புதன், 29 டிசம்பர், 2010

coastal guard: கடலோரக் காவல் படை

என்ன நினைத்துக கொண்டுள்ளார் தா.பா? தமிழக  மக்களைக் காப்பற்றவா கடலோரக் காவல்படை உள்ளது? தமிழக மீனவர்களைச் சிங்களப் படை எந்தத் தொந்தரவுமின்றிக் கொன்றொழிக்கப் பாதுகாப்பு தருவதற்குத்தானே உள்ளது! அவ்வாறிருக்க அதன் மீது குற்றம் சுமத்தலாமா? 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மீட்புப் பணியில் ஈடுபடாத கடலோரக் காவல் படை: தா. பாண்டியன் புகார்

First Published : 28 Dec 2010 03:48:25 AM IST

Last Updated : 28 Dec 2010 05:41:50 AM IST

சென்னை, டிச. 27: ராமேஸ்வரம் பகுதியில் நடந்த படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்க கடலோரக் காவல் படை பயன்படுத்தப்படவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:  ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் அருகேயுள்ள தீவுக்குச் சுற்றுலா சென்றபோது, படகு கவிழ்ந்து 16 பேர் வரை உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதில் மீட்புப் பணிகளில் கடலோர காவல் படை பயன்படுத்தப்படவில்லை. இது மிகவும் வருத்தத்துக்குரியது. பொதுமக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கட்சியின் பகுதி செயலாளர் முபாரக் தலைமையில் தனிப் படகில் சென்று 5 பேரைக் காப்பாற்றியுள்ளனர்.  கடலில் முழ்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு வந்தவுடன், கரையில் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்படவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய  நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தா. பாண்டியன் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக