல்படுத்தின என்றால் தமிழினம் எனக் கூறிக் கொள்பவர்களும் இதற்குத் துணை போன அவலத்தை என்னென்பது? வரலாற்றில் அழியாத களங்கத்தை ஏற்படுத்திய இவர்களுக்கு யார் பாடம் புகட்டுவது? ஊர்திகளில் குண்டு வீசி தாக்கிய போது எதிர்த் தாக்குதலே செய்யவில்லை எனச் சிங்கள அரசு கூறும் பொழுது மாவீரர்கள் தப்பி ஓடியதாகப் பழி சுமத்துவதை தினமணியாவது சுட்டிக் காட்டுகின்றதே! மாவீரர்களே! விதைக்கப்பட்ட நீங்கள் மீண்டு எழுவீர்கள்! காற்றில் கலந்த கனவு ஒருநாள் நனவாகும்! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் அவர்களே! மாவீரர் சுபாசு சந்திரபோசு போன்று நீங்கள் எங்கோ நலமாக ஆனால் வேதனையுடன் உள்ளீர்கள் என நம்புகிறோம்! தமிழ் ஈழம் வெல்க! துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2009 4:26:00 AM

ஒரு தூயதமிழனாய்,தாயாய்,தகப்பனாய்,வீர மறவனாய் உலகோர் உள்ளத்திலெல்லாம் உட்கார்ந்திருந்த உன்னத உத்தமனே.ஒரு தமிழ் பெண்ணாய் என் தந்தை,சகோதரன்,உற்றார் உறவினர்,மீசை வைத்த ஆண்மக்கள் அனைவரையும் காறி உமிழ்கிறேன், கருணா துரோகிஎனில் கையாலாகாத நீங்கள் எல்லாரும் எல்லாரும் பாவத்தின் பங்குதாரர்களேபாவத்தின் பங்குதாரர்களே .... கருணா துரோகிஎனில் கையாலாகாத நீங்கள் எல்லாரும் பாவத்தின் பங்குதாரர்களே ...
By Anandhi-Madurai
5/19/2009 3:59:00 AM

THIS IS NOT THE WAR AGANIST TERRORISM. BUT THIS IS A WAR BETWEEN TWO DIFFERENT RACES. THE MAJORITY RACE USING EXTERNAL HELP HAS OVERCAME THE RESISTANCE AND SUPPRESED THE RIGHTFULL DEMAND OF TAMILS FOR FREEDOM. THIS SAD END IS NOT GOING TO GIVE EELAM TAMILS THEIR RIGHTS. BUT AS USUAL THEY WILL BE FORCED TO LIVE AS SLAVES. HOW LONG? NOT TOO LONG. ONE DAY TAMILS WILL HOIST THEIR FLAG OF FREEDOM. THE GREAT WARRIORS WHO GAVE THEIR LIFE FOR THE FREEDOM OF THEIR MOTHERLAND WILL SHOWER THEIR BLESSINGS FROM THEIR ETHERNAL WORLD. DEAR BRAVE HEARTS, WE TAMILS BOW OUR HEADS BEFORE YOU, THE DUTIFULL SONS WHO SHED THEIR BLOOD FOR LIBERTY. LONG LIVE FREEDOM. LONG LIVE TAMIL EELAM.
By Paris EJILAN
5/19/2009 3:33:00 AM

இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை-Really same to born in Tamil nadu and speak in tamil.
By Mani
5/19/2009 2:26:00 AM

காட்டி கொடுத்தவர்கள் வாழ்ந்ததாய் சரித்திரம் இல்லை This is for you to Thinamani.
By Tamilan
5/19/2009 12:59:00 AM

THINAMANI YOUR HAND ALSO EELAM TAMIL BLOOD AND SINHALA DOGS MONEY DON'T ACT AS YOU ARE GOOD WE KNOW YOU VERY WELL. HOW MANY TIMES YOU GOT MONEY FROM SRI LANKAN EMMBASY? ASK AMSA HE WILL TELL YOU. ALL INDIANS HANDS EELAM TAMIL BLOOD.BE HAPPY PLEASE LET US DO WHAT EVER WE WANT IT PLEASE DO NOT TALK ABOUT US. OUR OWN PEOPLE ALL OVER THE WORLD THEY WILL HELP US. TELL YOUR ITALIAN REASURENT SERVING LADY WE DON'T NEED ANY THING FROM YOU PEOPLE. WE ARE REAL TAMIL PEOPLE. WE TRUST ONLY OUR BLOOD PEOPLE NOT MIX HIDI BOOLD PEOPLE.
By Tamilan
5/19/2009 12:57:00 AM

"இலங்கைப் பிரச்னை தேர்தலைப் பாதிக்காது என்று சொன்னவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். மீண்டும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கலாம். ஆனாலும் மத்திய அரசில் அமைச்சராக உறுதிமொழியேற்றிடும் ஒவ்வொரு தமிழக அமைச்சரின் கையொப்பத்திலும் இலங்கைத் தமிழரின் கரிய ரத்தம் கசிந்திருக்கும். மையின் ஒவ்வொரு துளியிலும் இலங்கைத் தமிழரின் முகம் இருக்கும். எத்தகைய கண்ணீரும், நிவாரண உதவிகளும், வழக்கமான மணிமண்டபங்களும், மலர்அஞ்சலிகளும், தடை நீக்கங்களும், அதனை மாற்றிவிடாது!" காட்டி கொடுத்தவர்கள் வாழ்ந்ததாய் சரித்திரம் இல்லை !
By Jagadeesh
5/18/2009 10:54:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக