நம்நாடு சமயச் சார்பற்ற நாடாக நடந்து கொள்ளாமல் பல்சமயச் சார்பு நாடாக நடந்து கொள்கிறது. எனவே, சமயத்தவர்க்கான சலுகைகள் மூலம் ஆட்சி நடத்த விரும்புகிறது. கட்டாய சமய மாற்றத் தடைச் சட்டம் தேவையே. அதே நேரம் ஒருவர் தான் தமிழர் சமயத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பதற்கும் சமயச்சார்பற்றவர் எனக் குறிப்பதற்கும் இவ்விரு வகையினருக்கும் முன்னுரிமை கொடுப்பதற்கும் அரசு முன்வரவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அதிமுக அரசுதான் ரத்து செய்தது ஜெயலலிதா அறிக்கை
First Published : 29 Dec 2010 12:17:59 PM IST
Last Updated : 29 Dec 2010 12:20:57 PM IST

சென்னை, டிச. 29: கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தை அதிமுக அரசுதான் ரத்து செய்தது என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை :திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி 2006ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தான் தமிழ் நாடு கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் நீக்கம் செய்யப்பட்டது என்ற ஒரு தவறான செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தவறான செய்தி குறித்து சிறுபான்மை இன மக்கள் தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சில நிகழ்வுகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு உள்ளேன். 1991 - 1996 மற்றும் 2001- 2006 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது அனைத்து சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளையும் பாதுகாத்து, அவர்களது நலன்களை பேணி மேம்படுத்தி சாதனைகள் புரிந்து வந்ததை அனைவரும் நன்கு அறிவர்.தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் 18.5.2004 அன்று எனது தலைமையிலான அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். இது குறித்து நானும் பல முறை மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறேன். நடைமுறையில் உள்ள ஒரு சட்டம், ஓர் அவசரச் சட்டத்தின் வாயிலாக ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த அவசரச் சட்டத்திற்கு சட்டமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டாலும் கூட, அவசரச் சட்டத்தின் மூலம் ரத்தான சட்டம் தொடர்ந்து ரத்தானதாகவே இருக்கும் மீண்டும் உயிர் பெறாது. இது தான் சட்ட நிலைப்பாடு.சட்டமன்றத்திற்கு கொண்டு வந்தால் தான் ரத்தாகும் என்றில்லை. இது 1985-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து ஏற்கெனவே நான் முதலமைச்சராக இருந்த போது, 21.5.2005 அன்று தெளிவுபட எனது அறிக்கையின் வாயிலாகவும், 2006 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், அதற்குப் பின்பும் பல சூழ்நிலைகளில் தெரிவித்து இருக்கிறேன்.2006-ல் கருணாநிதி மைனாரிட்டி ஆட்சி அமைத்த பிறகு இந்த அவசரச் சட்டத்தை மீண்டும் சட்டப்பேரவையில் கொண்டு வந்து அதனை அவரது அரசு தான் ரத்து செய்தது என்று கூறுவது, ஏற்கனவே ஒருவரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு பிரேதத்தை தோண்டி வெளியே எடுத்து, மீண்டும் அதில் வேலை பாய்ச்சி நான் தான் கொன்றேன் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை 2006-இலேயே தெளிவுபடுத்தி இருந்தேன். அதையே மீண்டும் கூறுகிறேன்.ஆகவே, இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்தது எனது தலைமையிலான அதிமுக அரசு தான் என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துகள்


By குமரி அருள்
12/29/2010 6:27:00 PM
12/29/2010 6:27:00 PM


By balamurugan
12/29/2010 6:21:00 PM
12/29/2010 6:21:00 PM


By ராமராசு
12/29/2010 5:35:00 PM
12/29/2010 5:35:00 PM


By moh
12/29/2010 5:28:00 PM
12/29/2010 5:28:00 PM


By AR.K
12/29/2010 5:11:00 PM
12/29/2010 5:11:00 PM


By Indian
12/29/2010 5:07:00 PM
12/29/2010 5:07:00 PM


By உண்மை தமிழன்
12/29/2010 5:01:00 PM
12/29/2010 5:01:00 PM


By K. Rajan
12/29/2010 4:57:00 PM
12/29/2010 4:57:00 PM


By Davis
12/29/2010 4:31:00 PM
12/29/2010 4:31:00 PM


By edward
12/29/2010 4:25:00 PM
12/29/2010 4:25:00 PM


By manish
12/29/2010 3:39:00 PM
12/29/2010 3:39:00 PM


By Sundaran
12/29/2010 3:22:00 PM
12/29/2010 3:22:00 PM


By saravanan
12/29/2010 3:17:00 PM
12/29/2010 3:17:00 PM


By ராம்
12/29/2010 1:41:00 PM
12/29/2010 1:41:00 PM


By SADIK
12/29/2010 1:34:00 PM
12/29/2010 1:34:00 PM


By M.Thangarajan
12/29/2010 1:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
12/29/2010 1:07:00 PM