செய்தியை நன்றாகப் படிக்கவும். தலைமை அமைச்சரிடமும் விசாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது எனக் கருதினால் பா.கூ.குழு வினர்தானே அவரை அழைக்க இயலும் எனக் கருதாமல், அழைப்பின் வருவதாகக் கூறியுள்ளார். முன் எடுத்துக்காட்டாகத் திகழ்வதற்குப் பாராட்டுவோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 27 Dec 2010 12:53:45 PM IST
Last Updated : 27 Dec 2010 03:15:52 PM IST

புதுதில்லி, டிச.27: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான விசாரணையின்போது தேவையெனில் ஆஜாராகத் தயாராக இருப்பதாக பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார்.ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் பொதுக் கணக்குக் குழு முன் ஆஜராக தயார் என்று ஏற்கெனவே பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார். அதன்படி, ஜோஷிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், தேவையெனில் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே பொதுக் கணக்குக் குழு முன்பு தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கருத்துகள்


By ராஜகோபால்
12/27/2010 1:35:00 PM
12/27/2010 1:35:00 PM