செவ்வாய், 28 டிசம்பர், 2010

கனடாவில் தமிழ் நிலைக்க வழி செய்வோம்!

கனடாவில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றித் தமிழகத் தமிழர்கள் உட்ப உலகத் தமிழர்கள் அனைவரும் பின் வரும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
1. தமிழ் பேசுவோம்! தமிழில் பேசுகையில் தமிழிலேயே பேசுவோம்!
2. தமிழில் எழுதுவோம்! தமிழில் எழுதுகையில் தமிழிலேயே எழுதுவோம்!
3. தமிழ் அறிந்தவர்களுடன் தமிழிலேயே பேசுவோம்! தமிழ் அறியாதவர்களையும் தமிழ் அறியச் செய்வோம்!
4. எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!
5. வணங்குவோம் தமிழில்! வாழ்த்துவோம் தமிழில்!
6. பேசுவோம் தமிழில்! பயிலுவோம் தமிழில்!
7. தமிழில் கையொப்பம் இடுவோம்!
8. பெயிடுவோம் தமிழில்! பெருமை கொள்வோம தமிழராய்!
9. கலையென்றால் தமிழ்க்கலையே!
10. தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்! தமிழ் வாழத் தமிழரே சிறந்திடுவீர்!
11. தமிழுக்கு முதன்மையும் தமிழர்க்குத் தலைமையும் அளிபபோம்!


கனடாவில் தமிழ் நிலைக்க வழி செய்வோம்!

tamil
இன்று, எமது நாட்டில் எமது மொழி, கலாச்சாரத்திற்கு நெருக்கடியான ஒரு சூழல் நிலவுவதால், அவற்றை பாதுகாக்கும் பொறுப்பு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய எமக்கு ஏற்பட்டிருக்கிறது. அதே வேளை, கனடாவில் தமிழ் எமது அடுத்த தலைமுறைக்கு தொடருமா என்று ஐயப்பாடும் உண்டு.
புலம் பெயர்ந்து வந்த முதல் தலைமுறையினராகிய நாமாவது தமிழை சுத்தமாக பேசுவதன் மூலம் கனடாவில் தமிழை நிலை பெறச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கச் செய்யலாம் அல்லவா?.
ஆகவே, 2011 புது வருடத்தில், கனடா வாழ் தமிழர் அனைவரும் ஒரு சங்கல்பம் செய்து கொள்வோம்:
இன்று தொடக்கம்,
1.  சக தமிழருடன் தமிழில் மட்டும் பேசுவோம்;
2.  பேசும் தமிழை, அவசியமற்ற ஆங்கிலச் சொற்கள் தவிர்த்து, சுத்தமாகப் பேசுவோம்.
இந்தப் கையொப்ப பரப்புரையில் பங்கு கொள்ள, www.karublog.com என்னும் தளத்திற்குச் சென்று, பரப்புரை இதழில், உங்கள் பெயர், மின்னஞ்சல் விபரங்களை பதிவு செய்து கொள்ளும்படி கேட்கப்படுகிறீர்கள். மேலும், இந்த முயற்சியை பலனடையச் செய்ய, அனைவரினதும் ஒத்துழைப்பு தேவையாக இருப்பதால், தயவு செய்து கனடாவில் உள்ள உங்கள் அனைத்து தமிழ் தொடர்புகளுக்கும் இந்த மின்னஞ்சலை அனுப்பி வைக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.
பி. கு. உங்கள் மின்னஞ்சல் விலாசம் கையொப்ப பட்டியலில் தோன்றாது. நீங்கள், உங்கள் கையொப்பத்தை மின்னஞ்சலில் வரும் பதிலில், மூன்று நாட்களுக்குள், உறுதி செய்தவுடன் உங்கள் மின்னஞ்சல் விலாசம் ‘பிரத்தியேக விபரப் பாதுகாப்பு’ இன் பொருட்டு கோப்பிலிருந்து (data base) நீக்கப்பட்டுவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக