3 திங்களில் எலலாம் சிற்பப் பயிற்சி பெற முடியாது. இவர்கள் முன்னரே ஐரோப்பியப்பாணிச்சிற்பப் பயிற்சி பெற்றவர்கள். எனவே, வெளிநாட்டுச் சிற்பிகள் என்று குறிப்பிடலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
மாமல்லபுரம் சிற்பக்கலைக் கூடத்தில் சிற்பம் செதுக்க பயிற்சி பெறும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.
செங்கல்பட்டு, ஜன 5: வெளிநாட்டு பயணிகளுக்கு மால்லபுரம் கலைப்பாணி சிற்பம் செதுக்கும் 3 மாத பயிற்சி முகாம் துவக்கவிழா மாமல்லபுரத்தில் உள்ள கரியேடிவ் சிற்பக்கலைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்வதற்காக இத்தாலி, ஜெர்மனி, ஸ்வீடன், டென்மார்க், நார்வே, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பயணிகள் 26 பேர் வந்துள்ளனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலாதலமாக விளங்கும் மாமல்லபுரம் வந்தனர்.இங்குள்ள கடற்கரைக் கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபஸ் ஆகிய பகுதிகளைச் சுற்றிப் பார்த்தவர்கள் பல்லவ கலைப் பாணியை கண்டு ரசித்ததுடன் சிற்பம் செதுக்க பயிற்சி பெற விரும்பினர். இதனையடுத்து மாமல்லபுரம் கரியேட்டிவ் சிற்பக்கலைக் கூட சிற்பக்கலைஞர் த.பாஸ்கரிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.அதன்பேரில் அவர் சுற்றுலாப்பயணிகளுக்கு பல்லவ கலைப்பாணியில் சிற்பம் செதுக்கும் பயிற்சியளிக்க ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து ஸ்வீடன் நாட்டு கலைஞர் ஸடேபனோ தலைமையில் முதல்கட்டமாக 10 பேருக்கு பயிற்சி தொடங்கப்பட்டது. மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சி.இ.சத்யா பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இப்பயிற்சி குறித்து ஸ்வீடன் நாட்டு கலைஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐரோப்பிய கலைப்பாணியில் சிற்பங்களைச் செதுக்க வெண்கலம், கிரானைட் கற்களில் ஏற்கனவே பயிற்சி பெற்றுள்ளோம். ஆனால் பல்லவ கலைப்பாணி சிற்பங்கள் வித்தியாசமாக இருப்பதால் பயிற்சி பெற வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக