சனி, 8 ஜனவரி, 2011

T.N.govt. ignores thamizh dramas : தமிழ் நாடகங்களைப் புறக்கணிக்கிறது தமிழக அரசு: ஆறு. அழகப்பன் குற்றச்சாட்டு

இயல் இசை நாடக மன்றம் என்னும்  ஓர் அமைப்பு மட்டும் செயல்படுவதால் தவறுகள் பல நேர்கின்றன.  இயல் மன்றம், இசை மன்றம், நாடக மன்றம், நாட்டிய மன்றம், நாட்டுப்புறக் கலை மன்றம் என ௫ மன்றங்கள் ஆக மாற்றப்பட வேண்டும். திரைப்படத்தைத்தனியார் பார்த்துக் கொள்வாரக்ள். அது குறிததுக் கவலைப்பட வேண்டா. தேசிய நாடகப் ப்ளளியின் விழாவின் பொழுது பிற மாநில நாடகங்கள் மட்மே நடத்தப்பட வேண்டும் என்பது விதியாம். அப்படியானால்  இதற்கிணங்க எத்தனை  மாநிலங்களில் எத்தனைத் தமிழ் நாடகங்கள் நடத்தப் பட்டன என்ற விவரத்தை அரசு தெரிவிக்க வேண்டும். அறிஞர்அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு அவர் நாடகங்களைத்   தஞ்சாவூரில் நடத்த முயன்றபொழுது இயலாமல் போனதையும்  நினைவு கூர்கிறேன். சரியான கவலையை  அரசின் பாராட்டுதல்கள் பெற்ற ஆறு. அழகப்பன் தெரிவித்துள்ளார். உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழ் நாடகங்களை புறக்கணிக்கிறது தமிழக அரசு: 
ஆறு. அழகப்பன் குற்றச்சாட்டு


சென்னை, ஜன. 7: தமிழக அரசு தமிழ் நாடகங்களை புறக்கணிக்கிறது என்று தமிழ்ச் சுரங்கத்தின் தலைவர் ஆறு. அழகப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.  இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: "தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் நாடகங்களை முற்றிலும் கண்டு கொள்ளவில்லை. 5 நாள் நடைபெற்ற உலச் செம்மொழி மாநாட்டில் தமிழ் நாடகங்கள் நடத்த நேரமில்லை என்று தமிழக அரசு புறக்கணித்தது.  இயல், இசை, நாடகமன்றம், கலை பண்பாட்டுத்துறை முதலிய அரசு சார்ந்த நிறுவனங்கள், கண்காட்சி, சுற்றுலா நிகழ்ச்சிகளிலும் சான்றோர் விழாக்களிலும், சென்னை சங்கம விழாக்களிலும் ஒரு நாடகம் கூட நடத்திட அரசு உதவவில்லை.  தமிழரசன் தியேட்டர் நடத்திவரும் திருவள்ளுவர் நாடகம் பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின் போது நடத்தப்பட்டது. இதே போல் சென்னையில் உள்ள 15 சபாக்கள், திருச்சி, தஞ்சாவூர் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. இப்போது இதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.  ஆனால் திருவள்ளுவர் நாளன்று, திருவள்ளுவர் நாடகத்தை நடத்த கடந்த 3 ஆண்டுகளாக முயன்றும், நாடகத்தை அரங்கேற்றாமல் அரசு தள்ளுபடி செய்து வருகிறது.  புதுதில்லியில் இயங்கும் தேசிய நாடகப் பள்ளியும், தமிழ்நாடு கலைப்பண்பாட்டுத் துறையும் இணைந்து சர்வதேச நாடக விழாவை வரும் 11-ம் தேதி சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் இங்குள்ள மரபு வழி நாடகக் குழுவினருக்கு ஒரு நாடகம் கூட நடத்த வாய்ப்பு அளிக்கவில்லை. திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரே இயல், இசை, நாடக மன்றத்துக்கும் தலைவராக இருப்பதால் தமிழ் நாடகங்கள் அரங்கேற்றப்படாமல் அழிகின்றன என்ற கருத்து நிலவுகிறது.  வரும் திருவள்ளுவர் நாளன்று வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கை திருவள்ளுவர் நாடகம் நடத்த ஒரு நாள் இலவசமாக அளிக்க வேண்டும். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக முடங்கிப்போன திருவள்ளுவர் நாடகத்தை நடத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும்' என்று அந்த செய்திக்குறிப்பில் ஆறு. அழகப்பன் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக