பன்றிக் காய்ச்சலுக்குத்தான்அறிவுரை கூறமுடியுமே தவிர உயிர்க் கொலைகளுக்கும் உடைமை இழப்புகளுக்கும் சிங்கள அரசிற்குத்தான் உதவ முடியும் என்பதையும் மனத்தில் கொள்ளுமாறும் தெரிவிக்கிறோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன.6: இலங்கையில் தற்போது பன்றிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டைப்புண் உள்ளிட்ட பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் இலங்கை பயணத்தை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்.பயணத்தின்போது பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஏஎச்1என்1 நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.இலங்கையில் பயணம்செய்யும்போது பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளினால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள இலங்கை அரசு மருத்துவமனையை அணுகி நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.இலங்கைக்கு பயணம் செய்யத் தொடங்குவதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பு ஏஎச்1என்1 நோய்க்கான தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளவும். இந்த நோய்க்கான தடுப்பு ஊசி சலுகை விலையில் கிண்டி கிங் நிலையத்தில் வழங்கப்படுகிறது.இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக