தலைவர்களின் தன்நலக் கனவுகள் சிதையவும் நாட்டு மக்களின் நன்னலக் கனவுகள் ஈடேறவும் தினமணி நேயர்கள் சார்பில் வாழ்த்துகள். இனியேனும் விழிக்கட்டும் இந்தியம். இனிதாக மலரட்டும் தமிழ் ஈழம். இனிய வாழ்வைத் தரும் இனிதான ஆட்சிகள் அமையட்டும்!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 01 Jan 2011 12:14:00 AM IST
சென்னை,டிச.31: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா: நாட்டில் உள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்தையும், வளமையையும் போற்றிப் பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம்.முதல்வர் கருணாநிதி: பல்வேறுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது இந்த அரசு. இந்த அடிப்படையில் இந்த புத்தாண்டிலும் தமிழர் நலம் காத்து, தமிழகத்தின் வளம் பெருக்கி என்றும் வெற்றிகளை குவித்திடுவோம். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா: மலர்கின்ற புத்தாண்டில் அராஜகம், அத்துமீறல், வன்முறை ஆகியவை ஒழிந்து, அமைதியும், ஆனந்தமும் பிறக்கட்டும். 2011-ல் உண்மையான மக்களாட்சி மலர நாம் அனைவரும் புத்தாண்டில் உறுதி ஏற்க வேண்டும்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு: இந்தப் புத்தாண்டில் ஜாதி, மத, மொழி, இன பேதங்களைத் தாண்டி தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காப்போம்.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: கடந்த புத்தாண்டில் மனதில் மேற்கொண்ட தீர்மானங்களை எண்ணிப் பார்த்து, அவற்றில் முடிக்க முடியாத தீர்மானங்களை இந்த ஆண்டில் நிறைவேற்ற சபதமேற்போம்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நலிவுகளில் இருந்து நாட்டை மீட்க, வரும் பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை படுதோல்வி அடையச் செய்வோம்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்: உயர்வு தாழ்வு இல்லாத சமநிலை சமுதாயம் அமைய வேண்டும். 2011-ல் அமைதியும், முன்னேற்றமும் ஏற்படும் வகையில் நல்லாட்சி மலர ஒற்றுமையுடன் பாடுபடுவோம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்: சமத்துவ உலகை நோக்கி அழைத்துச் செல்லும் சோசலிசப் பாதையை அமைப்பதற்கான போராட்டத்தை வேகப்படுத்தும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா. பாண்டியன்: தமிழர் பண்பாட்டைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை மீட்க வேண்டிய கடமைகள் நம் முன் நிற்கின்றன. புத்தாண்டில் இவற்றுக்குத் தீர்வு காணக் கூடிய மாற்றத்துக்காகப் பாடுபட உறுதியேற்போம்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்: கடந்த ஆண்டு எவ்வாறு கடந்து போனது என்பதை எண்ணிப் பார்க்கும் அதே வேளையில் புத்தாண்டு எவ்வாறு அமைய வேண்டும் என்பது நமது தொலைநோக்குப் பார்வையிலும், திட்டமிடுவதிலும் அடங்கியிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் திருநாவுக்கரசர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர், கொங்குநாடு முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோரும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக