ஞாயிறு, 2 ஜனவரி, 2011

birth place of first man: முதல் மனிதன் தோன்றியது எங்கே?

உலகில் மனிதன் தோன்றிய பொழுது புவி அமைப்பு இப்பொழுதுபோல் இல்லை. ஆப்பிரிக்கா முதல்  ஆசுதிரேலியா வரையிலான தமிழ்க்கண்டம்  பிளவுபடாமல் இருந்தது. அப்பகுதியில்தான் மனிதன் தோன்றினான். மையப்பகுதியான குமரிக்கடல் நிலமாக ,
 இருந்த பகுதியில் திரளான  தமிழ் மக்கள் வாழ்ந்தனர். பல்வேறு கடல்கோள்களாலும் நிலப் பெயர்ச்சிகளாலும் உலகம் சிதறியது. இதனால் மக்கள் கூட்டமும் சிதறியது. சிதறிய எண்ணிக்கைக்கேற்ப நாகரிகம் வளர்ந்தது; புதிய இனப் பெருக்கமும் ஏற்பட்டது. கடலால் பிரிக்கப்படாதிருந்த இன்றைய  இலங்கையும் தமிழ்நாடும் இணைந்த பகுதியே மக்களினம் தோன்றிய முதல் புவிப்பகுதி எனப் பல்துறை ஆராய்ச்சி அறிஞர்கள் சொல்லியிருப்பது உண்மை. ௪ இலட்சம்  ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த படிமம் இசுரேலில் கிடைத்தது எனில், அதற்கும் தொன்மையான காலத்தில் மனிதன் வாழ்ந்த பகுதி தமிழ்க்கண்டமாகும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இஸ்ரேல்:"உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான்' என, இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இதுநாள் வரையில், கடந்த இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன்முதலில் ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது.

சமீபத்தில், இஸ்ரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடல் படிவங்களை கண்டெடுத்துள்ளனர்.இதுகுறித்து டெல் அவிவ் பல்கலை விஞ்ஞானிகள் கூறியதாவது:நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்களின், உடல் படிவங்கள் "குசேம்' குகையில் கிடைத்துள்ளன. மனித பல் போன்றுள்ள இந்த படிமம் மத்திய "பிளைஸ்தோகின்' காலத்தை சேர்ந்தது.

இதை ஆய்வு செய்ததில், உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான் என தெரிய வந்துள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் இருந்து தான் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளான்.இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.ஆப்ரிக்காவில் தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும், உலகின் தாய்வீடு ஆப்ரிக்கா எனவும் கூறப்பட்டு வந்த நிலையில், இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகளின் புதிய முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்படும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக