செவ்வாய், 4 ஜனவரி, 2011

<<இங்கே பிரதமர் வருகிறார் என்றாலும் கூட அங்கே செல்லாமல் இந்த மன்னன் (முதல்வர் கருணாநிதி) இங்கே வந்ததற்கு காரணம் தமிழுக்குச் செய்யும் தொண்டு, தமிழ் நெறிக்கு ஆற்றுகின்ற கடமை என்பதை நான் கூற விரும்புகிறேன் (என்றார் முதல்வர் கருணாநிதி.) >>என்றுஉணர்ச்சிவயப்பட்டு நேற்றுப் பேசியிருந்திருக்க வேண்டா.  இன்று இந்த  விளக்கமும் அளித்திருக்க  வேண்டா. மரபினைப் பின்பற்றி வருகையின் பொழுது வரவேற்கா விட்டாலும் வந்த பொழுது ஊர்தி வரை வந்து வழியனுப்பிய தலைமையமைச்சரின் பண்பைப் பாராட்டுவோம்!  தமிழ்த்தொண்டு இல்லாத பொழுது தலைமை யமைச்சரைச் சந்திக்கவும் நேரம் ஒதுக்கப்படும் என்னும் கொள்கையை மறுஆய்வு செய்வோம்! 
கண் நலம்   பெற வாழ்த்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

பிரதமரைச் சந்திக்க முடியாதது ஏன்? முதல்வர் கருணாநிதி விளக்கம்

சென்னை, ஜன. 3: பிரதமரைச் சந்திக்க முடியாதது ஏன் என்பதற்கு முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.  இதுகுறித்து, தமிழக அரசு சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட விளக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:  கவிஞர் வைரமுத்து புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி நீண்ட நேரம் கலந்து கொண்டிருந்தார். அங்கு செய்யப்பட்டு இருந்த அதிக ஒளி ஏற்பாட்டின் காரணமாக கண்களில் நீர் வடிந்து கொண்டே இருந்தது.  பிரதமரை வரவேற்கவும், சந்திக்கவும் திட்டமிட்டு இருந்தபடி செல்ல இயலவில்லை. இதனால், பிரதமரைச் சந்திக்க திங்கள்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திங்கள்கிழமை காலை மருத்துவமனைக்குச் சென்று கண்ணுக்குச் சிகிச்சை செய்து கொண்ட பின் நேரடியாக ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அரை மணி நேரத்துக்கு இந்தச் சந்திப்பு நடந்தது. சந்திப்புக்குப் பின்னர் முதல்வர் புறப்படும் நேரத்தில் கார் வரையில் வந்திருந்து வழியனுப்பி வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங் என்று அரசு விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக