உண்மைதான். தி.மு.க.கூட்டணியில் போட்டியிட்டால் காங். தோற்கும். ஆனால் வேறு கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டால் படுதோல்வி அடையும். தனித்துப் போட்டியிட்டால் அல்லது தனி அணியில் போட்டியிட்டால் மண்ணைக் கவ்வும். எது வசதி என்று காங். முடிவெடுத்துக் கொள்ளட்டும். ஆனால் எவ்வாறு போட்டியிட்டாலும் கோவன் தொலைந்து போவது உறுதி. அதனைக் கோவன் மனத்தில் கொண்டு அமைதி காக்கட்டு்ம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
மதுரை, டிச.25: திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்றுவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.அண்மையில் தமிழகம் வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியிடம் திமுக கூட்டணி பற்றி இளைஞர் காங்கிரஸார் புகார் கூறினர். அதேபோல், திமுக ஆட்சி சரியில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிவருகிறார். இவை பற்றி இன்று மதுரை வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்கும். தை பிறந்தால் வலி பிறக்கும். பொறுத்திருந்து பாருங்கள்" என்று கூறினார். அதற்கு வலி நிவாரணி ஏதேனும் உண்டா என்று செய்தியாளர் கேட்டதற்கு, " நிவாரணி எல்லாம் இல்லை நேரடியாக அறுவைச் சிகிச்சைதான்" என்று சூசகமாகப் பதிலளித்தார் இளங்கோவன்.
கருத்துகள்


By udaya
12/25/2010 9:12:00 PM
12/25/2010 9:12:00 PM


By rama
12/25/2010 9:11:00 PM
12/25/2010 9:11:00 PM


By தமிழன்.K
12/25/2010 9:11:00 PM
12/25/2010 9:11:00 PM


By மோகன்
12/25/2010 8:51:00 PM
12/25/2010 8:51:00 PM


By அருள்மொழி
12/25/2010 8:46:00 PM
12/25/2010 8:46:00 PM


By நாதன்
12/25/2010 8:42:00 PM
12/25/2010 8:42:00 PM


By mohan
12/25/2010 8:01:00 PM
12/25/2010 8:01:00 PM


By M.தமிழரசன்
12/25/2010 7:59:00 PM
12/25/2010 7:59:00 PM


By பண்டரிநாதன் மயில்சாமி
12/25/2010 7:44:00 PM
12/25/2010 7:44:00 PM


By Bala
12/25/2010 7:27:00 PM
12/25/2010 7:27:00 PM


By ரிஜி.கரியப்பட்டினம்
12/25/2010 6:37:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/25/2010 6:37:00 PM