எசு.சி. என்பது பட்டியலிட்ட வகுப்பினர் என்றுதான் பொருள்படும். நாம்தான் தேவையின்றி மாறி மாறி அழைத்துக் கொண்டு வருகிறோம். ஆதித்திராவிடர்கள் எனச் சொல்வது தவறென உணர்ந்து ஆதித்தமிழர்கள் எனச் சொல்வாரும் உண்டு. மக்கள் வழக்கில் இவ்வாறு கூறலாம். ஆனால், அரசு பட்டியல் வகுப்பினர் என அரசியல் யாப்பிற்கு இணங்கக் குறிப்பிடுவதே முறையாகும். அதே நேரம பெயரில் ஒன்றும் இல்லை; வாழ்க்கை முறையில்தான் சிறப்பு உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் குழந்தைகள் (அரிசனம்) எனக் காந்தியடிகளால் அழைக்கப்பட்டபொழுதும் தீண்டாமை இருந்தது. இப்பொழுதும் முழு முன்னேற்றம் இல்லை. அவர்களின் நிலை மாறினால் எப்படி அழைத்தாலும் ஒன்றும் இல்லை என்னும் நிலைக்கு வந்து விடுவர். எனவே, பட்டியல் வகுப்பினர் நிலையை உயர்த்துவதில் அரசு கருத்து செலுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 30 Dec 2010 12:46:35 PM IST

சென்னை, டிச.30: ஆங்கிலத்தில் ஷெட்யூல்டு கேஸ்ட் என்ற சொல்லுக்கு தற்போது ஆதிதிராவிடர் என்று பயன்படுத்துவதை மாற்றி வேறு ஒரு சிறந்த மாற்றுப் பெயரை தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் குழுவின் துணைத் தலைவரான ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி, உறுப்பினர்களான சட்டத்துறைத் செயலர் தீனதயாளன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மைச் செயலர் விஷ்வநாத் ஷெகாவ்கர், ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் சிவசங்கரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்


By pmuruga
12/30/2010 6:02:00 PM
12/30/2010 6:02:00 PM


By senthilkumar
12/30/2010 4:59:00 PM
12/30/2010 4:59:00 PM


By KANDASAMY
12/30/2010 4:39:00 PM
12/30/2010 4:39:00 PM


By சுதேசி
12/30/2010 1:28:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/30/2010 1:28:00 PM