இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே, எட்டப்பன் காட்டிக் கொடுத்தான். கட்டபொம்மன் உயிர் இழப்பைக் கண்டோம்! யூதாஸ் காட்டிக் கொடுத்ததால் இயேசுவின் உயிர் இழப்பைக் கண்டோம்! கருணா காட்டிக் கொடுத்ததால் ஏற்பட்ட உயிர் இழப்புக்களை கணக்கிடவே முடியவில்லையே! எத்தனை கர்ப்பிணிகள், வயிற்றில் இருந்த கருக்கள், சிசுக்கள், சிறுவர்கள், சிறுமியர்கள், எத்தனை எத்தனை ஆண்களும் பெண்களும், இன மக்களைக் காப்பாற்ற எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராய் இருந்த வரலாற்றில் தன்னிகரற்ற தமிழின ராணுவத்தினர் கொடியவர்களின் வன்கொடுமைகளில் கொடூரத் தாக்குதல்களில் கொத்துக் கொத்தாய் பலியாயினர். உலகமெங்கும் மனித நேயக் குரல்கள் எழுந்த போதும் பதவியிலும் அதன் பலனிலும் மட்டுமே குறியாயிருந்த இந்த மனிதர் திருந்திவிட்டதாய் உலகம் முழுவதும் நம்பும் அளவிற்கு எத்தகைய சாதனை செயல்கள் செய்தாலும் என்னுடைய குமுறும் நெஞ்சத்தில் அவர் குற்றவாளி தான். ஜெயா எதிரியாகவும் கருணா துரோகியாகவும் இவ்விருவரின் ஆதரவாளர்கள் பகுத்தறிவை பயன்படுத்தாதவர்கள் ஆகவுமே தமிழின வரலாற்றில் பதிவு செய்யப்படுவர்.
மத்திய மாநில அரசுகள் வேறு; அவற்றை ஆளும கட்சி ஆட்சிகள் என்பது வேறு. அரசாங்கம் நிலைத்தது. ஆட்சி மாற்றத்திற்குரியது. இரண்டையும் குழப்பி குழமபிப்போய் யாரையோ எச்சரிப்பதாகவோ வேறு வகையிலோ எண்ணிக் கலைஞர் பேசியுள்ளார். தமிழர் நலனை மட்டும் முன்னிலைப்படுத்திக் காங்.கிற்கு எதிராகச் செயல்பட்டிருந்தார் எனில் இந்த நிலை வந்திருக்காது. சரியான எதிர்க்கட்சித் தலைமை இல்லாக்காரணத்தால் தமிழன்பர்கள் பலர் கலைஞர் பக்கமே இருக்கின்றனர். எனவே, இனியேனும் தன் நிலையை மாற்றித் தெளிவான முடிவிற்கு வந்து எஞ்சிய ஈழத்தமிழர்களைக் காக்கவும் போர்க்குற்றவாளிக ளும் இனப்படுகொலைக்காரர்களும் தண்டிக்கப்பட ஆவன செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By மனித நேய சிங்களன்
11/26/2010 7:35:00 PM
11/26/2010 7:35:00 PM


By Ilakkuvanar Thiruvalluvan
11/26/2010 3:45:00 AM
11/26/2010 3:45:00 AM