பேரினப் படுகொலைகளைப் போர்த்தந்திரம் எனக்கூறி மறைக்க எண்ணும் வஞ்சகத்திட்டம். வஞ்சகர்கள் பெறும் தண்டனைகள் நாளைய வரலாற்றில் பாடமாக இடம் பெறும்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கொழும்பு, ஜன. 6: பயங்கரவாதத்துக்கு எதிரான போர்த் தந்திரங்கள் குறித்து தங்களது அனுபவங்களின் அடிப்படையில் பயற்சி அளிக்க இலங்கை ராணுவம் முன்வந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாட்டு ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க இருப்பதாக இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்தார். இலங்கையில் சம உரிமை, விடுதலை கோரி போராடி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை கூண்டோடு அழித்துவிட்டது இலங்கை ராணுவம். இது இலங்கை ராணுவத்துக்குப் பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. உலகில் உள்ள திறமை மிக்க பயங்கரவாத இயக்கத்துக்குள் விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னிலையில் திகழ்ந்தது. எனவே விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை இலங்கை ராணுவம் மிகப் பெரிய சாதனையாக கருதுகிறது. இதையடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்த் தந்திரம் குறித்து மற்ற நாடுகளின் ராணுவத்துடன் பகிர்ந்து கொள்ள இலங்கை விரும்பியது. தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களை அழைத்து பயங்கரவாத எதிர்ப்பு போர் தந்திரம் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்தப் பயிற்சி அடுத்த வாரம் தொடங்குகிறது. இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் குடா ஓயா ராணுவ பயற்சி மையத்தில் பயிற்சி நடைபெறும். இதுபோன்ற பயற்சி மேலும் பல நாட்டு ராணுவத்துக்கு அளிக்கப்படும் என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தினர் இந்தியாவில் பயிற்சி பெற்ற காலம் போய் இப்போது இலங்கை ராணுவத்திடம் இந்திய வீரர்கள் பயிற்சி பெறப்போவது இந்தக் காலம் என்றாகிவிட்டது. விடுதலைப் புலிகளுடனான இறுதிச் சண்டையில் இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் உதவியது என்று தமிழகத்தில் உள்ள சில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக