வெள்ளி, 31 டிசம்பர், 2010

amnesty international. aust.stand on EEzham thamizh

யார் பொறுப்பேற்றாலும்  நாடு கடத்தப்படுபவர்கள் உயிரிழப்பிற்கும் கொடுமைகளுக்கும் அது தீர்வாகுமா? எனவே, இப்பொழுதுள்ள சூழலிலேயே காக்க வேண்டிய பொறுப்பை ஆசுதிரேலிய அரசும் பன்னாட்டு மன்னிப்பு அவையும் ஏற்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஈழத் தமிழர்களை ஆஸி. நாடு கடத்தக் கூடாது: சர்வதேச மன்னிப்பு சபை

First Published : 31 Dec 2010 02:51:07 PM IST

Last Updated : 31 Dec 2010 03:22:29 PM IST

கொழும்பு, டிச.31- ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ள ஈழத் தமிழர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தக் கூடாது என்று சர்வதேச மன்னிப்பு சபை (ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்) வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆஸ்திரேலியா அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஈழத் தமிழர்கள் 10 பேருக்கு ஆஸி. அரசு அடைக்கலம் அளித்தது. ஆனால், இலங்கை புலனாய்வுத்துறையின் வலியுறுத்தலின் பேரில் அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா ஈடுபட்டு வருவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அவ்வாறு ஈழத் தமிழர்கள் நாடு கடத்தப்பட்டால் இலங்கையில் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆஸ்திரேலிய அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐநா சபையின் அகதிகளுக்கான பிரகடனத்தின்படி, அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களை மீண்டும் அவர்களது நாட்டுக்கு கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்புவது இல்லை என்ற மரபை சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக் காட்டியுள்ளதாகவும் இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக