இதற்குப் பிறகும் பா.ம.க.வைக் கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனப் புறக்கணிப்பது சரியல்ல. அதே நேரம் கொலைகாரக் காங்.கூட்டணியில் சேர எண்ணுவதும் சரியல்ல.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன.7- ஆளுநர் உரை மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரையாக உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆளுநர் என்பவர் குடியரசு தலைவரின் பிரதிநிதி. அந்தப் பதவி மதிக்கப்பட வேண்டும். ஆனால், முக்கிய எதிர்க்கட்சியும் மற்றும் சில கட்சிகளும் ஆளுநரை உரையாற்ற விடாமல் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி அவையில் தர்ணா போராட்டம் நடத்தியிருப்பது ஜனநாயக வரம்பை மீறிய செயல்.ஆளுநர் உரையில் வழக்கமான அறிவிப்புகள் கொஞ்சம் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. குடிசைகளே இல்லாத நிலை உருவாக்கப்பட்டு அனைவருக்கும் பாதுகாப்பான வீடு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. இது கனவாக முடிந்துவிடாது நனவாக வேண்டும்.நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பை நிரந்தரமாக தடுத்திட வெள்ள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வறட்சி மாவட்டங்களான சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் ஏரி, குளங்களுக்கு வெள்ளநீரை திருப்பிவிட ஆறுகள் இணைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் வரவேற்கத்தக்க அம்சங்கள்.3 மருத்துவக் கல்லூரிகள், 5 கலை, அறிவியல் கல்லூரிகள், நாகையில் விவசாயக் கல்லூரி, கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை பல்கலைக்கழகம், குமரி மாவட்டத்தில் இந்திய மருத்துவ பல்கலைக்கழகம், சென்னையில் அறிவியல் பெருநகரம் ஆகிய அறிவிப்புகள் நிச்சயம் இளைஞர்களின் எதிர்கால வாழ்வுக்கு உதவும்.பச்சிளம் குழந்தைகளுக்கு தீவிர அவசர சிகிச்சை திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட விஸ்தரிப்பு, பஞ்சமி நில மீட்பு, வீட்டுவசதி வாரியத்தில் நடைமுறையில் இருந்துவரும் அரசு விருப்புரிமை ஒதுக்கீடு ரத்து ஆகிய அறிவிப்புகளும் பொதுமக்களின் வரவேற்பை பெறும்.இவையெல்லாம் மக்களைக் கவரும் கவர்ச்சித் திட்டங்கள். ஆனால், மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான தொலைநோக்குத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கான பெரிய அளவிலான திட்டங்களும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை ஆகியவைப் பற்றி ஆளுநர் உரையில் மேலோட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு தீர்வுகாண தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த தவறியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.மொத்தத்தில், ஆளுநர் உரை மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரையாகும்.இவ்வாறு ராதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக