இந்தியாவில் இருநது ஒவ்வொருவர் செல்லும் பொழுதும் பரிசு என்ற போர்வையிலும் பாதுகாப்பு என்ற போர்வையிலும் வழக்கமாக வழங்கும் படைக்கலன்கள் போல் மிகுதியாக வழங்குவதை இந்தியா வழக்கமாகக் கொண்டுள்ளது. தன் நாட்டு எல்லையைப் பறி கொடுத்துக் கொண்டு இவ்வாறு அயலக இறையாண்மையில் குறுக்கிடுவது குறித்து அறிவுரை கூறினாலும் கேட்பார் இல்லை. அலைக் கற்றை ஊழலை விடக் கொடுமையான கொலைக்கற்றை ஊழலுக்குத் தண்டனை பெறும் நாள் விரைவில் வருவதாக! பண்டார நாயகா காலத்தில் அனுப்பப்படட இந்தியப்படையால் கொல்லப்பட்ட சிங்களர்களுக்கும் இராசீவ் காலத்தில் அனுப்பப்பட்ட அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட இலங்கைத்தமிழர்களுக்கும் சோனியா காலத்தில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கும் தொடர்புடைய அரசியல்தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்து இழப்பீடும் தருவார்களாக! இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 27 Dec 2010 04:02:08 PM IST
Last Updated : 27 Dec 2010 04:08:19 PM IST
கொழும்பு, டிச.27: இந்திய பாதுகாப்புத் துறைச் செயலர் பிரதீப் குமார் 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். தனது பயணத்தின்போது இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ள குமார், பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளார்.மேலும் எண்பதுகளில் விடுதலைப்புலிகளுடன் சண்டை நடந்தபோது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இந்தியாவின் அமைதிப்படையைச் சேர்ந்த 1200 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பிரதீப் குமார் அஞ்சலி செலுத்த உள்ளார்.குமாரின் பயணத்தையொட்டி, தோளில் சுமந்துசெல்லும் ஏவுகணைகள், ராடார்கள் உள்ளிட்ட சில ராணுவ உபகரணங்களை இலங்கைக்கு இந்தியா பரிசாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச உள்ளிட்டோரை பிரதீப் குமார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக