புதன், 5 ஜனவரி, 2011

govt.awards for scholars and politicians: தமிழ் மொழி, சமூக நீதிக்கான அரசு விருதுகள் அறிவிப்பு

அறிஞர்களின் பெயர்களுக்கான விருதாளர்கள் சரியான தேர்வு. அரசியல் தலைவர்களின் பெயர்களில் வழங்கப்படும் விருதுகள் கட்சி அரசியல்சார்புடையன என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. எனினும் விருதாளர்களுக்குப் பாராட்டுகள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் மொழி, சமூக நீதிக்கான அரசு விருதுகள் அறிவிப்பு

சென்னை, ஜன.4- தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோருக்கான தமிழக அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.விருது பெறுவோர் விவரம் வருமாறு:2011-ம் ஆண்டுக்கான “அய்யன் திருவள்ளுவர் விருது” - முனைவர் பா. வளன் அரசு 2010-ம் ஆண்டின் சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருது” - கோ. சாமிதுரை “அறிஞர் அண்ணா விருது” -. து.  ரவிக்குமார், எம்.எல்.ஏ"அம்பேத்கர் விருது” -   திருமதி டி. யசோதா, எம்.எல்.ஏ.“பெருந்தலைவர் காமராசர் விருது” - திருமதி. ஜெயந்தி நடராஜன், எம்.பி. “பாரதியார் விருது” - நா. மம்மது “தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது” - பேராசிரியர் அ. அய்யாசாமி“பாவேந்தர் பாரதிதாசன் விருது” - முனைவர் இரா. இளவரசு“முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது” - முனைவர் இரா. மதிவாணன் விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியுடன், தங்கப்பதக்கமும், தமிழக அரசின் சார்பில் அணிவிக்கப்படும். வரும் 16-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்குவார்.இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக