இலவசச் சீட்டை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது என்றும் வேறு ஒருவருக்கப் பரிசு அளிக்கலாம் என்றும் உள்ளது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு? தெளிவாக இல்லையே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன. 4: உள்ளூர் பயணங்களுக்கு இணையதளம் மூலம் சாதாரண வகுப்பில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய சலுகையை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இதன்படி, ஐ.சி. குறியீடு உள்ள பயண டிக்கெட் முன்பதிவு செய்யும், ஒவ்வொரு நூறாவது பயணிக்கும் ஒரு டிக்கெட்டும் இரண்டு கூப்பன்ங்களும் இலவசமாக வழங்கப்படும். இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் ஒவ்வொரு நூறாவது பயணிக்கும் இணையதள பக்கத்தில் புதிய "பாப்-அப்' திரை தோன்றும். அதில் சலுகை குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கும். நூறாவது பயணிக்கு வழங்கப்படும் இலவச டிக்கெட்டை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது. இலவச டிக்கெட்டுக்கான கட்டணம், விமான எரிபொருள் செலவுக்கான கட்டணம் ஆகியவற்றை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும். இதர வரிகளை பயணிகள் செலுத்த வேண்டும். இந்த இலவச டிக்கெட்டை குறிப்பிட்ட பயணி பயன்படுத்தாமல், வேறு நபருக்கும் பரிசளிக்கலாம். இந்த திட்டம் ஜனவரி 9-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக