௧. மறுப்பதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டதால் அதுவரை ஏதோ நடந்துள்ளது என்றுதான் மக்கள் கருதுவார்கள். ௨. ஆ.இராசாவை எதிர்ப்பதன் மூலம் ஊழலுக்கு எதிரானவர் என்ற முகம் கிடைத்து அப்பெயர் கட்சிக்கு உதவலாம். ௩. ஆனால் அத்தகைய சூழல் வந்தால் எதிர் அணியினர் , இவரது மற்றொரு முகத்தை வெளிப்படுத்துவர். ௪. இதனால் கட்சிக்குத்தான் இழுக்கு. ௫. எனவே, குடும்பச் சண்டையைக் கட்சிச் சண்டையாக ஆக்காமல் ஒற்றுமையாக இருந்து சமாளிப்பதுதான் நல்லது. ௬. ஊழலை எதிர்ப்பவர்கள் எல்லாம் குறிப்பிட்ட ஊழலில் பங்கு கிடைக்காத பொழுதும் அவர்களுக்கே மறைத்து ஊழல் புரிந்து பிறர் பயனடைந்த பொழுதும் மட்டுமேபேசுபவரக்ள் என்பது உண்மையாக உள்ளதால் ஊழலுக்கு எதிரான அரசியல் வாதிகள் பேச்சு எடுபடாது. ௭. எனவே, குடுமபச் சண்டையைக் குடும்பத்திற்குள் மட்டும் வைத்துக் கொண்டு கட்சியைக் காப்பாற்றினால் அரசைக் காப்பாற்ற முடியும். ௮. கட்சியைக் குடும்பமாகக் கருதாமல் குடும்பத்தையே கட்சியாக எண்ணும் போக்கும் நிற்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக