தமிழர்களின் தேசிய மொழியும் தேசிய இனமும் தமிழே! பிற மொழியினருக்கும் அவரவர் மொழியும் இனமுமே தேசிய மொழியும் தேசிய இனமும் ஆகும். வீட்டிலும் வெளியிலும் வெவ்வேறான இறைக் கொள்கையைச் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ள கார்த்தி, இந்தியா தேசிய இனங்களின் கூட்டரசாகத் திகழ்ந்து வலிவும் பொலிவும் பெறப் பாடுபடவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 31 Dec 2010 02:39:25 AM IST
முற்போக்கு சிந்தனையாளர் பேரவை சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழாவில் ரா.அ.பத்மநாபனை கெüரவிக்கிறார் கார்த்தி ப.சிதம்ப
சென்னை, டிச. 30: மேடையில் நாத்திகம், வீட்டில் ஆத்திகம் என வாழ்பவர்கள்தான் இங்கு அதிகம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.முற்போக்கு சிந்தனையாளர் பேரவை சார்பில் சென்னையில் "பாரதியைப் போற்றுவோம்' என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாவது:பாரதியார் தமிழோடு தேசியத்தையும் வலியுறுத்தினார். அவரது கவிதைகளில் தேசியம்தான் மிளிர்கிறது. ஆனால், தமிழகத்தில் தமிழ் உணர்வு உள்ளவர்கள், தமிழைப் பற்றி பேசுபவர்கள் தேசியத்தை வலியுறுத்துவதில்லை.அதுமட்டுமல்ல, தேசியம் பற்றிய பேசினால் தமிழுக்கு விரோதி என்பது போல சித்திரிக்கிறார்கள். தமிழகத்தில் மாநிலக் கட்சிகள் தேசியக் கொடியேற்றி யாராவது பார்த்தது உண்டா? தமிழ், ஈழம் இந்த இரண்டையும் பற்றி பேசினால்தான் தமிழ் உணர்வாளர் என்பது போன்ற தோற்றம் இங்கே ஏற்பட்டுள்ளது.தமிழ் உணர்வு பற்றி பேசுபவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.தமிழையும், ஆன்மிகத்தையும் யாரும் பிரிக்க முடியாது. கடவுளை கேலி செய்வது தமிழகத்தில் நாகரிகமாகிவிட்டது. ஆனால், மேடையில் நாத்திகம், வீட்டில் ஆத்திகம் என வாழ்பவர்கள்தான் இங்கு அதிகம்.மக்கள் சரியாக இருந்தால்தான் அரசியல்வாதிகள் சரியாக இருப்பார்கள். விலை மதிக்க முடியாத வாக்குரிமையை விற்கும் மக்கள் இருக்கும் நாடு எப்படி வளரும்?ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் எதிர்காலத்தில் ஜாதி கட்சிகள் பெருகும். ஒவ்வொரு ஜாதியினரும் தங்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு கேட்பார்கள். இதனால் மிகப்பெரிய அரசியல், சமுதாயப் பிரச்னைகளை இந்தியா சந்திக்கப் போகிறது.நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன் என்பதற்காக கட்சி எடுóக்கும் எல்லா முடிவுகளையும் ஏற்க முடியாது.தமிழகம் இன்று சினிமா மாயையில் சிக்கித் தவிக்கிறது. சினிமாவில் வரும் டாக்டரிடம் நாம் சிகிச்சை பெறுவதில்லை. சினிமாவில் வரும் வழக்கறிஞர்களை வாதாட அழைப்பதில்லை.ஆனால், திரையில் வரும் நாயகர்களை நாடாள அழைக்கிறோம். சினிமாவுக்கு அப்பாற்பட்ட தலைமையே இன்றைய தமிழகத்துக்குத் தேவை என்றார் கார்த்தி சிதம்பரம்.தேர்தலில் போட்டியில்லை: அரசியல் வளையத்துக்கு வெளியே சென்று எந்தக் கருத்தையும் தமிழகத்தில் சொல்ல முடியவில்லை.ஒரு கருத்தைச் சொன்னால் கூட்டணிக் கட்சியினர் கோபித்துக் கொள்வார்களோ, எங்கள் கட்சியிலேயே மற்ற கோஷ்டியினர் காலை வாரிவிட்டு விடுவார்களோ என்று பயப்படும் நிலை உள்ளது. எனக்கு அந்தக் கவலை இல்லை. ஏனென்றால் நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றார் கார்த்தி சிதம்பரம்.முற்போக்கு சிந்தனையாளர் பேரவைத் தலைவர் தாம்பரம் நாராயணன், டி.கே.எஸ். கலைவாணன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் நந்தலாலா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே. சிரஞ்சீவி, முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக விழாவில் தமிழறிஞர்கள் ரா.அ. பத்மநாபன், சீனி. விஸ்வநாதன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
கருத்துகள்
எல்லாம் சரிதான். வாரிசு அரசியலும்தான் மக்களாகிய எங்களுக்கு பிடிக்கவில்லை என்ன செய்வது!
By Solomon
12/31/2010 9:50:00 AM
12/31/2010 9:50:00 AM
கார்த்திக்சிதம்பரம்பேசிய மேடையில் நாத்திகம்,வீட்டில் ஆத்திகம் தி.மு.க கட்சியினருக்கு மிக பொருத்தம்.இவரது பேச்சு புதிய கூட்டணி தேவை என்பதை சொல்லாமல் சொல்கிறது.
By பி.டி.முருகன் திருச்சி
12/31/2010 7:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/31/2010 7:21:00 AM