திங்கள், 3 ஜனவரி, 2011

cong.will take good decesion: காங்கிசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும்: ஈ.வி.கே.எசு. இளங்கோவன்

தி.மு.க.கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால்  காங் மண்ணை அடியோடு கவ்வி  இருக்கும் என்பது நன்கு தெரிந்தும் கோவன் இவ்வாறு உளறுவதால் காங். தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது  என்பதை  விட வேறு என்ன சொல்வது? 
மகிழ்ச்சியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

காங்கிரஸ் விரைவில் நல்ல முடிவு எடுக்கும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை, ஜன. 2: காங்கிரஸ் கட்சி விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என்று அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.சென்னை, பெரம்பூரில் காங்கிரஸ் கட்சியின் 126-ம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்னை இந்திரா தேசியப் பேரவை சார்பில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்."காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் வேண்டும், மரியாதை வேண்டும், அங்கீகாரம் வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள எல்லா காங்கிரஸôரும் கருதுகின்றனர். தி.மு.க. செய்யும் தவறுகளுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சி பலிகடா ஆக வேண்டியுள்ளது. எனவே, தி.மு.க. அணியில் காங்கிரஸ் கட்சி இருக்கக்கூடாது என்பதே பெரும்பாலான காங்கிரஸ்காரர்களின் விருப்பமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களின் இந்த உணர்வுகளை எல்லாம் நாங்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் சொல்லியிருக்கிறோம்.ஆகவே, காங்கிரஸ் கட்சி விரைவில் நல்ல முடிவை எடுக்கும். அதன் பிறகு தமிழகத்தில் எங்களது பிரசாரமே வேறு விதமாக இருக்கும்.கடந்த மக்களவைத் தேர்தலில் நான், தங்கபாலு உள்பட காங்கிரஸ் கட்சியின் முன்னணியினர் பலர் தோல்வியடைந்ததற்கு தி.மு.க.தான் காரணம். தி.மு.க.வுடன் மட்டும் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கும்' என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக