நாடாளு மன்றக் கூட்டுக்குழு உசாவலின் கதி இதுதான் என்னும் பொழுது எதற்காக அதனை வலியுறுத்துகிறார்கள். நீதிச் சக்கரமாக இருந்தாலும் வேறு எந்தச் சக்கரமாக இருந்தாலும் ஆட்சிச் சாட்டைக்கேற்பத்தான் சுற்றும் எனில் சாட்டையைக் கைமாற்றினால்தான் பயன் உண்டு.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
புதுதில்லி, ஜன. 6: போபர்ஸ் பீரங்கி பேரத்தில் வின்சத்தாவுக்கும் இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சிக்கும் கமிஷன் வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கும், குவாத்ரோச்சி மீதான வழக்கை வாபஸ் பெறுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிபிஐ கூறியுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டதில் பல கோடி ரூபாய் கமிஷன் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கமிஷன் தொகை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்திக்கு நெருங்கிய நண்பரான இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சி மற்றும் இந்திய தொழிலதிபர் வின்சத்தாவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்தப் புகார் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதுபோல் மத்திய புலனாய்வு அமைப்பும் (சிபிஐ) விசாரித்தது. இந்த நிலையில்,குவாத்ரோச்சி இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதால் இந்த வழக்கை சிபிஐயால் தொடர முடியவில்லை. இப்போது வருமான வரித்துறைக்கு எதிராக வின்சத்தா மகன் தொடர்ந்த வழக்கில் வின்சத்தாவுக்கும் இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சிக்கும் கமிஷன் வழங்கப்பட்டுள்ளதை வருமான வரி தீர்ப்பாயம் உறுதிப்படுத்தி உள்ளது.இந்நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் குவாத்ரோச்சி மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கில் இன்று சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்ஹோத்ரா, "வருமான வரித் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கும் குவாத்ரோச்சி மீதான வழக்கைத் திரும்பப் பெறுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதனால், குவாத்ரோச்சி மீதான வழக்கை திரும்பப் பெறும் அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகள் நிர்வாக ரீதியானவையே தவிர, அவற்றை நீதித்துறையுடன் தொடர்புடையதாகக் கொள்ள முடியாது எனவும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
கருத்துகள்


By N. Sridharan
1/6/2011 1:11:00 PM
1/6/2011 1:11:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *