செவ்வாய், 28 டிசம்பர், 2010

குழந்தைகள் விரும்பும் கல்வியை அளிக்க வேண்டும்:வேங்கட்ராமன் இராமகிருட்டிணன்

எந்த அகவைக் குழந்தைகள் என்று பார்க்க வேண்டும். சிறிய குழநதைகளுக்கு ஈடுபாடு அல்லது பிரமிப்பு ஏற்படுத்துபவர்கள்போல் தாங்களும் ஆக  வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அது நிலையான விருப்பம் அல்ல. நாம் தரக் கூடிய கல்வி குழந்தைகள் விரும்பும் வகையில் அமைய வேண்டும். அடுத்து, எல்லாவகைக் கல்வி குறித்தும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களின் எதிர்கால வாழ்வு குறித்து ஆற்றுப்படுத்த  வேண்டும். அதற்குப் பின்பு சிறார் விரும்பும் கல்வியை அளிக்க முன் வர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

குழந்தைகள் விரும்பும் கல்வியை அளிக்க வேண்டும்: 
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்


வடோதரா, டிச.27:  குழந்தைகள் விரும்பும் கல்வியைக் கற்பதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும் என நோபல் பரிசு வென்ற இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  ""குழந்தைகள் எந்த விதமான கல்வியைக் கற்க விரும்புகிறார்களோ, அதையே அவர்களுக்கு நாம் அளிக்க வேண்டும். பெற்றோர்களின் ஆசைக்காக, டாக்டர், என்ஜினீயர் படிப்பை அவர்கள் தலையில் சுமத்தக் கூடாது. ஓவியராகவோ, இசைக் கலைஞராகவோ இருக்க விரும்பினால் அவர்கள் விருப்பப்படியே விட்டுவிட வேண்டும்'' என்று அவர் சொன்னார்.  ""விஞ்ஞானி ஆவதற்காக என் மகன் இரண்டு ஆண்டுகள் அறிவியல் படித்தான். பிறகு தனக்கு இசை கற்க வேண்டும் என்று சொன்னான். அவன் விருப்பப்படியே விட்டுவிட்டேன். இப்போது அவன் சந்தோஷமாக சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறான்,'' என்றார் அவர்.  2009 அறிவியலுக்கான நோபல் பரிசை வென்றவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். வடோதராவில் ஒரு பள்ளிக்கூட விழாவில் கலந்து கொள்ளும்போது இவ்வாறு சொன்னார்.  மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் அவருக்கு செவ்வாய்கிழமை கெüரவ டாக்டர் பட்டம் அளிக்க உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக