நாமும் தமிழில் நாட்டுப்பண் பாட வேண்டினோம். ஆனால் உணர்வு மழுங்கிவிட்டதால் கைகூடவில்லை. இலங்கையில் தமிழில் நாட்டுப்பண் பாடும் உரிமை இருந்தது. இல்லாத உரிமையைக் கேட்பது வேறு. இந்தியத்தால் இருக்கின்ற உரிமையைப் பறிப்பது வேறு. வேறுபாட்டைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும். சிங்களம் அவர்களுக்குரிய நாடல்ல என்னும் பொழுது நாட்டுப்பண் தேவையில்லை. ஆனால், சிங்களத்தில் பாட வேண்டும் என்ற கட்டாயம் வரும பொழுது அதனை வழக்கம்போல் தமிழில் பாட இசைவதுதான் சரியான செயலாகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்: தமிழ் மாணவிகளிடம் வலியுறுத்தல்
First Published : 27 Dec 2010 04:33:59 AM IST
Last Updated : 27 Dec 2010 05:33:52 AM IST
கொழும்பு, டிச. 26: இலங்கையில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதத்தைப் பாட வேண்டுமென தமிழ் மாணவிகளிடம் வலியுறுத்தப்பட்டது. தமிழில் பாட அனுமதி மறுக்கப்பட்டது.÷இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்பாணத்தில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அந்நாட்டு பிரதமர் ஜெயரத்னே கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அங்குள்ள தமிழ் வழிக்கல்வி கல்லூரி மாணவிகள் தேசிய கீதம் பாட அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களிடம் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதத்தைப் பாட வேண்டுமென நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள் கடுமையாக வலியுறுத்தினர். இதற்கு மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும் அதிகாரிகள் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.÷இதனால் நிகழ்ச்சியில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. தமிழ் மாணவிகளுக்கு சிங்கள மொழி சரியாகத் தெரியாததால் மிகுந்த சிரமப்பட்டு பாடலைப் பாடினர். இலங்கையில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் 1952 முதல் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கை அதிபர் ராஜபட்ச இனி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டுமென சமீபத்தில் அறிவித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.ட
கருத்துகள்


By இர்ஷாத் -
12/27/2010 11:49:00 AM
12/27/2010 11:49:00 AM


By pugal
12/27/2010 10:30:00 AM
12/27/2010 10:30:00 AM


By ramprasath
12/27/2010 8:23:00 AM
12/27/2010 8:23:00 AM


By இந்திய தமிழன்
12/27/2010 5:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/27/2010 5:48:00 AM