இது போல் பயனுள்ள அருந்திறல் செய்பவர்களைப் பாராட்ட வேண்டும். இவருக்கு வேண்டிய பொருள் உதவி செய்து பிறருக்கு நீரில் நடக்கும் பயிற்சி அளிக்கச் செய்ய வேண்டும். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
புதுச்சேரி : குளோபல் உலக சாதனைக்காக, தண்ணீரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை நிகழ்த்தினார்.
புதுச்சேரி வில்லியனூரில் வசிப்பவர் ராணி (38). இவர், குளோபல் உலக சாதனைக்காக, தண்ணீரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சாதனை செய்யும் நிகழ்ச்சியை @மற்கொண்டார். வில்லியனூர் அருகேயுள்ள பத்துக்கண்ணு சம்பூர்ணா"போகோ லேண்ட்' நீச்சல் குளத்தில், இந்த நிகழ்ச்சியை முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.காலை 10 மணிக்கு தண்ணீரில் நடக்க ஆரம்பித்த ராணி, மதியம் 1 மணிக்கு நிகழ்ச்சியை முடித்தார். தலை மட்டும் தண்ணீருக்கு வெளியில் தெரிந்தவாறு, கால்கள் தரையில் படாத வகையிலும் நீச்சல் அடிக்காமலும் நடந்ததை பலர் வியப்புடன் பார்த்தனர்.
இது குறித்து ராணி கூறுகையில் "நீச்சல் தெரியாத பலர் தண்ணீரில் மூழ்கி இறந்து விடுகின்றனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்ணீரில் மூன்று மணி நேரம் நடப்பதற்காக, கடந்த மூன்று தினங்களாக பயிற்சி பெற்றேன். இந்த பயிற்சி எனக்கு வெற்றியை தேடித் தந்தது. சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த விஷயத்திலும் வெற்றி பெற முடியும்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக