சீனாவின் பக்கமும் பாக்கிசுதான் பக்கமும் சார்ந்துள்ள சிங்களத்தைத் தன் பக்கம் சார்ந்திருக்கச் செய்ய இந்தியம் படாத பாடு படுகிறது. இந்த அடிமைத் தனத்தைப பயன்படுது்தி இந்தியத் துணையுடன் தமிழர்களைக் கொல்லும் பணியைத்தான் சிங்களம் செய்கிறது. எனவே, பாதுகாப்புப் பேச்சு என்ற பொருளில் மேலும் மேலும் இந்தியப் படைக்கருவிகளும் படைஞர்களின் உழைப்புகளும் உத்திகளும் சிங்களத்திற்குத் தாரை வார்க்கப்படுமே தவிர இந்தியாவிற்கு நன்மையுமில்லை; தமிழர்களின் அழிவு தடுக்கப்படப் போவதுமில்லை. காங்.ஒழிந்து வேறு அரசு அமைந்தால்தான் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் இந்தியாவின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். அப்பொழுது இந்த நாடகமும் முடிவிற்கு வரும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கொழும்பு, டிச.28: இந்திய பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் 3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு வந்திருக்கிறார். இந்தியா-இலங்கை பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதற்கு பிரதீப் குமார் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் பயணத்தை இரு நாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றன. தலைநகர் கொழும்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபட்சவை பிரதீப் குமார் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பெய்ரீஸ சந்தித்துப் பேசினார் பிரதீப் குமார். இரு நாடுகளுக்கு இடையேயான வெளியுறவில் உள்ள பாதுகாப்பு சிக்கல்கள் குறித்தும், அதற்குத் தீர்வு காணுதல் குறித்தும் இருவரும் விவாதித்ததாக தெரியவருகிறது. செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள இந்திய அமைதிப் படை வீரர்களின் நினைவிடத்துக்கு சென்ற பிரதீப் குமார், மலரஞ்சலி செலுத்தினார். இலங்கையில் 1987-90 காலக்கட்டத்தில் புலிகளுடனான போரின் போது இந்திய அமைதிப்படை வீரர்கள் 1200 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு கொழும்பில் நாடாளுமன்றத்துக்கு அருகில் நினைவிடத்தை அமைத்துள்ளது இலங்கை அரசு.
கருத்துகள்


By karunakaran
12/28/2010 7:47:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/28/2010 7:47:00 PM